நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில் இந்திய பொருளாதாரம் 13.5 சதவீதம் வளர்ச்சி.!

நடப்பு நிதி ஆண்டின் முதலாவது காலாண்டில் இந்திய பொருளாதாரம் 13 புள்ளி 5 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. வேளாண்மை, சேவை ஆகிய துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சியே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. தேசிய புள்ளியியல் அலுவலகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.  இதே காலாண்டில் சீனா வெறும் பூஜ்யம் புள்ளி 4 சதவீத பொருளாதார வளர்ச்சியையே எட்டி உள்ளது. இதன்மூலம் வேகமான பொருளாதார வளர்ச்சியை கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. முதலாவது காலாண்டில், நாட்டின் உண்மையான மொத்த உள்நாட்டு … Read more

மாவீரன் பூலித்தேவருக்கு அவரது பிறந்த நாளில் வணக்கங்களை செலுத்துகிறேன்: பிரதமர் மோடி டிவிட்

டெல்லி: மாவீரன் பூலித்தேவருக்கு அவரது பிறந்த நாளில் வணக்கங்களை செலுத்துகிறேன் என பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது வீரமும் உறுதிப்பாடும் எண்ணற்றோருக்கு ஊக்கமளித்து வருகிறது. முன்னணியில் நின்று அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டவர். மக்களுக்காக எப்போதும் தளராது பாடுபட்டவர் என பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பெண்களின் முக்கிய பிரச்சனைக்கு தீர்வு.. டெல்லியில் இன்று தடுப்பூசி அறிமுகம்!

இந்திய அளவில் 15 முதல் 44 வயது பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் முதலிடம் வகிப்பது கருப்பை வாய் புற்றுநோய். ஹூயூமன் பாப்பிலோமா வைரஸ் மூலம் ஏற்படும் இந்த தொற்று பெண்களின் உயிருக்கே ஆபத்தாக அமைகிறது. இனப்பெருக்க உறுப்புகள் மற்றும் சருமத்தின் மூலமான தொடுதல் சுகாதாரமற்ற உடலுறவு, புகைப் பிடித்தல், கர்ப்பத்தடை மாத்திரைகளை அதிக காலம் பயன்படுத்துதல் ஆகியவை இந்த வகை வைரஸ் தொற்றுக்கு ஆளாவதற்கு முக்கிய காரணாக உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதற்கான சிகிச்சை முறைக்கு அதிக … Read more

NEET 2022 – வெளியானது ஆன்சர் கீ…எப்படி சரிபார்ப்பது?

இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான NEET UG 2022 தேர்வு கடந்த ஜூலை மாதம் 17அம் தேதி நடந்தது. தேர்வு முடிவுகளானது விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 95 சதவீத மாணவ, மாணவிகள் எழுதிய நீட் தேர்வு நாடு முழுவதும் மொத்தம் 3,570 மையங்களில் நடைபெற்றது. இந்தச் சூழலில்,இந்த தேர்வுக்கான விடைக்குறிப்புகள் (ஆன்சர் கீ) வெளியிடப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள்  நீட் தேர்வின் அதிகாரப்பூர்வ விடைக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.  விடை குறிப்புகளுடன், OMR விடைத்தாள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, மாணவ, … Read more

பெண்களை பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி இன்று இந்தியாவில் அறிமுகம்

டெல்லி: பெண்களை பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஒன்றிய உயிரி தொழில்நுட்பத் துறையும், சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனமும் இணைந்து தடுப்பூசியை அறிமுகம் செய்கின்றன. தடுப்பூசியால் இனி வரும் காலத்தில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பதிப்பில் இருந்து பெண்கள் காக்கப்பட வாய்ப்புள்ளது.

