தமிழகத்தில் ரயில்வே ஒப்புதலுடன் 11 இரட்டைப் பாதைத் திட்டங்கள் செயல்படவுள்ளது: மத்திய அரசு

புதுடெல்லி: ” 2022 ஏப்.1-ம் தேதி நிலவரப்படி, தமிழ்நாட்டில், முழுமையாக அல்லது பகுதியாக 14,190 கோடி ரூபாய் செலவில் மொத்தம் 1234 கிமீ நீளமுள்ள 11 இரட்டைப் பாதைத் திட்டங்கள் ரயில்வே ஒப்புதலுடன் செயல்பட இருக்கிறது” என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலாளரான வைகோ, “ஒற்றை வழிப் பாதைகளின் காரணமாக நாள்தோறும் 15 முதல் 45 நிமிடங்கள் வரை ரயில்கள் தாமதமாக … Read more

கர்நாடக முதல்வருக்கு கொரோனா தொற்று – டெல்லி பயணம் ரத்து!

கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவரது டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த, கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, சமூக வலைதளமான ட்விட்டரில், அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து உள்ளதாவது: எனக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதை அடுத்து, மருத்துவர்கள் ஆலோசனைப்படி, … Read more

டெல்லியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு

டெல்லி: டெல்லியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்துள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு திரெளபதி முர்மு-வுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிஹார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து 11 பேர் உயிரிழப்பு; 10 பேர் பார்வையிழப்பு

பாட்னா: பிஹார் மாநிலம் சரண் மாவட்டம் சாப்ரா நகருக்கு அருகே உள்ள மாகெர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கள்ளச்சாராயத்தை நேற்று குடித்துள்ளனர். அந்தக் கள்ளச்சாராயம் விஷமாக மாறியதால் இதுவரை 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். மேலும் 10 பேருக்கு பார்வை பறிபோய்விட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் 35 பேர் பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து உடனடியாக அங்கு மருத்துவக் குழுவும் விரைந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் மீனா … Read more

அடுத்து துணை ஜனாதிபதி யார்? – பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் வாக்களித்தனர்

நாட்டின் அடுத்த குடியரசுத் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குடியரசுத் துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. இதை அடுத்து புதிய குடியரசுத் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில், மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநர் ஜக்தீப் தன்கர் மற்றும் காங்கிரஸ், … Read more

புதுச்சேரியில் 9 டன் ரேஷன் அரிசி பறிமுதல் விவகாரம்: அமைச்சர் துணையோடு கடத்தப்படுவதாக புகார்

புதுச்சேரி: புதுச்சேரியில் 9 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்து, விடுவிக்கப்பட்ட விவகாரத்தில் போலியான ஆவணங்களை சமர்பித்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த மாதம் 26ம் தேதி ஊசத்திட்டேரி பகுதியில் அதிரடிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, லாரியில் கடத்த முயன்ற 9 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. லாரி ஓட்டுனர்கள் மற்றும் லாரியில் வந்த 3 பேரை பிடித்து அரிசியுடன் லாரியை பறிமுதல் செய்து, வில்லியனூர் போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் அடுத்தகட்ட விசாரணைக்காக உணவுகடத்தல் … Read more

நிலத்தை கேட்டு பாஜக எம்எல்ஏ டார்ச்சர்: துறவி எடுத்த விபரீத முடிவு – சிக்கிய கடிதம்

தனது சாவுக்கு பாஜக எம்எல்ஏ பூரா ராம் சவுத்ரி தான் காரணம் என கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் துறவி ஒருவர். ராஜஸ்தானின் ஜலோர் மாவட்டத்தைச் சேர்ந்த 60 வயதான ரவிநாத் என்பவர் துறவியாக வாழ்ந்து வந்தார். இவர் சில தினங்களுக்கு முன் ஒரு கோவில் அருகே மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். துறவி ரவிநாத் இறப்பதற்கு முன் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று சிக்கியது. அதில், தன்னுடைய சாவுக்கு பாஜக எம்எல்ஏ … Read more

2ஜி ஊழல் குறித்து தினசரி விசாரணை நடத்த சிபிஐ மனு

புதுடெல்லி: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தொலைத் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் முறைகேடு நடந்ததாகவும், மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் மத்திய தணிக்கை துறை (சிஏஜி) சுட்டிக் காட்டியது. இந்த ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி மற்றும் 15 பேரை விடுதலை செய்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சிபிஐ தரப்பில் டெல்லி … Read more

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்தார் பிரதமர் மோடி

டெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பிரதமர் மோடி தனது வாக்கை பதிவு செய்துள்ளார். டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி வாக்கை பதிவு செய்த நிலையில், எம்.பி.க்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

பிரதமரை சந்தித்தார் மம்தா

புதுடெல்லி: நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்தில் பங்கேற்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 4 நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் டெல்லி சென்றார். அவர் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். மேற்கு வங்கத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் அவர் வலியுறுத்தியதாக திரிணமூல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் கூறும்போது, ‘‘ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் … Read more