டெல்லியில் 4 அடுக்குமாடி இடிந்து விழுந்து விபத்து: 5 தொழிலாளர்கள் மீட்பு
புதுடெல்லி: டெல்லியில் 4 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். பலர் சிக்கியுள்ளதால் மீட்புப் பணிகள் தொடர்கின்றன. தலைநகர் டெல்லியின் ஆசாத் மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள ஷீஷ் மஹாலில் அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை 8 மணியளவில் கட்டிடத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. நான்கு மாடி கட்டிடத்தின் இடிபாடுகளில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கியிருந்ததால், மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. தகவலறிந்த மீட்புக் குழுவினர் இடிபாடுகளில் சிக்கியிருந்த 5 தொழிலாளர்களை மீட்டனர். … Read more