போலீசை சிறைபிடித்த பாஜ பிரமுகர் மீது வழக்கு

பதோகி: உத்தர பிரதேசத்தின் பதோகியில் உள்ள நை பஜார் பகுதியை சேர்ந்த தீபக் சோன்கர் போலீசாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் இவரை கைது செய்து கோட்வாலி சிறையிலடைத்தனர். இவரது உறவினரான தினா சோன்கர் நகர பஞ்சாயத்து வார்டு உறுப்பினராக உள்ளார். காவல் நிலையத்துக்குள் தனது அடியாட்களுடன் நுழைந்த அவர் அங்கிருந்த காவலர்கள் 4 பேரையும் அருகில் காலியாக இருந்த கடைக்குள் வைத்து பூட்டினார். பின்னர், தனது உறவினர் தீபக்கை அழைத்து கொண்டு சென்று விட்டார். தகவல் … Read more

`இந்தியாவில் குணமடையுங்கள்’மருத்துவ சுற்றுலா தகவல்தளம் ஆக.15ல் தொடங்க ஒன்றிய அரசு திட்டம்

புதுடெல்லி: மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்த `இந்தியாவில் குணமடையுங்கள்’என்ற இணையத் தகவல் தளத்தை சுதந்திர தினத்தன்று தொடங்க ஒன்றிய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் மருத்துவ சிகிச்சைக்கான செலவு 65 முதல் 90 சதவீதம் வரை குறைவாக உள்ளது. இதனால், ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள் உள்பட உலகம் முழுவதும் 44 நாடுகளில் இருந்து இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கேரளாவில் உள்ள கொச்சி … Read more

பக்தர்கள் வருகை குறைந்தது அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்

ஜம்மு: நாட்டின் மிகவும் பிரபலமான அமர்நாத் புனித யாத்திரை, ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான சிவ பக்தர்களால் மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டுக்கான யாத்திரை கடந்த  ஜூன் 30ம் தேதி தொடங்கி  ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மொத்தம் 3880 மீட்டர் உயரத்தில் இருக்கும் கோவிலுக்கு தினமும்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்றனர். இதுவரை 3 லட்சம் பேர் புனித யாத்திரை சென்றுள்ளனர். ஆனால், கடந்த சில நாட்களாக பக்தர்கள் வராததால் ஜம்முவில் உள்ள பகவதி நகர் … Read more

விமானத்தில் இருந்து இறங்கி ஓடுபாதையில் நடந்து சென்ற பயணிகள்; பேருந்து வர தாமதம்

புதுடெல்லி: டெல்லி விமான நிலையத்தில் பேருந்துக்காக 45 நிமிடங்கள் காத்திருந்த தனியார் விமான நிறுவன பயணிகள் விமான ஓடுபாதையில் நடந்து சென்றனர். இது குறித்த விசாரணைக்கு டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஒரு மாதமாக தனியார் விமான நிறுவனங்களின் சேவை பல்வேறு குறைபாடுகளால் பிரச்னைக்கு உள்ளாகி வருகிறது. இந்நிலையில், ஐதராபாத்தில் இருந்து டெல்லி வந்த தனியார் விமானப் பயணிகள் தங்களை இறங்கும் முனையத்துக்கு ஏற்றி செல்லும் விமான நிறுவனத்தின் பேருந்துக்காக 45 நிமிடங்கள் காத்திருந்தனர். பேருந்து வராமல் போகவே, … Read more

பிரிட்டிஷை எதிர்க்க கட்டைவிரல்களை களப்பலி ஆக்கினார்களா கைத்தறி நெசவாளர்கள்? வரலாற்று பதிவு

பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே சூரத், பனாரஸ், காஞ்சிபுரம் உள்ளிட்ட இந்திய நகரங்கள் நெசவுக்கு பெயர் போனவை. இங்கு நெய்யப்பட்ட பட்டு சேலைகள், துணிரகங்கள் பல வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன. அப்போது இவை கைத்தறிகளால் நெய்யப்பட்டன. இதை சிறப்பிக்கும் விதமாக ஆகஸ்ட் 7 ஆம் தேதியான இன்று கைத்தறி நெசவாளர்கள் தினம் கொண்டாடப்படும் வேளையில், நம் உள்நாட்டு கைத்தறி நெசவாளர்கள் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சோக நிகழ்வை இத்தொகுப்பில் நினைவு கூறலாம். பிரிட்டிஷ் ஆட்சியில் அறிமுகமான ஜவுளி; நலிவடைந்த … Read more

