இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட்க்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என பிசிசிஐ இன்று உறுதி செய்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 27ம் தேதிஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி இன்று துபாய் புறப்பட்டு சென்றது. வீரர்கள் அனைவரும் உடல் தகுதியுடன் உள்ள நிலையில், அணியின் பயிற்சியாளரான  ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆசிய கிரிக்கெட் கவுன்சில், ஆசியக் கோப்பைப் போட்டியை 1984 … Read more

திமுக மட்டும்தான் மிகவும் புத்திசாலித்தனமான, சாதுர்யமான கட்சியா? – தலைமை நீதிபதி காட்டம்

இலவசங்கள் வழங்குவது தொடர்பான வழக்கின் விசாரணையில் திமுக வழக்கறிஞர் வில்சனிடம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா காட்டமாக கேள்விகளை முன்வைத்திருக்கிறார். இலவசங்களை அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளாக வழங்குவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் நடந்து வருகிறது. இதில் ஏற்கெனவே திமுக சார்பில் இலவசங்களை அளிப்பதற்கு ஆதரவு நிலைப்பாட்டுடன் தனியாக மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த வழக்கில் திமுக அறிவிக்கும் இலவசங்களை மறைமுகமாக குறிப்பிட்டே எதிர்தரப்பு மனுதாரர்களும், வழக்கறிஞர்களும் … Read more

பில்கிஸ் பானோ வழக்கு | 11 பேர் விடுதலையை எதிர்த்து மனு; உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு

பில்கிஸ் பானோ வழக்கில் 11 பேர் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. 2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தில் பில்கிஸ் பானோ என்ற பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரைக் கொன்ற வழக்கில் குற்றவாளிகள் என நிரூபணமாகி ஆயுள் தண்டனை பெற்றவர்களை அண்மையில் குஜராத் அரசு விடுதலை செய்தது. பொதுநல வழக்கு: இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் சுபாஷினி … Read more

முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்து: பாஜக எம்எல்ஏ அதிரடி கைது!

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்த, தெலங்கானா மாநில பாஜக எம்எல்ஏ டி.ராஜா சிங்கை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தெலங்கானா மாநிலத்தில் உள்ள கோஷாமால் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக எம்எல்ஏ டி.ராஜா சிங், ஐதராபாத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த நகைச்சுவை கலைஞர் முனாவர் பரூக்கி என்பவரை விமர்சித்து ஒரு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில், பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நுபுர் சர்மாவை போல், நபிகள் நாயகம் குறித்து எம்எல்ஏ ராஜா … Read more

உலகின் நம்பர் 1 பணக்காரர் எலன் மஸ்க்கை சந்தித்த இந்திய இளைஞர்..!

இந்தியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது நீண்டகால டுவிட்டர் நண்பரும் உலகின் நம்பர் ஒன் பணக்காரருமான எலன் மஸ்க்கை சந்தித்துள்ளார். புனேவை சேர்ந்த 23 வயதான பிரணாய் பத்தோல், சில நாட்களுக்கு முன்பு டெக்சாஸில் உள்ள ஜிகாஃபாக்டரி தொழிற்சாலையில் எலன் மஸ்க்கை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ள பிரணாய், உங்களைச் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். இப்படிப்பட்ட அடக்கமான, பணிவான நபரை பார்த்ததில்லை என்றும், நீங்கள் லட்சக்கணக்கானவர்களுக்கு உத்வேகமாக இருப்பதாகவும் பிரணாய் தெரிவித்துள்ளார்.  … Read more

காணாமல் போன காரைக்கால் மீனவர்கள் கோடியக்கரை அருகே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது: புதுவை அமைச்சர் லட்சுமி நாராயணன் தகவல்..!!

புதுச்சேரி: காணாமல் போன காரைக்காலை சேர்ந்த 7 மீனவர்கள் கோடியக்கரை அருகே இருப்பது கண்டுபிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தகவல் தெரிவித்துள்ளார். கோடியக்கரையில் இருந்து 78 நாட்டிக்கல் மைல் தொலைவில் உள்ள மீனவர்கள் மாலையில் கரை திரும்புவர். மாயமான 7 மீனவர்கள் தொடர்பாக புதுச்சேரி பேரவையில் புதுச்சேரி மீன்வளத்துறை அமைச்சர் தகவல் அளித்துள்ளார்.

பில்கிஸ் பானு வழக்கு: குற்றவாளிகள் விடுதலைக்கு எதிரான மனுவை விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்!

பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளை விடுவித்த குஜராத் மாநில அரசின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. கடந்த 2002 ஆம் ஆண்டு, குஜராத் மாநிலத்தில் மதக் கலவரம் நடந்த போது, 5 மாத கா்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு என்ற பெண், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா். அப்போது அவருக்கு வயது 21. அவரின் 3 வயது மகள் உட்பட குடும்ப உறுப்பினா்கள் 7 பேரை வன்முறை கும்பல் கொலை செய்தது. இந்த … Read more

வாக்காளர்களுக்கு இலவசங்கள் வழங்கப்படுவது குறித்து விவாதிக்க வேண்டும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.ரமணா கருத்து

டெல்லி: வாக்காளர்களுக்கு இலவசங்கள் வழங்கப்படுவது குறித்து விவாதிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.ரமணா தெரிவித்திருக்கிறார். தேர்தல் நேரத்தில் எதற்காக வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன? இதற்கு எங்கிருந்து பணம் வருகிறது? என கேள்வி எழுப்பிய நீதிபதி, மக்களுக்கு இலவசங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதில் இருந்து மாற்றுக் கருத்து இல்லை என குறிப்பிட்டார்.

`இந்தியாவின் வானிலை பெண்’ அன்னா மணி 104-வது பிறந்தநாள்: சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்!

இந்தியாவின் வானிலை பெண் அன்னா மணியின் 104வது பிறந்தநாளுக்காக அவரை கவுரவிக்கும் விதமாக சிறப்பு டூடுலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் வானிலை பெண்’ என்று அழைக்கப்படும் அன்னமணி, 23 ஆகஸ்ட் 1918 அன்று கேரளாவில் பிறந்து, வானிலை ஆய்வு மீது அதீத ஆர்வம் கொண்ட காரணத்தினால் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் பட்ட படிப்பை முடித்தார். 1948ல் அவர் இந்தியாவுக்குத் திரும்பி இந்திய வானிலை ஆய்வுத் துறையில் (IMD) பணியாற்றத் தொடங்கி வானிலை கருவிகளை வடிவமைத்து … Read more

அலோபதி மருத்துவமுறையை பாபா ராமதேவ் விமர்சித்து பேசக்கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: அலோபதி மருத்துவ முறையை பாபா ராமதேவ் விமர்சித்து பேசக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது யோகா மருத்துவ முறையை விளம்பரப்படுத்த  பாபா ராமதேவ் அலோபதியை விமர்சிப்பது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்திய மருத்துவ கவுன்சிலின் மனு மீது ஒன்றிய அரசு, பதஞ்சலி நிறுவனம் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.