நுபுர் சர்மாவின் தலை தப்பியது… கைது செய்ய கோரிய வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

டெல்லி: முகமது நபிகள் குறித்து அவதூறான கருத்துகளை கூறிய நுபுர் சர்மாவை கைது செய்யக்கோரிய மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. நபிகள் நாயகம் குறித்து தொலைக்காட்சியில் அவதூறான வகையில் சர்ச்சை கருத்துகளை பேசியதாக பாஜக செய்தித்தொடர்பாளராக இருந்த நுபர் சர்மா மீது எதிர்ப்பு கிளம்பியது. மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலரும் போராட்டம் நடத்திய நிலையில், அவர் மீது வழக்குகளும் தொடரப்பட்டன. இதனையடுத்து அவர் பாஜகவில் இருந்து … Read more

ஆன்லைன், தொலைதூர கல்வி, நேரடி கல்வி என அனைத்து முறைகளிலும் பெறும் பட்டங்களுக்கு இடையே எந்த வேறுபாடும் இல்லை: யுஜிசி விளக்கம்

டெல்லி: வழக்கமான படிப்புக்கு இணையானது ஆன்லைன் படிப்பு என யுஜிசி விளக்கம் அளித்துள்ளது. புதிய கல்வி கொள்கையின் அடிப்படையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அந்த வகையில் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில், பல்கலைக்கழக மானியக்குழு பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் ஆன்லைன் படிப்புகள் மற்றும் தொலைதூர படிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடிய வகையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாடத்திட்டம், கற்பிக்கும் முறை, பல் நுழைவு வெளியேறுதல் (Multiple Entry and Exit), விருப்பதெரிவு … Read more

காலையிலேயே குடிபோதையில் பாடம் நடத்திய ஆசிரியை – கையும் களவுமாக சிக்கிய பின்னணி!

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் உள்ள சிக்கசாரங்கி தொடக்கப்பள்ளியில், அதிகாலையில் மது அருந்திவிட்டு பள்ளியில் பணியாற்றிய பெண் ஆசிரியை ஒருவர் கையும் களவுமாக பிடிபட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் உள்ள சிக்கசாரங்கி தொடக்கப்பள்ளியில் கடந்த 25 ஆண்டுகளாக ஆசிரியை கங்கலக்ஷம்மா பணியாற்றி வருகிறார். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. மேலும் பாடம் நடத்தும் போது மது அருந்தி, மாணவர்களை அடிப்பது, சக ஊழியர்களிடம் சண்டை போடுவது … Read more

ஒற்றுமை பயணத்தில் ராகுல் அணிந்த டி-ஷர்ட்டின் விலையைக் குறிப்பிடும் பாஜக விமர்சனமும், காங். பதிலடியும்

சென்னை: இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அணிந்திருந்த டி-ஷர்ட்டின் விலையை குறிப்பிட்டு பாஜக விமர்சனம் ஒன்றை இணையவெளியில் முன்வைத்துள்ளது. அதற்கு, காங்கிரஸும் நெட்டிசன்களும் செய்த ரியாக்‌ஷன் என்ன என்பதைப் பார்ப்போம். பாஜகவின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் ஒரு போஸ்ட் ஷேர் செய்யப்பட்டது. அதில், தமிழகத்தில் நடைபயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் படம் இடதுபக்கம் இடம்பெற்றுள்ளது. அதில் அவர் வெள்ளை நிற டி-ஷர்ட் அணிந்துள்ளார். இது … Read more

பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு..! – குஜராத் அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்..!

பில்கிஸ் பானு தொடர்பான வழக்கில் குஜராத் அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்அளித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் கடந்த 2022-ம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து வன்முறை, மதக்கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தின்போது 2022 பிப். 28-ம் தேதி டோஹட் மாவட்டம் ராதிக்பூர் கிராமத்தை சேர்ந்த பில்கிஸ் பானு தனது குடும்பத்துடன் கிராமத்தை விட்டு வெளியேறி வேறு பகுதிக்கு குடும்பத்துடன் சென்றார். 21 வயதான பில்கிஸ் பானு 5 மாதம் கர்ப்பினியாக இருந்தார். அவருக்கு 3 … Read more

காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்பேனா ? ராகுல்காந்தி கூறிய பதில் என்ன?

