ஒரு ஆட்டின் விலை ரூ.1.05 லட்சம்: ஆக்ரா சந்தையில் களைகட்டிய பக்ரீத் குர்பானி ஆடு விற்பனை

புதுடெல்லி: உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ரா ஆட்டுச் சந்தையில் பக்ரீத் குர்பானிக்கான ஆடு விற்பனை களை கட்டியுள்ளது. அங்கு ஒரு ஆட்டின் விலை ரூ.1.05 லட்சத்திற்கு விற்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களிலிருந்து வியாபாரிகள் தங்கள் விலை உயர்ந்த ஆடுகளுடன் விற்பனைக்கு குவித்துள்ளனர். இதனால் விற்பனை சூடுபிடித்துள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை முஸ்லிம்களின் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் இறைவன் பெயரில் ஆடுகள் அதிக அளவில் குர்பானி கொடுக்கப்படுகிறது. இதற்காக, உ.பி.,யின் ஆக்ரா சந்தைக்கு அண்டை மாநிலங்களான டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான் … Read more

திருப்பதியில் 25 ஆண்டுகள் தரிசனம் செய்யும் டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 1982ஆம் ஆண்டு உதய, அஸ்தமன சேவா (காலை முதல் மாலை வரை தரிசனம்) டிக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டது. உதய, அஸ்தமன சேவா டிக்கெட் பெற்றவர்கள் ஏழுமலையான் கோயிலில் காலை சுப்ரபாதம் முதல் மாலை சகஸ்ர தீப அலங்கார சேவை வரை நடைபெறும் அனைத்து உற்சவங்களிலும் குடும்பத்தினருடன் பங்கேற்கலாம். ஆண்டுக்கு ஒருமுறை என 25 ஆண்டுகளுக்கு இந்த தரிசனம் செய்து கொள்ளலாம். அதன்படி அதற்கான டிக்கெட் ரூ.1 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த டிக்கெட் பெற்றவர்களின் … Read more

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா வீட்டில் அத்துமீறி நுழைந்த மர்மநபர் குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவு.!

மேற்குவங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து ஒரு நாள் முழுவதும் தங்கி இருந்த மர்மநபர் குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மம்தாவின் தனிப்பட்ட வீடு தெற்கு கொல்கத்தாவின் கலிகட் பகுதியில் 34பி ஹரிஸ்சடர்ஜி என்ற முகவரியில் உள்ளது. இந்த வீட்டிற்கு பல அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணி அளவில் நுழைந்த மர்ம நபர் இரவு முழுவதும் பதுங்கி இருந்துள்ளார். காலையில் வழக்கம் போல் போலீசார் ரோந்து … Read more

மராட்டிய சட்டபேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்தார் ஏக்நாத் ஷிண்டே

மும்பை: மராட்டிய சட்டபேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை ஏக்நாத் ஷிண்டே நிரூபித்துள்ளார். பெரும்பான்மைக்கு 145 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் 160-க்கும் மேற்பட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இமாச்சலப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: பள்ளிக் குழந்தைகள் உட்பட 16 பேர் பலி

குலு: இமாச்சலப் பிரதேசத்தில் பேருந்து விபத்தில் சிக்கி பள்ளிக் குழந்தைகள் உட்பட 16 பேர் பலியாகினர். இதுகுறித்து குலு துணை ஆணையர் அசுதோஷ் கார்க் கூறுகையில், “இன்று காலை பள்ளிக் குழந்தைகள் மற்றும் பிற பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சயிஞ் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. பேருந்து குலு பகுதியில் வந்தபோது திடீரென வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் இருந்த பள்ளிக்குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். மீட்புப் பணிகள் … Read more

அனைத்து மாணவர்களின் வீடுகளிலும் ஒரு வாரத்திற்கு தேசியக் கொடி ஏற்ற வேண்டும் – கர்நாடக அரசு

சுதந்திர தின பவள விழாவையொட்டி அனைத்து மாணவர்களின் வீடுகளிலும் ஒரு வாரத்திற்கு தேசிய கொடி ஏற்ற வேண்டுமென கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக கர்நாடக உயர்கல்வி துறை அமைச்சர் அஸ்வத் நாராயண் அனுப்பியுள்ள சுற்ற றிக்கையில், 75-வது சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் வகையில் பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களில் படித்து வரும் மாணவ-மாணவிகள் அனைவரின் வீடுகளிலும் ஆகஸ்டு 11 முதல் 17-ந் தேதி வரை மூவர்ண தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று … Read more

கர்நாடகாவில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் வீடுகளில் ஆகஸ்ட் 11ம் தேதி முதல் 17ம் தேதி வரை தேசியக்கொடி ஏற்ற உத்தரவு.!

