ஓடுதளத்தில் நின்று கொண்டிருந்த இண்டிகோ விமானம் மீது மோதிய மாருதி கார்! டெல்லியில் பரபரப்பு

டெல்லி விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இண்டிகோ விமானத்தின் முன் பகுதியில் கார் வேகமாக சென்று மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இண்டிகோ நிறுவன விமானம் மீது கட்டுப்பாட்டை இழந்த மாருதி கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்பு நிறைந்த விமான நிலையத்திற்குள் நிகழ்ந்த இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் இருந்து பாட்னா செல்வதற்காக ஓடுதளத்தில் நின்று கொண்டிருந்த விமானத்தின் மீது, எப்படி கார் வந்து மோதியது … Read more

கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை: இந்தியாவில் 7-வது தொற்று

மலப்புரம்: கேரளாவில் மேலும் ஒரு நபருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கேரள மாநிலத்தில் 5-வது நபருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இது இந்தியாவில் 7-வது பாதிப்பு ஆகும். கடந்த சில நாட்களுக்கு முன்னர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் கேரளாவில் உயிரிழந்தார். இதனையடுத்து திரிச்சூர் மாவட்டத்தில் 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். அவரது உயிரிழப்புக்கு குரங்கு அம்மை மட்டும்தான் காரணமா என்று ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐக்கிய அமீரகத்தில் இருந்து வந்த … Read more

National Herald: காங்கிரசை துரத்தும் அமலாக்க துறை – நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் ரெய்டு!

டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட பத்திரிகை நேஷனல் ஹெரால்டு. இந்த பத்திரிகையை ‘அசோசியேட்டட் ஜர்னல்ஸ்’ நிறுவனம் நடத்தி வந்தது. இதனிடையே, அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனம் நிதி பற்றாக்குறையில் தவித்ததால், அந்நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி 90 கோடியே 25 லட்சம் ரூபாயை வட்டியில்லா கடனாக கொடுத்தது. அந்த கடனை அசோசியேட்டடு நிறுவனம் திருப்பி செலுத்த முடியாததால், அதன் பங்குகளை காங்கிரஸ் இடைக்கால … Read more

கொலை வழக்கால் 30 ஆண்டாக தலைமறைவு வாழ்க்கை 15 ஆண்டில் 28 படங்களில் நடித்த நடிகர் கைது: தமிழகத்திலும் சுற்றித் திரிந்தது அம்பலம்

காஜியாபாத்: திருட்டு, கொலை வழக்கில் சிக்கிய ஒருவர் 30 ஆண்டாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த நிலையில், கடந்த 15 ஆண்டில் 28 படங்களில் நடித்துள்ளார். தமிழகத்திலும் சுற்றித் திரிந்த அவரை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். அரியானா மாநிலம் பானிபட் அடுத்த நரைனா கிராமத்தைச் சேர்ந்த ஓம்பிரகாஷ் என்ற பாட்ஷா என்பவர், இந்திய ராணுவத்தில் சிக்னல் படைப்பிரிவில் பணியாற்றினார். கடந்த 1980ம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் சிறு குற்றங்களில் ஈடுபட்டார். கார்கள், இரு சக்கர வாகனங்களை திருடும் வேலையில் … Read more

”காதலுக்கு கண்ணில்ல OK.. மூளை?” -காதலிக்காக பெண்கள் கழிவறையில் தங்கி காதலன் செய்த காரியம்!

காதலுக்கு கண் இல்லைனு சொல்வது உண்மைதான் போல என எண்ண வைக்கிறது பெங்களூருவைச் சேர்ந்த ஒரு நபரின் செயல். எல்லாருமே காதலிப்பது வழக்கம்தான். ஆனால் அந்த காதலுக்காக என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதுதான் குறிப்பிடத்தக்கதாக இருக்கும். அந்த வகையில், பெங்களூருவைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் தனது காதலிக்கு விலையுயர்ந்த மொபைலை பரிசாக கொடுக்க வேண்டும் என்பதற்காக ஒரு இரவு முழுவதும் பெண்கள் கழிவறையில் தங்கியிருந்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது. பெங்களூருவின் ஜே.பி.நகர் பகுதியில் உள்ள மிகப்பெரிய எலக்ட்ரானிக் ஷோருமிற்கு … Read more

மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக எந்த ஒரு பரிசீலனையும் இல்லை: நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ள மாநிலங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக எந்த ஒரு பரிசீலனை இல்லை என நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் தெரிவித்தது. மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்தப்போகிறதா என மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் கேள்விக்கு பதிலளித்தது.

கேரளா: மேல் மாடியில் இருந்து தவறிவிழுந்த தம்பியை தாங்கிப்பிடித்த அண்ணன் – வைரல் வீடியோ

மலப்புரத்தில் வீட்டை சுத்தம் செய்யும்போது மேல் மாடியில் இருந்து தவறி விழுந்த தம்பியை தாங்கிப் பிடித்த அண்ணன், இருவரும் உயிர் தப்பிய அதிசயம் விடியோ வைரலாகி வருகிறது. கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள சங்கரம்குளம் பகுதியில் அண்ணன் தம்பி இருவரும் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது மேல் மாடியில் இருந்து தம்பி சாதிக் தவறி விழுவதை பார்த்த அண்ணன் ஷஃபீக் அவனை தாங்கிப் பிடித்துள்ளார். இந்நிலையில் அதிர்ஷ்டவசமாக இருவரும் உயிர் தப்பிய காட்சிகள் சமூக … Read more

கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை உறுதி; இந்தியாவில் பாதிப்பு 7-ஆக உயர்வு..!!

திருவனந்தபுரம்: கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை உறுதி செய்யப்பட்டதால் இந்தியாவில் பாதிப்பு 7 ஆக உயர்ந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த 30 வயதான இளைஞருக்கு குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. குரங்கம்மை உறுதியான இளைஞருக்கு மலப்புரம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கனிமொழி எம்பி Vs அமைச்சர் நிர்மலா சீதாராமன்- நாடாளுமன்ற காரசார விவாதத்தின் பின்னணி இதுதான்

விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று விவாதம் நடந்தது. அப்போது பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றின் விலை உயர்வு ஒவ்வொரு குடும்பத்தையும் பாதித்துள்ளதாக திமுக எம்பி கனிமொழி குற்றம்சாட்டினார். அதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன் பதிலளித்தார். காரசார விவாதமாக இது அமைந்திருந்தது. அதனொரு சிறு பகுதி இங்கே: எம்.பி. கனிமொழி, மத்திய அமைச்சரவையை நோக்கி எழுப்பிய கேள்விகள்: … Read more

சஞ்சய் ராவத் மீது ஸ்வப்னா பட்கர் போலீஸில் புகார்

சஞ்சய் ராவத்தின் முன்னாள் உதவியாளர் ஸ்வப்னா பட்கர் என்ற பெண் அளித்த புகாரின் பேரில் ராவத் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 40 வயதான ஸ்வப்னா பட்கர், மும்பை புறநகர்ப் பகுதியில் கிளினிக் வைத்து, உளவியல் ஆலோசனைகளை வழங்கி வருகிறார். தனக்கு பாலியல் தொல்லை தருவதாக மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பப்பட்டதாகவும், மேலும் ஆடியோ மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் புகாரில் ஸ்வப்னா கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து சஞ்சய் ராவத் மீது பல்வேறு பிரிவுகளில் மும்பை … Read more