நிதி ஆயோக்கில் மோடி வலியுறுத்தல் விவசாயத்தை நவீனமாக்குங்கள்

புதுடெல்லி: டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, விவசாய துறையை நவீனமாக்க வேண்டுமென வலியுறுத்தினார். ஒன்றிய அரசின் திட்டங்கள், கொள்கைகளை இறுதி செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் நிதி ஆயோக் கூட்டம் நடத்தப்படும். கடந்த 2 ஆண்டுகள் கொரோனா பாதிப்பு காரணமாக இக்கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்தப்பட்டது. இந்நிலையில், நிதி ஆயோக்கின் 7வது கவுன்சில் கூட்டம் டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் உள்ள கலாச்சார மையத்தில் நேற்று நேரடியாக நடந்தது. இதில், பிரதமர் மோடி, … Read more

அமெரிக்க பல்கலை. படிக்க ரூ.1 கோடி கல்வி உதவித்தொகை பெற்ற ஹைதராபாத் மாணவர்!

நோபல் பரிசு வென்ற ஏராளமான சாதனையாளர்களை உருவாக்கிய அமெரிக்க பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பு பயில்வதற்கு ஹைதராபாத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் ரூ.1.3 கோடி கல்வி உதவித்தொகை பெற்றுள்ளார். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த வேதாந்த் ஆனந்த்வாடே (18 ) என்ற மாணவர், அமெரிக்காவில் உள்ள கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பு பயில்வதற்கு ரூ.1.3 கோடி கல்வி உதவித்தொகை பெற்றுள்ளார். நோபல் பரிசு வென்ற 16 சாதனையாளர்களை உருவாக்கிய பெருமை இந்த பல்கலைக்கழகத்திற்கு உண்டு. கேஸ் … Read more

மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்களிடம் உல்லாசம்: போலி தங்க வியாபாரி கைது

திருமலை: ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் செவூரிசந்திரா (30). இவர், சில ஆண்டுகள் கூடூர் மற்றும் திருப்பதியில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்தார். திருப்பதியில் பணிபுரியும்போது பஸ் நிலையத்தை சுற்றியுள்ள வீடுகளில் தனியாக வசிக்கும் பெண்களிடம் ஆதரவாக பேசுவாராம். தான் மிகவும் வசதியானவன்,  தங்க நகை வியாபாரம் செய்வதாக ஆசைவார்த்தைகளை கூறுவாராம். இதில் மயங்கும் பெண்களிடம் உல்லாசமாக இருப்பாராம். சில பெண்களை ஓட்டலுக்கு அழைத்துச் சென்று தூக்க மாத்திரைகளை கொடுத்து உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது … Read more

கியூட் (CUET) தேர்வு எப்போது நடைபெறும்..? – தேதி அறிவிப்பு எப்போது..?

இளநிலை பட்டப் படிப்புக்கான கியூட் (CUET) தேர்வு, தேசிய தேர்வுகள் முகமை மூலம் கணினி வழியில் தமிழ், இந்தி உட்பட 13 மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்தது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த ஏப்.7-ம் தேதி தொடங்கி மே 31-ம்தேதியுடன் நிறைவு பெற்றது. நாடு முழுவதும் 500 நகரங்கள் மற்றும் இந்தியாவின் வெளியில் உள்ள நகரங்கள் என 2 கட்டங்களாக கியூட் தேர்வு நடத்தப்பட உள்ளது. நடப்பு கல்வி ஆண்டிற்கான கியூட் … Read more

நடப்பாண்டு ஜூலை 15ம் தேதி வரைடெல்லியில் 1,100 பெண்கள் பலாத்காரம்: தலைநகரில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி

புதுடெல்லி: நடப்பாண்டு ஜூலை 15ம் தேதி வரை டெல்லியில் 1,100 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கும் நிலையில், தேசிய தலைநகரில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. தேசிய தலைநகர் டெல்லியில் பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த மே 18ம் தேதி 13 வயது சிறுமி ஒருவர் 8  பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதேபோன்ற பல சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. டெல்லியில் பெண்களுக்கு எதிரான … Read more