மத்திய உருக்குத்துறை அமைச்சராக ஜோதிராதித்ய சிந்தியா பொறுப்பேற்பு..!

மத்திய உருக்குத்துறை அமைச்சராக இருந்த ஆர்.சி.பி.சிங் ராஜினாமா செய்ததை அடுத்து விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உருக்குத்துறை அமைச்சராக கூடுதல் பொறுப்பேற்றுக் கொண்டார். துறை செயலாளர் சஞ்சய் குமார் சிங் மற்றும் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். முக்தர் அப்பாஸ் நக்வி வகித்த மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. Source link

புதுச்சேரி அருகே கடன் தொல்லையால் மனைவி, 2 குழந்தைகளை கொன்றுவிட்டு ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை

புதுச்சேரி: புதுச்சேரி அருகே மனைவி, மகள், மகனை கொன்றுவிட்டு ஆட்டோ ஓட்டுநர் தியாகராஜன் தூக்கிட்டு தற்கொலை செய்தார். கடன் தொல்லை காரணமாக குடும்பத்தினரை கொன்றுவிட்டு ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் தகவல் தெரிவித்தது.

“வேலையே செய்யல சம்பளம் எதற்கு”.. ரூ.23.82 லட்சத்தை திருப்பி கொடுத்த ஆச்சர்ய பேராசிரியர்!

கொரோனா காலகட்டத்தில் மூன்று வருடங்கள் பாடங்கள் ஏதும் எடுக்காததால், பீகாரை சேர்ந்த பேராசிரியர் தனது 24 லட்ச ரூபாய் ஊதியத்தை திருப்பிக் கொடுத்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பீகாரின் முசாபர்பூரில் உள்ள நிதிஷேஸ்வர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்தி உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருபவர் லாலன் குமார். இவர் செப்டம்பர் 2019ஆம் ஆண்டு பணியில் சேர்ந்ததில் இருந்து அவர் பெற்ற மொத்த சம்பளமான ரூ.23,82,228 லட்சத்துக்கான காசோலையை பிஆர் அம்பேத்கர் பீகார் பல்கலைக்கழகத்தின் பதிவாளரிடம் திருப்பி … Read more

நுபுர் தலையை துண்டிக்க கூறிய அஜ்மீர் தர்கா ஊழியர் கைது

ஜெய்ப்பூர்: அஜ்மீர் தர்காவில் ஊழியராக பணியாற்றுபவர் சல்மான் சிஸ்தி. இவர் முகமது நபியை விமர்சனம் செய்த பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவின் தலையை துண்டிப்பவருக்கு தனது வீட்டையும், சொத்தையும் தருவதாக வீடியோ ஒன்றை பதிவு செய்து சமூக இணையதளத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ கன்னையா லால் படுகொலை சம்பவத்துக்கு முன்பே பதிவு செய்யப்பட்டு, சமீபத்தில்தான் சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்டது என போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து சல்மான் சிஸ்தி மீது போலீஸார் சில … Read more

இந்தியாவில் புதிய வகை கொரோனா: உலக சுகாதார அமைப்பு திட்டவட்டம்!

நாடு முழுவதும் கொரோனா 3ஆவது அலையின் தாக்கம் கணிசமாக குறைந்து வழக்கமான இயல்பு வாழ்க்கை திரும்பி வரும் நிலையில், இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி, கர்நாடகா, ஹரியானா, உத்தரப்பிரதேசம், தெலங்கானா, மேற்கு வங்கம், குஜராத், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தினசரி பாதிப்பு அதிகமாகி வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் புதிய … Read more

குஜராத் கடல் எல்லைக்குள் நுழைந்த 4 பாகிஸ்தான் மீனவர்கள் கைது

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த 4 பாகிஸ்தான் மீனவர்களை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். பாகிஸ்தானை சேர்ந்த பத்து மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கடல் எல்லையில் நடமாட்டம் இருப்பதை கண்டுபிடித்த எல்லை பாதுகாப்பு படையின் அதிரடி படையினர் உடனடியாக அந்த இடத்தை சுற்றிவளைத்தனர். தொடர்ந்து இந்திய கடல் எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. Source link

கபினி, கே.ஆர்.எஸ். அணைகள் முழுகொள்ளளவை எட்ட உள்ள நிலையில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பெங்களூரு: கபினி, கே.ஆர்.எஸ். அணைகள் முழுகொள்ளளவை எட்ட உள்ள நிலையில் எப்போது வேண்டுமானாலும் நீர் திறக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். நீர்திறப்பு எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கலாம் என்பதால் கர்நாடக காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காளிதேவி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறிய திரிணமூல் எம்.பி. மஹுவா மீது வழக்கு பதிவு

கொல்கத்தா: காளிதேவி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியதன் மூலம் இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதற்காக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ராவை கைது செய்ய வேண்டும் என மேற்கு வங்க பாஜக கோரியுள்ளது. இயக்குநர் லீனா மணிமேகலை உருவாக்கிய ‘காளி’ ஆவணப்படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியானது. அந்த போஸ்டரில் காளிதேவி ஒரு கையில் புகைப்பிடிப்பது போலவும் மற்றொரு கையில் தன்பாலினத்தவரின் வானவில் கொடியை ஏந்தியிருப்பதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த திரிணமூல் காங்கிரஸ் … Read more

மிஸஸ் இந்தியா அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த சர்கம் கௌசால்..!

மும்பையில் நடைபெற்ற மிஸஸ் இந்தியா அழகிப் போட்டியில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த சர்கம் கௌசால் என்ற பெண் மகுடம் சூடினார். திருமணம் முடிந்த பெண்களுக்கு மிஸஸ் இந்தியா என்ற போட்டி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு வெற்றி பெற்ற சர்கம் கௌஷல் கடற்படை அதிகாரியின் மனைவி ஆவார். மிஸ் இந்தியா போட்டியில் அவர் போட்டியிட வேண்டும் என்று அவர் குடும்பத்தினர் விரும்பிய போதும் அவர் திருமணம் செய்ய முடிவெடுத்துவிட்டார். இதை அறிந்த அவர் கணவரும் ஒத்துழைப்புத் தர மிஸஸ் … Read more

கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் நீர்வரத்து 5000 கனஅடியாக அதிகரிப்பு

பெங்களூரு: கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து நீர் வெளியேற்றம் வினாடிக்கு 5,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு மாவட்டங்களில் 3 நாட்களாக கனமழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து உயர்ந்துள்ளது. கனமழையால் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து 22,000 கனஅடியில் இருந்து 33,000 கனஅடியாக உயர்ந்துள்ளது.