கர்நாடகா: நிற்காமல் சென்ற கார்… விரட்டிப் பிடித்த போலீசார் – கட்டுக்கட்டாக சிக்கிய பணம்

கர்நாடக மாநிலத்தில் காரில் கடத்திவரப்பட்ட 85 லட்சம் ரூபாய் பணத்தை சினிமா பாணியில் உயிரை பணயம் வைத்து போலீசார் பறிமுதல் செய்தனர். கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் ஆனகல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈட்டுப்பட்டிருந்தனர் அப்போது அந்த வழியாக வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தினர் ஆனால், போலீசாரை கண்டதும் கார் நிற்காமல் சென்றதால் சந்தேகமடைந்த போலீசார் சினிமா பாணியில் உயிரை பணயம் வைத்து காரை துரத்திச் சென்றனர். இதைத் தொடர்ந்து … Read more

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி சஞ்சீவ் தனேஜா ராஜினாமா.!

குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட்டின் தலைமை நிதி அதிகாரி சஞ்சீவ் தனேஜா ராஜினாமா செய்துள்ளார் . கொரோனா தொற்று பரவலால் ஏற்கெனவே நட்டத்தை சந்தித்து வந்த ஸ்பைஸ் ஜெட், விமான எரிபொருளுக்கான விலையேற்றம் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்டவற்றால் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்நிலையில், பாதுகாப்பு குறைபாடு தொடர்பான சம்பவங்களினாலும், பொருளாதார இழப்புகளினாலும் அந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி சஞ்சீவ் தனேஜா பதவியை ராஜினாமா செய்தார். ஜூன் 30-ஆம் தேதியுடன் … Read more

புதிய மதுபான கொள்கையில் ஊழல் விசாரணையை தொடர்ந்து டெல்லியில் அரசு மது விற்பனை

டெல்லி: தமிழ்நாட்டை போலவே, டெல்லியிலும் மதுபான கடைகளை அரசே நடத்த உள்ளது. புதிய மதுபான கொள்கையில் ஊழல் நடந்துள்ளதாக சிபிஐ விசாரணை நடைபெறும் நிலையில், இன்று முதல் மாநில அரசே மது விற்பனை செய்ய உள்ளது.

ஜொமோட்டோவின் 'இன்டர்சிட்டி லெஜெண்ட்ஸ்' திட்டம் – இனி இந்தியாவின் மற்ற நகர உணவுகளையும் ஆர்டர் செய்யலாம்

சென்னை: ஜொமோட்டோ, புதிதாக ‘இன்டர்சிட்டி லெஜெண்ட்ஸ்’ (Intercity legends) என்கிற புதிய சேவையைத் தொடங்கியுள்ளது. இந்த சேவையானது நகரங்களுக்கு இடையேயான உணவு விநியோக சேவையை வழங்கவுள்ளது. அதாவது, கொல்கத்தாவின் தனித்துவ அடையாளமான ரசகுல்லாவையும், ஹைதராபாத்தின் பேமஸ் உணவான பிரியாணியையும் நீங்கள் சென்னையில் இருந்தே ஆர்டர் செய்து பெற முடியும். இந்தியாவின் பிற நகரங்களில் உள்ள பிரபலமான உணவகங்களில் இருந்து ஸ்பெஷல் உணவுகளை மற்ற நகரங்களில் இருந்து ஆர்டர் செய்ய முடியும். ஆனால், இன்று ஆர்டர் செய்தால் அதிகபட்சமாக … Read more

கடத்தல் வழக்கில் சிக்கிய அமைச்சர் கார்த்திக் குமார் திடீர் ராஜினாமா.!

பீஹாரில் கடத்தல் வழக்கில் சிக்கிய சட்ட அமைச்சர் கார்த்திக் குமார் இலாகா மாற்றப்பட்ட சிலமணி நேரங்களில் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அமைச்சர் கார்த்திக் குமார் மீது, கடத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது, அவர் பதவியில் நீடிக்க பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வந்தன. இதையடுத்து, முதல்வர் நிதிஷ் குமார் நேற்று அவரை சட்ட அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவித்து, கரும்புத் துறைக்கு மாற்றினார்.தனது இலாகா மாற்றிய சில மணி நேரங்களில் … Read more