உலகிலேயே, இந்தியாவில் தான் பெண் விமானிகள் அதிகம் – மத்திய அரசு

உலகிலேயே இந்தியாவில் தான் பெண் விமானிகள் அதிகம் பேர் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் மொத்த விமானிகளில் பெண்கள் 15 சதவீதம் உள்ளனர். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்த சதவீதம் அதிகமாக உள்ளது. இந்தியாவிற்கு அடுத்தபடியாக அயர்லாந்தில் 10 சதவீதம் பெண் விமானிகளும், தென் ஆப்ரிக்காவில் 9.8 சதவீதம் பெண் விமானிகளும் உள்ளனர். கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு விமான சேவைகள் தொடங்கப்பட்டது, 2025 ஆம் ஆண்டிற்குள் 220 புதிய விமான நிலையங்களை திறக்க மத்திய அரசு … Read more

சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்

புதுடெல்லி: ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழக்கமிட்ட ‘படாங்’ மைதானம், சிங்கப்பூரின் பாரம்பரிய நினைவு சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் நேற்று தனது 57வது தேசிய தினத்தை கொண்டாடியது. 1943ம் ஆண்டு இந்த மைதானத்தில் இருந்துதான் ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் முழங்கினார். பல்வேறு பெருமைகளை கொண்ட இந்த படாங் மைதானத்தை, சிங்கப்பூர் தனது 57வது தேசிய தினத்தில் 75வது தேசிய பாரம்பரிய நினைவு சின்னமாக அறிவித்துள்ளது. இது குறித்து அந்நாட்டு தேசிய பாரம்பரிய … Read more

4 நாட்களுக்கு முன்பாகவே நாடாளுமன்ற தொடர் முடிக்கப்பட்டது ஏன்? ஒன்றிய அமைச்சர் விளக்கம்

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 18ம் தேதி தொடங்கி வரும் 12ம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 4 நாட்கள் முன்னதாக நேற்று முன்தினத்துடன் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. இது குறித்து நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகாலாத் ஜோஷி நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘மழைக்கால கூட்டத் தொடரை 4 நாள் முன்கூட்டியே முடிக்கவில்லை. 2 நாள் விடுமுறையுடன் சேர்த்து, 2 நாள் மட்டுமே முன்கூட்டி … Read more

கேரளாவில் குரங்கு அம்மை அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் இருந்து மாயம்..!

கேரளாவில் குரங்கு அம்மை நோய் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர், மருத்துவமனையில் இருந்து மாயமான நிலையில், அவரை ஆளுவா போலீசார் தேடி வருகின்றனர். அமீரகத்தில் தங்கியிருந்த உத்திரபிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய நபர், குற்ற வழக்கு காரணமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டு விமானம் மூலம் கொச்சி விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குரங்கு அம்மை அறிகுறிகள் இருந்ததால் ஆளுவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. அதில் அவருக்கு சாதாரண அம்மை பாதிப்பு இருப்பது … Read more

ஒன்றரை மாத இழுபறிக்குப் பிறகு மகாராஷ்டிராவில் 18 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு: பெண்களுக்கு வாய்ப்பு தரவில்லை

மும்பை: மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு அமைந்து 40 நாட்களுக்கு மேலான நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் நேற்று செய்யப்பட்டது. 18 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி ஆட்சியை கவிழ்த்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ.க்கள், பாஜ.வுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளனர். ஷிண்டே முதல்வராகவும், பாஜ.வை சேர்ந்த தேவேந்திர பட்நவிஸ் துணை முதல்வராகவும் இருக்கின்றனர். இவர்கள் பதவியேற்று 40 நாட்கள் கடந்த நிலையிலும், அமைச்சர்களை நியமிப்பதில் இழுபறி … Read more

