ராஜஸ்தானில் அன்பின் வெளிப்பாடாக சிறுத்தைக்கு ராக்கி கட்டிய பெண்; ஐஎப்எஸ் அதிகாரி பாராட்டு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் அன்பின் வெளிப்பாடாக சிறுத்தைக்கு ராக்கி கட்டிய பெண்ணை ஐஎப்எஸ் அதிகாரி சுசாந்தா வெகுவாக பாராட்டி உள்ளார். சிறுத்தைக்கு பெண் ஒருவர் ராக்கி கட்டும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரலான இந்தப் புகைப்படத்தை இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த படத்தில், இளஞ்சிவப்பு நிற சேலை அணிந்த பெண் ஒருவர், நோய்வாய்ப்பட்ட சிறுத்தைக்கு ராக்கி கட்டுகிறார். இந்தப் படத்தை பகிர்ந்துள்ள சுசாந்தா நந்தா வெளியிட்ட … Read more

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி 2023 டிசம்பரில் நிறைவடையும்: அயோத்தி அறக்கட்டளை தகவல்

அயோத்தி: அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி 2023 டிசம்பரில் நிறைவடையும் என ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா பொதுச் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்தார். அயோத்தி, அயோத்தி, அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்ட கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 9-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. கட்டுமான பணிகளை கவனிக்க ராமஜென்ம பூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டது. அதையடுத்து 2020-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பூமி பூஜை … Read more

மோடி மீண்டும் பிரதமர் ஆக முடியாது?; பாஜ ஷாக்..உருவாகும் மெகா கூட்டணி!

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. ஆனாலும் கடந்த சில ஆண்டுகளாக நிதீஷ்குமார், பாஜ இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இரு கட்சிகளும் மோதல் போக்கை கடைபிடித்து வந்தன. இந்த நிலையில் அதிருப்தி எம்எல்ஏக்களை உருவாக்கி ஐக்கிய ஜனதா தளத்தை உடைக்கும் முயற்சியில் பாஜக இறங்கி இருப்பதாக குற்றம்சாட்டி பாஜகவுடனான கூட்டணியை முறிப்பதாக நிதீஷ் குமார் திடீரென அறிவித்தார். இந்த அறிவிப்பை ஜீரணிக்கும் முன்பாகவே அடுத்த சில மணி நேரங்களில் … Read more

திருப்பதி தரிசன டிக்கெட்டில் முறைகேடு தேவஸ்தான அதிகாரி, 2 பெண்கள் கைது

திருமலை: கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கிய பிறகு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களின் வருகை அதிகளவு உள்ளது. தினமும் 70 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர். இதனை பயன்படுத்தி முறைகேடாக டிக்கெட் பெற்று பக்தர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. இதற்கு தேவஸ்தானத்தில் பணிபுரியும் சில அதிகாரிகளும், ஊழியர்களும், துணைபுரிந்து வருவதாக புகார்கள் எழுந்தது. இதுதொடர்பாக தேவஸ்தான … Read more

Yuan Wang 5: சீன உளவு கப்பலுக்கு இலங்கை க்ரீன் சிக்னல்!

சீன உளவு கப்பல் இலங்கைக்கு வர அதிகாரப்பூர்வமாக அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அண்டை நாடான சீனாவின் ‘யுவான் வாங் 5’ என்ற உளவுக் கப்பலை, இலங்கை நாட்டின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை நிறுத்தி வைக்க சீனா திட்டமிட்டது. விண்வெளி மற்றும் செயற்கைக்கோளை கண்காணிக்கும் இந்த உளவு கப்பலை இலங்கையில் நிறுத்துவது, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதால், மத்திய அரசு ஆட்சேபம் தெரிவித்து வந்தது. … Read more

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட் முறைகேடு: தேவஸ்தான கண்காணிப்பாளர் உள்ளிட்ட 3 பேர் கைது…

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முறைகேடாக வி.ஐ.பி. தரிசனம் மற்றும் 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை பெற்று பக்தர்களுக்கு கூடுதல் விற்பனைக்கு செய்து வந்த தேவஸ்தானத்தில் பணிபுரியும் கண்காணிப்பாளர் மற்றும் 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய கொரோன கட்டுப்பாடுகள் நீக்கிய பிறகு பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சுவாமி தரிசனம் செய்ய வெள்ளி, சனி, ஞாயிறு என வர … Read more

டெல்லியில் ஆப்ரிக்க நாட்டை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி

டெல்லி; டெல்லியில் ஆப்ரிக்க நாட்டை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. நைஜீரியாவில் இருந்து டெல்லி திரும்பிய ஆப்ரிக்க நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மதமில்லை என்ற காரணத்திற்காக மாணவர்களுக்கு சலுகைகளை நிராகரிக்க கூடாது: கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம்: பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும் மாணவர்களுக்கு மதமில்லை என்ற காரணத்திற்காக கல்வி சலுகைகளை நிராகரிக்கக் கூடாது என்று கேரள அரசுக்கு அம் மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரளாவை சேர்ந்த 5 மாணவர்கள் கேரள உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில் கூறியிருந்த விவரம் வருமாறு: பொருளாதாரத்தில் பின்தங்கிய நாங்கள் எந்த மதத்தையும் சாராதவர்கள். உயர் கல்வி படிப்பதற்காக கல்லூரியில் விண்ணப்பித்தபோது பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான சலுகை எங்களுக்கு நிராகரிக்கப்பட்டது. உயர் சமூகத்தில் … Read more

கூகுள் மேப்பை நம்பி காரை கம்மாயில் விட்ட குடும்பத்தார்: கேரளாவில் நடந்த சோகம்!

தெரியாத இடங்களுக்கோ, தொலைதூர பயணமாக சொந்த வாகனத்தில் சென்றால் போய் சேர வேண்டிய வழியை கண்டுபிடிக்க உதவியாக இருப்பது கூகுள் மேப் மட்டும்தான். தெரியாத வேலையை தொட்டவனும் கெட்டான், தெரிஞ்ச வேலையை விட்டவனும் கெட்டான் என்பது போன்றுதான் கூகுள் மேப்பை நம்பி வழியை தேடுவோரின் நிலை இருக்கும். அப்படி கூகுள் மேப் கூறும் வழியை கண் மூடித்தனமாக நம்பி பலருக்கும் பல விதமான அனுபவங்கள் நிகழ்ந்திருக்கும். அந்த வகையில் கேரளாவில் கூகுள் மேப் கூறிய வழியை நம்பி … Read more

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் – பிஹார் தொழிலாளி உயிரிழப்பு

ஸ்ரீநகர்: பிஹாரைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். காஷ்மீரில் சிறு சிறு வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி னர். இதில் ஏற்கெனவே சிலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், பிஹார் தொழிலாளி ஒருவர் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதுகுறித்து காஷ்மீர் போலீஸார் கூறியதாவது: ஆகஸ்ட் 11-ம் தேதி நள்ளிரவு பண்டிப்போராவி சோட்நரா சும்பல் பகுதியில் தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில் முகமது அம்ரேஸ் … Read more