பல மாநிலங்களை ஏமாற்றியது மழை இந்தாண்டு அரிசி உற்பத்தி 1.20 கோடி டன் குறையும்: குருணை ஏற்றுமதிக்கும் தடை

புதுடெல்லி: இந்தாண்டு காரீப் பருவத்தின் போது அரிசி உற்பத்தி ஒரு  கோடியே 20 லட்சம் டன் குறையும்,’ என்று ஒன்றிய அரசு அதிகாரி தெரிவித்தார். ஒன்றிய அரசின் உணவுத் துறை செயலாளர் சுதான்சு பாண்டே நேற்று கூறுகையில், ‘இந்தாண்டு காரீப் பருவத்தில் பல மாநிலங்களில் பருவமழை குறைவாக பெய்துள்ளதால் 38 லட்சம் ஹெக்டேர் நிலங்களில் நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 1 கோடி டன் முதல் 1 கோடியே 20 லட்சம் டன் வரை அரிசி … Read more

2025ம் ஆண்டுக்குள் இந்தியாவில் காசநோயை ஒழிக்க கூட்டு முயற்சி தேவை: ஜனாதிபதி முர்மு பேச்சு

புதுடெல்லி: இந்தியாவில் இன்னும் 2 ஆண்டுகளில் காசநோயை ஒழிக்க கூட்டு முயற்சி தேவை என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளார். பிரதமரின் காசநோயற்ற பாரதம் என்ற செயலியை தொடங்கி வைத்து பாராட்டி பேசிய ஜனாதிபதி திரவுபதி முர்மு, ‘ஒரு நலத்திட்டம் மக்கள் நலன் சார்ந்ததாக இருக்கும் பட்சத்தில் பல மடங்கு வெற்றி பெற வாய்ப்புள்ளது. நாட்டில் நோயுற்று இறப்பவர்களில் பெரும்பாலானோர் காசநோயால் இறக்கின்றனர். உலக அளவில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 25 சதவீதத்தினர் இந்தியாவில் மட்டுமே உள்ளனர். வரும் … Read more

தமிழக அரசு மேல்முறையீடு மனு ஆன்லைன் ரம்மி, சூதாட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ்: உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி தமிழக அரசு சட்டம் இயற்றியது.  இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, ‘கடந்த 5 ஆண்டுகளில் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி … Read more

பாஜ.வின் பிரபல டிக்டாக் நடிகை சோனாலி கொல்லப்பட்ட கோவா ஓட்டல் இடிப்பு

பனாஜி: பாஜ தேசிய பெண்கள் பிரிவின் துணை தலைவரும், பிரபல டிக்டாக் நடிகையுமான சோனாலி போகத், கோவாவுக்கு சுற்றுலா சென்றார். பிரபலமான அஞ்சுனா கடற்கரையில் அமைந்துள்ள கர்லீஸ் என்ற ஓட்டலில்  நடந்த போதை விருந்தில், அவர் மர்ம ரசாயன பொருள் கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த உணவகத்தின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், கர்லீஸ் ஓட்டல் ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டு உள்ளதால், அதை இடிக்கும்படி கடந்த 2016ம் ஆண்டே கோவா கடலோர மண்டல மேலாண்மை … Read more

பதவியிலிருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவர்களுக்கு புதிய பொறுப்பு வழங்கிய பாஜக

புதுடெல்லி: முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவர்களுக்கு பாஜக புதிய பொறுப்பை வழங்கியுள்ளது. விரைவில் நாடாளுமன்றத் தேர்தலும், சில மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ள நிலையில் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையாக பதவியில் இருந்து ஓரம்கட்டப்பட்ட தலைவர்களுக்கு புதிய பதவிகள் அளிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும், மாநிலங்களின் பொறுப்பாளர்களாக மூத்த தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில், பாஜகவுக்கு சவாலாக உள்ள மாநிலங்களுக்கு புதிய பொறுப்பாளர்கள் அதிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, … Read more

தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட ராணுவ வீரருக்கு தபாலில் சவுரியா சக்ரா விருது: பதக்கத்தை வாங்க மறுத்த குடும்பம்