கேரளாவில் கனமழை; 26 அணைகள் திறப்பு

திருவனந்தபுரம்: கேரளா  முழுவதும் ஒரு மாதத்திற்கு மேலாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.  இதனால், முல்லைப் பெரியாறு, இடுக்கி, மலம்புழா, தென்மலை உள்பட அனைத்து  அணைகளும் அதன் கொள்ளளவை நெருங்கின. இதைத் தொடர்ந்து, படிப்படியாக ஒவ்வொரு  அணைகளாக திறக்கப்பட்டன. முல்லைப் பெரியாறு, இடுக்கி அணைகளின் அனைத்து  மதகுகளும் திறக்கப்பட்டுள்ளன.மலம்புழா, தென்மலை, பொன்முடி,  கல்லார் உள்பட 26 அணைகள் இதுவரை திறக்கப்பட்டு உள்ளன. இதனால், பெரும்பாலான  ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர  பகுதியில் வசிக்கும் மக்கள் உஷார்படுத்தப்பட்டு … Read more

இளம்பெண் தாக்கிய சர்ச்சை; தலைமறைவான பாஜ நிர்வாகி தியாகி கைது

நொய்டா: உத்தரப் பிரதேசத்தில் இளம்பெண்ணை தாக்கிவிட்டு தலைமறைவான பாஜ நிர்வாகி காந்த் தியாகியை போலீசார் கைது செய்துள்ளனர்.  உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டா பகுதியை சேர்ந்தவர் பாஜ நிர்வாகி காந்த் தியாகி தியாகி. கடந்த வெள்ளியன்று தனது குடியிருப்பில் வசிக்கும் இளம்பெண்ணுக்கும் இவருக்கும் செடிகள் வளர்ப்பது, சட்ட விரோதமாக கட்டப்பட்ட கட்டிடம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த பெண்ணை காந்த் தியாகி தள்ளி விட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை … Read more

ஒரே பாலின ஜோடி தத்தெடுப்பது எப்படி? நாடாளுமன்ற குழு புதிய பரிந்துரை

புதுடெல்லி: ஒரே பாலி தம்பதியினர் குழந்தையை தத்தெடுப்பது தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு புதிய பரிந்துரை தந்துள்ளது. இந்தியாவில் ஓரினச் சேர்க்கை குற்றமல்ல என கடந்த 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனாலும், ஒரே பாலின திருமணங்கள் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. இந்நிலையில், சட்டம் மற்றும் பணியாளர் நலத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்பு சட்டம் மற்றும் சிறார் நீதிச் சட்டத்தை ஒருங்கிணைந்து அனைத்து மதங்கள் மற்றும் ஆண், பெண் ஓரினச் சேர்க்கையாளர்கள் (எல்ஜிபிடிக்யூ) … Read more

பிஹார் மக்களுக்கு நிதிஷ் துரோகம்: கூட்டணி முறிவு குறித்து பாஜக கருத்து

பாட்னா: “தற்போது பிஹாரில் நடந்துள்ளது மக்களுக்கும், பாஜகவுக்கும் இழைக்கப்பட்ட துரோகம்” என்று நிதிஷ் கூட்டணியை முறித்துக் கொண்டது குறித்து அம்மாநில பாஜக கருத்து தெரிவித்துள்ளது. பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணியை முறித்துள்ள நிலையில், அது குறித்து முதல்முறையாக பாஜக கருத்து தெரிவித்துள்ளது. அம்மாநில பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் கூறுகையில், “கடந்த 2020ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளமும், பாஜகவும் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியின் கீழ் போட்டியிட்டது. அந்தத் … Read more

மத்திய பிரதேசத்தில் சாமியார் கைது..! – பெண்ணை சீரழித்தாரா மிர்ச்சி பாபா..?

குழந்தை பாக்கியம் வேண்டி சென்ற பெண்ணை சீரழித்ததாக மிர்ச்சி பாபா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பாலியல் புகாரில் சாமியார் மிர்ச்சி பாபா கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் வழக்கில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.மத்திய பிரதேச மாநிலம் போபால் மகளிர் போலீசார் அவரை கைது செய்துள்ளனர் . வைராக்கிய ஆனந்த் கிரி என்பவர் தான் சாமியார் மிர்ச்சி பாபா என்று அழைக்கப்படுகிறார் . இவரிடம் ஒரு பெண் தனக்கு குழந்தை இல்லை என்றும், குழந்தை வரம் … Read more