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு பாதயாத்திரையைத் தொடங்கியுள்ளார். மொத்தம் 150 நாட்களில் அவர் 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரம் பாத யாத்திரை மேற்கொள்கிறார். புலியூர்குறிச்சியில் 3-வது நாள் பாத யாத்திரையைத் தொடங்கிய ராகுல்காந்தி, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். மேலும படிக்க | “தந்தையை இழந்தேன்.. அதற்காக என் நாட்டை இழக்க மாட்டேன்” ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை கட்சியினரிடையே ஒற்றுமை இல்லாத நிலையில், மக்களின் ஒற்றுமைக்காக நடைபயணம் தொடங்கியிருப்பது முரணாக … Read more

ஐதராபாத் பாலாப்பூர் விநாயகர் சதுர்த்தி விழா: 21 கிலோ எடை தங்க முலாம் பூசப்பட்ட லட்டு 24.60 லட்சம் ரூபாய்க்கு ஏலம்

திருமலை: தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் புகழ்பெற்ற பாலாப்பூர் விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியின்போது அதிக எடையிலான லட்டு படைக்கப்படுவது வழக்கம். இதில் தூய நெய் மற்றும் உலர்ந்த சுத்தமான பழங்களால் செய்யப்பட்ட லட்டுவின் மேல் தங்க முலாம் பூசப்பட்டு, விநாயகர் முன்பு வெள்ளி கிண்ணத்தில் வைக்கப்பட்டு தினந்தோறும் பூஜைகள் செய்யப்படும். 10வது நாள் விநாயகர் சிலை விஜர்சனம் செய்வதற்கு முன்பு லட்டுவை பொதுவெளியில் ஏலம் விடுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஏலத்தில் பங்கேற்பவர்கள் … Read more

பிள்ளையார் கோவிலுக்கு எதிர்ப்பு; பெங்களூருவில் போராட்டம் நடத்தும் மாணவர்கள் -பாஜக அரசின் முடிவு என்ன?

பெங்களூரு (கர்நாடகா): பல்கலைக்கழக வளாகத்தில் பிள்ளையார் கோவில் கட்டுமானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெங்களூரு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து, பெருநகர பெங்களூரு மாநகராட்சி சட்டவிரோதமாக இந்த பிள்ளையார் கோவிலை கட்டி வருவதாகவும், இதனால் தங்களின் படிப்புச்சூழலில் பாதிப்பு ஏற்படும் எனவும் மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அதிகாரிகள் சட்ட விரோதமாக இந்த கோவிலை கட்டி வருவதாகவும், பல்கலை., வளாகத்தில் இந்த கோவில் தேவையற்றது என போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் ஒருவர் செய்தியாளிடம் தெரிவித்தார். … Read more

ஏழை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க 52 வயதில் ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்ற தொழிலதிபர்: குஜராத்தில் நெகிழ்ச்சி

அகமதாபாத்: ஏழை மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிப்பதற்காக 52 வயதில் நீட் தேர்வில் குஜராத் தொழிலபதிபர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத் அடுத்த போடக்தேவ் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் பிரதீப் குமார் சிங் (52) என்பவர், இளநிலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் வெற்றிப் பெற்றார். இவர், 720 மதிப்பெண்களுக்கு 607 மதிப்பெண்களை 98.98 சதவீத தேர்ச்சி பெற்றார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் … Read more

உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் கல்வி – உச்சநீதிமன்றத்தில் புதிய மனு

உக்ரைனில் இருந்து வெளியேறிய மருத்துவ மாணவர்களை இந்தியாவிலேயே கல்வியை தொடர அனுமதிக்கும் வகையில் உரிய விதிமுறைகளை உருவாக்க கோரி தொடரப்பட்ட புதிய மனுக்களை ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளுடன் சேர்த்து விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் காரணமாக உக்ரைன் நாட்டில் படித்து வந்த 20 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் அங்கிருந்து வெளியேறி நாடு திரும்பினர். போர் இன்னும் நிறைவடையாத சூழலில் அவர்கள் தங்களது படிப்பினை தொடர முடியாத நிலை … Read more