Delhi MLAs: ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களை காணவில்லை! மாயமான டெல்லி எம்எல்ஏக்கள்

Absconding AAP MLAs: டெல்லி  மாநிலத்தின் ஆம் ஆத்மி  கட்சியின் எம்எல்ஏக்களை “கவர” பாரதிய ஜனதா கட்சி மேற்கொண்டதாகக் கூறப்படும் முயற்சிகள் விவாதப் பொருளாகியுள்ளது. பாஜகவின் இந்த முயற்சி குறித்து விவாதிக்க ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் கூடினார்கள்.மொத்தம் 62 எம்எல்ஏக்களை கொண்ட ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களில் 53  பேர் இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர். மீதமுள்ள 9 எம்எல்ஏக்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது.  … Read more

பணமோசடி தடுப்பு சட்டம்: ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ்

டெல்லி: பணமோசடி தடுப்பு சட்டம் செல்லும் என்ற தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக்கோரிய வழக்கில் ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு உத்தரவிட்டது.

'ரூ.30,000 கொடுத்து என்னை ராணுவம் தாக்குதலுக்கு அனுப்பியது' – காஷ்மீர் எல்லையில் கைதான பாக்., தீவிரவாதி வாக்குமூலம்

காஷ்மீரில் 72 மணி நேரத்தில் மூன்று ஊடுருவல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன, தீவிரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டார். கைதான தீவிரவாதி தன்னை தாக்குதலுக்கு அனுப்பியவர் பாகிஸ்தான் ராணுவ உயரதிகாரி என்று தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலம் பல்லன்வாலா பகுதியில் அக்னூர் செக்டாரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டருகே ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது. இது தொடர்பாக ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் கடந்த 72 மணி நேரத்தில் மூன்று ஊடுருவல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. முன்னதாக செவ்வாய்க் கிழமை காலையில் எல்லையில் ஊடுருவ முயன்ற இரண்டு … Read more

ஜம்மு – காஷ்மீரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: பொதுமக்கள் அச்சம்!

ஜம்மு – காஷ்மீரில் நேற்றிரவு சுமார் 11.59 மணியளவில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இவை ரிக்டர் அளவுகோலில் முறையே 4.1, 3.2 என பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் எவ்வித உயிர் சேதமோ பொருட் சேதமோ ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜம்மு பகுதியில் உள்ள கத்ரா பகுதியில் இருந்து வடகிழக்கே 62 கிலோமீட்டர் தொலைவில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, கடந்த செவ்வாய்கிழமை ஜம்மு-காஷ்மீரில் அடுத்தடுத்து ஆறு நிலநடுக்கங்கள் … Read more

NSP Portal: மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

புதுடெல்லி: நடப்பு கல்வியாண்டில் உயர்கல்வி சேர்ந்துள்ள மாணவர்கள் மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. எதிர்வரும் அக்டோபர் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  https://t.co/8JYWQDfGfj என்ற தேசிய ஸ்காலர்ஷிப்கள் போர்ட்டல் இணையதளத்தில் இந்த உதவித்தொகையை பெறும் தகுதி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். தேசிய ஸ்காலர்ஷிப்கள் போர்ட்டல் என்பது மாணவர் விண்ணப்பம், விண்ணப்ப ரசீது, செயலாக்கம், அனுமதி மற்றும் மாணவர்களுக்கு பல்வேறு உதவித்தொகைகளை வழங்குதல் என … Read more

பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது உண்மைதான்: உச்சநீதிமன்றத்தில் இந்து மல்கோத்ரா தலைமையிலான குழு அறிக்கை தாக்கல்..!

டெல்லி: பஞ்சாப்பில் ஜனவரி 5ம் தேதி பிரதமர் மோடி பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் கடந்த ஜனவரி 5ல் நாட்களுக்கு முன் நடைபெறவிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பதிண்டா விமான நிலையத்தில் இருந்து பிரதமர் மோடி காரில் சென்றார். அப்போது பயண வழியில் போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், அவரால் பயணத்தைத் தொடர முடியவில்லை. நிகழ்ச்சியில் பங்கேற்காமல் அவர் ெடல்லி திரும்பினார். பிரதமரின் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாடு … Read more

வாட்ஸ்அப்பில் வந்த லிங்கை கிளிக் செய்து ரூ.21 லட்சத்தை பறிகொடுத்த ஆசிரியை!

ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவர் வாட்ஸ்அப்பில் வந்த லிங்கை கிளிக் செய்து, ரூ.21 லட்சத்தைப் பறிகொடுத்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த சில வருடங்களாக ஆன்லைன் மூலமாக நடைபெறும் பணமோசடிகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மக்கள் எல்லாவற்றுக்கும் இணையத்தையே நம்பியிருந்தனர். இதைப் பயன்படுத்தி பெரும்பாலான மோசடியாளர்கள் மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப் மூலம் சாதாரணர்களை குறிவைத்து வலை விரித்து அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை வாரிச் … Read more

திப்பு சுல்தான் ஒரு 'முஸ்லிம் குண்டர்': கர்நாடக அமைச்சர் பேச்சால் சர்ச்சை

கர்நாடக அமைச்சர் கே.எஸ் ஈஸ்வரப்பா காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். அதில் அவர், தனது நாக்கை துண்டிப்பதாக சிலர் மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த சுதந்திர தினத்தின் போது கர்நாடக அரசு வைத்த பேனரில் விடி சவர்கர் படங்கள் இடம்பெற்றிருந்தன. முன்னாள் பிரதமர் நேருவின் படம் நீக்கப்பட்டு, சாவர்க்கரின் படம் இடம் பெற்றதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. அதேபோல் திப்பு சுல்தான் ஆதரவாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் பாஜக சார்பில் 23‍-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை … Read more

பஞ்சாப்பில் பிரதமர் மோடி பாதுகாப்பில் குறைபாடு: உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

டெல்லி: பஞ்சாப்பில் ஜனவரி 5ம் தேதி பிரதமர் மோடி பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஜனவரி 5ல் மோசமான வானிலையால் பிரதமர் ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்த்து விட்டு சாலை மார்க்கமாக சென்றார். பயணத்தின் போது சில போராட்டக்காரர்கள் மறியலில் ஈடுபட்டதால் அவர் 20 நிமிடம் காரிலேயே காத்திருக்க நேர்ந்தது.

உத்தரகாண்ட் மாநில அரசுப் பணியில் பெண்களுக்கான 30% சிறப்பு ஒதுக்கீட்டிற்கு தடை – நீதிமன்றம்

உத்தரகாண்ட் மாநில அரசுப் பணிகளில் அம்மாநிலத்தில் வசிக்கும் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் 2006ஆம் ஆண்டு உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. உத்தரகாண்ட் மாநில அரசுப் பணிகளில் அம்மாநிலத்தில் வசிக்கும் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் முடிவு ஜூலை 24, 2006 அன்று அரசாணையாக வெளியிடப்பட்டு தற்போது வரை அமலில் இருக்கிறது. இந்நிலையில் ஏப்ரல் 3 ஆம் தேதி நடைபெற்ற உத்தரகாண்ட் மாநில குடிமைப் பணித் தேர்வின் முதற்கட்டத் … Read more