தமிழகத்துக்கு காவிரியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு 24,819 ஆக உயர்வு

பெங்களூரு: கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு 4 ஆயிரத்திலிருந்து 24,819 ஆக அதிகரித்துள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 19,902 கனஅடி நீரும், கபினி அணையில் இருந்து 4,917 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது.

திருமணத்தை மீறிய உறவு – 48 வயது பெண்ணுடன் காதல்; கொலையான 17 வயது மகள்!

டெல்லியில் 48 வயது நிரம்பிய பெண் மீது கொண்ட காதலுக்கு தடையாக இருந்த அவரது 17 வயது மகளை 18 வயது நிரம்பிய இளைஞன் ஒருவன் கழுத்தை அறுத்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. டெல்லியில் திக்ரி எல்லைப் பகுதியில் வசித்து வந்த 18 வயது இளைஞன் ஹரிஷ், பஹதுர்கரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணியாற்றி வந்தான். அப்போது அதே தொழிற்சாலையில் பணிபுரியும் 48 வயது நிரம்பிய பெண் ஒருவரை ஹரிஷ் காதலிக்க துவங்கியுள்ளான். அந்த … Read more

ஆந்திராவில் ஏரியில் விழுந்து 3 பேர் உயிரிழப்பு

கடப்பா: ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், பொதுட்டூரை சேர்ந்த பாலசேகர் (17), சஞ்சீவ் குமார் (16), கோபால தாஸ் (18) ஆகிய மூவரும் நண்பர்கள். இவர்கள் நேற்று முன் தினம் புலிவேந்துலா அருகே உள்ள நாமல குண்டா எனும் ஏரியில் குளிக்க சென்றனர். ஆனால் மூவருக்கும் நீச்சல் தெரியாத காரணத்தால் ஏரியின் சகதியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து புலிவேந்துலா ஏரியில் 3 வாலிபர்கள் சடலமாக கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 10,725 பேருக்கு கொரோனா… 36 பேர் பலி : ஒன்றிய சுகாதாரத்துறை ரிப்போர்ட்!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது.இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: * புதிதாக 10,725 பேர் பாதித்துள்ளனர். * இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,43,78,920ஆக உயர்ந்தது. * புதிதாக 36 பேர் இறந்துள்ளனர். * இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை … Read more

யாருடைய தலையீடும் இல்லாமல் முழு சுதந்திரத்துடன் வாழ்கிறோம் – நீதிமன்றத்தால் சேர்ந்து வாழும் தன்பாலின இளம் பெண்கள்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலுவா பகுதியைச் சேர்ந்தவர் ஆதிலா நஸ்ரின், இவரது தோழி பாத்திமா நூரா. இவர்கள் இருவரது பெற்றோரும் வளைகுடா நாட்டில் வேலை செய்தனர். அப்போது தோழிகள் இருவருக்குள்ளும் தன்பாலின சேர்க்கை ஏற்பட்டது. இதை அறிந்து பாத்திமா நூராவை பெற்றோர் கேரளாவுக்கு அனுப்பினர். ஆனால் அவரைத் தேடி, கேரளாவுக்கே வந்து விட்டார் ஆதிலா நஸ்ரின். ஒரு கட்டத்தில் இருவரும் சேர்ந்து கடந்த மே 19-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறினர். உறவினர்கள் தேடி பாத்திமா நூராவை … Read more

சொத்துக்காக பெற்ற தாயை தாக்கி கடத்திச்சென்ற மகன் கைது.!

ஆந்திர மாநிலத்தில் சொத்துக்காக பெற்ற தாயை கடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லூர் அடுத்த காவலி பகுதியை சேர்ந்த கோட்டேஸ்வரராவ் தனது தாய் மகாலட்சுமி பெயரில் உள்ள வீட்டை தன் பெயருக்கு எழுதி வைக்குமாறு அடிக்கடி சண்டையிட்டு தனது தாயை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மகாலட்சுமி தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். தனது சகோதரி வீட்டிற்கு சென்ற அவர் தனது தாயை அடித்து அங்கிருந்து கடத்தி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகின. புகாரின் பேரில் மகாலட்சுமியை மீட்ட போலீசார் … Read more

கர்நாடகாவில் சாலை விபத்தில் 9 பேர் உயிரிழப்பு

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் துமகுரு மாவட்டம் சிரா அருகே லாரி மீது ஜீப் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயம் அடைந்தனர். விபத்து குறித்து மாவட்ட எஸ்.பி. ராகுல் குமார் ஷாபூர்வாட் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

என்டிடிவி பங்குகளை அதானி கையகப்படுத்தியதில் மர்மம் – காங்கிரஸ் கட்சி விமர்சனம்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: பிரதமரின் நீண்ட கால நண்பர் அதானி முறைகேடாக குறுக்கு வழியில் பிரபல ஊடக நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது பொருளாதார, அரசியல் அதிகார குவிப்பு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. சுதந்திரமான ஒரு ஊடகத்தை கட்டுப்படுத்தி ஒடுக்குவதற்கான வெட்கக்கேடான நடவடிக்கையைத் தவிர இது வேறொன்றுமில்லை. மர்மமான விஷயம் இதில் மர்மமான விஷயம் என்னவென்றால், ஒருவர் கொடுத்த கடனை மற்ற அந்த இரண்டு உறுப்பினர்களும் எப்படி ஆயுதமாக … Read more

வயதுக்கு வந்த சிறுமியின் திருமணத்திற்கு பெற்றோர் அனுமதி தேவையில்லை – நீதிமன்றம் தீர்ப்பு!

முஸ்லிம் மதத்தை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த மார்ச் மாதம் அதே மதத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த திருமணம் இஸ்லாமிய மத முறைப்படி நடந்துள்ளது. திருமணத்திற்கு பின்னர் அந்த இளைஞரும், சிறுமியும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து தனது மகளை திருமணம் செய்துகொண்ட இளைஞர் மீது சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய … Read more

பண மோசடி தடுப்பு சட்டம் தீர்ப்பு – இன்று பரிசீலனை

டெல்லி: பணமோசடி தடுப்பு சட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு இன்று மறுபரிசீலனை செய்யப்படுகிறது. தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு விசாரிக்க உள்ளது.