‘இலவச அறிவிப்பை வைத்தே ஆட்சியை பிடிக்க முயற்சி’- உச்சநீதிமன்றத்தில் நடந்த காரசார வாதம்
`அரசியல் கட்சிகள் இலவசங்கள் அறிவிப்பதை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய அரசு தரப்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி ஒரு முடிவு எடுக்கலாமே?’ என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அரசியல் கட்சிகள் தேர்தல் இலவசங்களை அறிவிக்க தடை கோரிய வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் இலவசம் தொடர்பான விவகாரங்களை ஆராய்ந்து அறிக்கை அளிக்க ஆணையத்தையோ, குழுவையோ உச்சநீதிமன்றமே அமைக்கலாம் என்றும் அவ்வாறு அமைப்பதாக இருந்தால் உச்சநீதிமன்ற … Read more