பெங்களூரு: கர்நாடகாவில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் வீடுகளில் ஆகஸ்ட் 11ம் தேதி முதல் 17ம் தேதி வரை தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என உயர்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. பெங்களூரு இந்தியா சுதந்திரம் அடைந்து வருகிற ஆகஸ்டு 15-ந்தேதியுடன் 75-வது ஆண்டு ஆகிறது. இதையொட்டி இந்த ஆண்டு சுதந்திர தின பவள விழாவை கோலாகலமாக கொண்டாட மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், சுதந்திர தின பவள விழாவையொட்டி … Read more

'ஃபெமினா மிஸ் இந்தியா 2022' பட்டத்தை தட்டிச் சென்றார் கர்நாடக அழகி

கர்நாடகாவை சேர்ந்த ஷினி ஷெட்டி, ‘ஃபெமினா மிஸ் இந்தியா 2022’ பட்டத்தை வென்றார். மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ‘விஎல்சிசி ஃபெமினா மிஸ் இந்தியா வோ்ல்டு 2022’ பட்டத்திற்கு இறுதிச்சுற்று நடைபெற்றது. இதில் பல மாநிலங்களில் இருந்து 31 மாடல் அழகிகள் பங்கேற்றனர். இந்தப் போட்டியின் இறுதியாக கர்நாடாகா மாநிலத்தைச் சேர்ந்த ஷினி ஷெட்டி என்ற 21 வயது மாடல், ‘ஃபெமினா மிஸ் இந்தியா 2022’ பட்டத்தை தட்டிச்சென்றார். மேலும் முதல் … Read more

குழந்தைகளை பறிகொடுத்த சோகத்தில் அரசியலில் இருந்து விலக நினைத்த ஷிண்டே

மும்பை: மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்றுள்ள ஏக்நாத் ஷிண்டேவின் தந்தை சாம்போஜி ஷிண்டே தாணே நகரில் காகித அட்டை தயாரிக்கும் ஆலையில் தொழிலாளியாகவும் அவரது தாயார் கங்குபாய், வீட்டு பணிப்பெண்ணாகவும் வேலை செய்தனர். தாணேவின் கிசான் நகரில் ஏக்நாத் ஷிண்டே குடும்பம் வசித்தது. ஏழ்மை காரணமாக பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு கூலி வேலைகளுக்கு சென்றுவந்தார். ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வந்தார். மீன் கடையில் மீன்களை சுத்தம் செய்து கொடுக்கும் பணியையும் அவர் செய்திருக்கிறார். தாணே கிசான் நகர் … Read more

மிஸ் இந்தியாவாக மகுடம் சூடினார் கர்நாடகத்தைச் சேர்ந்த சினி ஷெட்டி.!

கர்நாடகாவைச் சேர்ந்த சினி ஷெட்டி மிஸ் இந்தியாவாக மகுடம் சூட்டப்பட்டார்.ஃபெமினா இதழ் சார்பாக ஆண்டுதோறும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அழகிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றனர். மும்பையில் நேற்று இறுதிச் சுற்று நடைபெற்றது.இதில் முதல் மூன்று இடங்களில் கர்நாடகாவைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் சினி ஷெட்டி, முதலிடம் பிடித்து மிஸ் இந்தியாவாக மகுடம் சூட்டிக் கொண்டார். அவர் மும்பையில் பிறந்து கர்நாடகாவில் வாழ்கிறார், பட்டப்படிப்பு முடித்து பரத நாட்டியம் போன்றவற்றில் தேர்ச்சி பெற்றுள்ளார். இரண்டாவது மூன்றாவது ரன்னர் … Read more