மதம் சார்ந்த சர்ச்சைப் பேச்சு: தெலங்கானா பாஜக எம்எல்ஏ ராஜா சிங் கைது
ஹைதராபாத்: குறிப்பிட்ட ஒரு மதத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தியதாக தெலங்கானா கோஷமஹால் தொகுதி பாஜக எம்எல்ஏ ராஜா சிங் கைது செய்யப்பட்டார். இவர் அண்மையில் ஹைதராபாத் நகரில் நடந்த முனாவர் ஃபரூக்கி ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சியை விமர்சித்துப் பேசியிருந்தார். இதனை அவர் ஒரு வீடியோவாக வெளியிட்டார். அந்த வீடியோ வெளியாகி வைரலாக அதற்கு அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். நள்ளிரவில் ஹைதராபாத் நகரம் முழுவதும் போராட்டங்கள் பரவியது. இதனையடுத்து தபீர்புரா காவல்நிலையம் … Read more