எல்லையில் ஊடுருவ முயன்ற 2 பாகிஸ்தான் தீவிரவாதிகள் குண்டுவெடிப்பில் சிக்கி பலி!

பாகிஸ்தானை ஒட்டிய எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் ஊடுருவ முயன்ற இரண்டு தீவிரவாதிகள் கண்ணிவெடியை மிதித்ததால் உடல் சிதறி உயிரிழந்த காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. இருளை பயன்படுத்தி ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் கண்ணி வெடியை மிதித்ததால் வெடித்து சிதறும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளன. அந்த 2 தீவிரவாதிகளின் உடல்கள் இன்று கைப்பற்றப்பட்டதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Source link

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு 2வது முறையாக கொரோனா

மும்பை: பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அவர் வீட்டுத் தனிமையில் உள்ளார்.  பிரபல பாலிவுட் அமிதாப் பச்சன் நேற்றிரவு வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘எனக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் எனக்கு கோவிட் பாசிடிவ் ரிசல்ட் வந்தது. அதனால், என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமிதாப் பச்சன் தற்போது மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டுத் தனிமையில் உள்ளார். … Read more

திருநங்கைகள் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனைகள்.. விவரத்தை வெளியிட்ட மத்திய அமைச்சர்

திருநங்கைகளுக்கு சுகாதார திட்டம் வழங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் கையெழுத்தானது; திருநங்கைகள் அறுவைசிகிச்சை செய்ய எதிர்காலத்தில் இரண்டு மருத்துவமனைகளில் புதிய வசதிகள் உருவாக்கப்படும் என மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். மூன்றாம் பாலினத்தவர்களுக்கான ஒருங்கிணைந்த சுகாதாரத்திட்டத்தை வழங்குவது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையும், தேசிய சுகாதார ஆணையமும் இன்று கையெழுத்திட்டன. புதுடெல்லி டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தின் நாளந்தா கலையரங்கில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் … Read more

சபாநாயகர் ராஜினாமா, ஆர்ஜேடி பிரமுகர்கள் வீட்டில் சிபிஐ ரெய்டு: பிஹார் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன் பரபரப்பு

பாட்னா: பிஹாரில் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி எம்.பி.க்கள் வீடுகளில் இன்று காலை தொடங்கி சிபிஐ அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர். தலைநகர் பாட்னாவில் உள்ள சுனில் சிங், சுபோத் ராய், டாக்டர் ஃபயாஸ் அகமது மற்றும் அஷ்ஃபக் கரீம் ஆகியோரின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபோது ரயில்வே பணி நியமனத்தில் ஊழல் நடந்ததாகக் கூறி இந்த ரெய்டு நடைபெற்று வருகிறது. மாறிய கூட்டணி: கடந்த … Read more

இந்தியாவில் டோல் கேட்டுகளை அகற்ற திட்டம்: ஆனால் இப்படி ஒரு ட்விஸ்ட்!

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு, வாகனங்களில் பொருத்தப்படும் தானியங்கி நம்பர் பிளேட்கள் மூலம் பணம் வசூலிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், அதற்கான சட்டத் திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சுங்கச்சாவடிகள் இல்லையென்றால் எப்படி? நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களில் இருந்து எப்படி பணம் வசூலிக்கப்படும்? ஃபாஸ்டேக்குகளுக்கு என்ன நடக்கும்? நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய … Read more

பீகார் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் அரசு வெற்றி..

பீகார்: பீகார் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் நிதிஷ்குமார் அரசு வெற்றி பெற்றது. பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்தார்.

சர்ச்சைக்குரிய வகையில் கருத்து | தெலங்கானா பாஜக எம்எல்ஏ இடைநீக்கம்

ஹைதராபாத்: சர்ச்சை பேச்சு காரணமாக கைது செய்யப்பட்டுள்ள தெலங்கானா பாஜக எம்.எல்.ஏ. ராஜாசிங்கை, பாஜக மேலிடம் நேற்று சஸ்பெண்ட் செய்தது. அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சஞ்சல் கூடா சிறையில் அடைக்கப்பட்டார். ஹைதராபாத் கோஷாமஹால் தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ ராஜாசிங் (45). நபிகள் நாயகம் மீது அவதூறு பேசியதாக, இவர் நேற்று அதிகாலையில் ஹைதராபாத் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். முன்னதாக, காமெடி மேடை பேச்சாளரான முனாவர் ஃபாருக்கி என்பவர், ஒரு நிகழ்ச்சியின்போது, ராமர் மற்றும் சீதையை தரக்குறைவாக பேசியுள்ளார். … Read more

டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்குப்பதிவு..!

மதுபானக் கடை உரிமம் தொடர்பான குற்றச்சாட்டில் டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்குப்பதிவு செய்துள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கலால் துறையை கவனித்து வருகிறார். மதுபானங்களை விற்க தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டதிலும், விற்பனை உரிமம் வழங்கப்பட்டதிலும் முறைகேடு நடைபெற்றதாக சி.பி.ஐ.அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டு டெல்லியில் உள்ள மணீஷ் சிசோடியாவின் வீடு உட்பட அனைத்து இடங்களில் சோதனை நடத்தினர். இதையடுத்து, அமலாக்கத்துறையினர் மணீஷ் சிசோடியா … Read more

கோவா ஓட்டலில் இறந்த பாஜக நடிகையின் மரணத்தில் மர்மம்? போலீஸ் வழக்கு பதிவு; சிபிஐ விசாரணைக்கு காங். கோரிக்கை

சண்டிகர்: கோவா ஓட்டலில் இறந்த பாஜக நடிகை சோனாலி போகத் மரணத்தில் மர்மம் இருப்பதால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. பாஜக மகளிரணி துணைத் தலைவரும், நடிகையுமான சோனாலி போகத் (42), கோவாவில் உள்ள ஓட்டலில் தனது நண்பர்களுடன் தங்கியிருந்தார். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அஞ்சுனாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று … Read more

கல்யாணத்தை நிறுத்த அமெரிக்க மாப்பிள்ளை போட்ட நாடகம்.. அம்பலமானது எப்படி?

தனக்கு நடக்க இருந்த திருமணத்தை நிறுத்த மணமகன் போட்ட நாடகம் கடைசியில் அம்பலமானது பெண் மற்றும் மாப்பிள்ளை வீட்டாரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தெலங்கானாவின் ஹனம்கொண்டா பகுதியைச் சேர்ந்தவர் அன்வேஷ். இவர் அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக இருக்கிறார். அன்வேஷுக்கும், ஜக்தியல் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி திருமணம் நடக்க இருந்தது. திருமணத்துக்காக பெண் வீட்டில் இருந்து 25 லட்சம் வரதட்சணையும் கொடுப்பதாகவும், அதில் 15 லட்சத்தை நிச்சயதார்த்தத்தின் கொடுத்த பெண் வீட்டார், எஞ்சிய … Read more