காந்திநகர்: ஒன்றிய அரசின் ‘சவுரியா சக்ரா’ விருதை தபாலில் அனுப்பி வைத்ததால் அதை வாங்க ராணுவ வீரர் குடும்பம் மறுத்துள்ளது. குஜராத்தை சேர்ந்த கோபால் சிங் என்பவர் 5 ஆண்டுகளுக்கு முன்னாள் ஜம்முவில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். லேன்ஸ் நாயக் கோபால் சிங் பதோரொயாவுக்கு அறிவிக்கப்பட்ட சவுரியா சக்ரா விருது அவர் வீட்டுக்கு தபாலில் சென்றுள்ளது. 

சர்ச்சையான ராகுல் டீ-சர்ட் விலை ..! – பதிலடி கொடுத்த காங்கிரஸ் தொண்டர்கள்..!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கி இருக்கிறார். கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை இந்த பாத யாத்திரையை மேற்கொள்கிறார். 150 நாட்களில் 3500 கிலோ மீட்டர் தூரம் இந்த பாதயாத்திரை மேற்கொள்கிறார். இந்த சுற்றுப்பயணத்தில் ராகுல் காந்தி உடன் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் பங்கேற்கின்றனர். ராகுல் காந்தியின் இந்த பாதயாத்திரையை பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் பாஜகவினர் இன்று தங்களது டுவிட்டர் பக்கங்களில் இரண்டு புகைப்படங்களை … Read more

காற்று மாசு தடுக்க ஏற்பாடு; திருமலை-திருப்பதி இடையே எலக்ட்ரிக் பஸ் போக்குவரத்து; பிரம்மோற்சவம் முதல் இயக்கம்

திருமலை: காற்று மாசு தடுக்க திருமலை-திருப்பதி இடையே எலக்ட்ரிக் பஸ் போக்குவரத்தை பிரம்மோற்சவம் முதல் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் காற்று மாசு தடுக்க எலக்ட்ரிக் பஸ்களை அதிக அளவில் இயக்க அரசு ஏற்பாடு செய்து வருகிறது. முதற்கட்டமாக திருமலை-திருப்பதி இடையே அவற்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் பஸ்களை ஒலெக்டா என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. 9 மீட்டர் நீளம், 3 மீட்டர் அகலம், 12 அடி உயரம் கொண்ட இந்த பஸ்சில் 36 இருக்கை வசதி, … Read more

பாலியல் தொல்லை கொடுத்த அதிகாரியை அடித்து உதைத்த ஊராட்சி செயலாளர்

திருமலை: பாலியல் தொல்லை கொடுத்த அதிகாரியை பெண் ஊராட்சி செயலாளர் தனது உறவினர்களுடன் சேர்ந்து சரமாரியாக அடித்து உதைத்தார். அந்த அதிகாரி மீதான புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம் இந்துகுருபேட்டை மண்டல பரிஷத் வளர்ச்சி அலுவலராக பணியாற்றுபவர் பதான்ரபிகான்(50). இவர் தனது அலுவலகத்தில் பணியாற்றும் 28 வயதுள்ள ஊராட்சி பெண் செயலாளர் ஒருவரிடம் கடந்த சில நாட்களாக பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து அவருக்கு … Read more

டெல்லியில் 4 அடுக்குமாடி இடிந்து விழுந்து விபத்து: 5 தொழிலாளர்கள் மீட்பு

புதுடெல்லி: டெல்லியில் 4 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். பலர் சிக்கியுள்ளதால் மீட்புப் பணிகள் தொடர்கின்றன. தலைநகர் டெல்லியின் ஆசாத் மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள ஷீஷ் மஹாலில் அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை 8 மணியளவில் கட்டிடத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. நான்கு மாடி கட்டிடத்தின் இடிபாடுகளில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கியிருந்ததால், மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. தகவலறிந்த மீட்புக் குழுவினர் இடிபாடுகளில் சிக்கியிருந்த 5 தொழிலாளர்களை மீட்டனர். … Read more