‘நீட்’ தேர்வை தள்ளி வைக்க கோரும் மனு: டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி

புதுடெல்லி: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 17) நடைபெற உள்ளது. இத்தேர்வை ஒட்டிய நாட்களில் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை மாணவர் சேர்க்கைக்கான ‘கியூட்’ நுழைவுத் தேர்வும் நடப்பதால், ‘நீட்’ தேர்வை தள்ளி வைக்க கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மாணவர்கள் சிலர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “கரோனா பாதிப்புக்கு இடையில் ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நீட் … Read more

குமரி முதல் காஷ்மீர் வரை 3500 கி.மீ. பாதயாத்திரை.. ராகுல் காந்தி தலைமையில் நடத்த காங்கிரஸ் கட்சி திட்டம்.!

பாரதத்தை இணைப்போம் என்ற பெயரில் 148 நாட்களில் 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர் பாதயாத்திரையை கன்னியாகுமரியில் ராகுல் காந்தி தொடங்கி வைக்கிறார். அக்டோபர் 2 மகாத்மா காந்தியின் பிறந்தநாளில் தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் தேச ஒற்றுமைக்கான பாத யாத்திரை தேதி மாற்றப்பட்டு முன்கூட்டியே நடைபெறலாம் என்று காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் மீண்டும் ராகுல் காந்தியே கட்சித் தலைவராகப் பொறுப்பேற்பார் என்று கூறப்படுகிறது. … Read more

கர்நாடக மாநிலம் கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து நீர்திறப்பு 1,13,000 கனஅடியாக உயர்வு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து நீர்திறப்பு 1,13,000 கனஅடியாக உயர்ந்துள்ளது.  கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து 1,03,000 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது அதிகரித்துள்ளது.

பிஎஃப்ஐ-யும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் ஒன்றா? காவல் உயரதிகாரி கருத்தால் சர்ச்சை

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவையும் (பிஎஃப்ஐ), ஆர்எஸ்எஸ் அமைப்பையும் ஒப்பிட்டு காவல் உயரதிகாரி கருத்து தெரிவித்தது பிகாரில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிகார் தலைநகர் பாட்னாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த செவ்வாய்க்கிழமை சென்றிருந்தார். இதனை முன்னிட்டு அங்கு போலீஸார் சென்ற வாரம் தீவிர வாகனச் சோதனையிலும், கண்காணிப்புப் பணியிலும் ஈடுபட்டிருந்தனர். இதில் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 2 பேரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில், அவர்களுக்கும், பிஃஎப்ஐ அமைப்புக்கும் இடையே தொடர்பு இருப்பது தெரியவந்தது. … Read more

விவாகரத்து செய்த காஸ்ட்யூம் டிசைனரை காதல் திருமணம் செய்யும் வில்லன்

மும்பை: பாலிவுட் நடிகர் வித்யூத் ஜம்வால் தற்காப்புக்கலை பயின்றவர் மட்டுமின்றி மாடலாகவும் இருக்கிறார். தமிழில் அஜித் குமாருடன் ‘பில்லா 2’,  விஜய்யுடன் ‘துப்பாக்கி’, சூர்யாவுடன் ‘அஞ்சான்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், வித்யூத் ஜம்வாலுக்கு திருமணம் நடைபெற இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கும், பாலிவுட் காஸ்ட்யூம் டிசைனர் நந்திதா மஹ்தானிக்கும் காதல் மலர்ந்துள்ளது. இதையடுத்து கடந்த ஆண்டு அவர்கள் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சமீபத்தில் வித்யூத் ஜம்வால், நந்திதா மஹ்தானி ஜோடி தாஜ்மகாலுக்கு சென்றிருந்த போட்டோ … Read more

மனைவியாக இருக்க மாதம் ரூ.25 லட்சம் சம்பளம்: நீது சந்திரா அதிர்ச்சி தகவல்

மும்பை: தெலுங்கில் ‘விஷ்ணு’ என்ற படத்தில் அறிமுகமானவர், நீது சந்திரா. பீகார் மாநிலத்தை சேர்ந்த அவர், ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ளார். போஜ்புரி, கன்னடம், கிரிக், ஆங்கிலம் ஆகிய மொழிப் படங்களிலும் நடித்திருக்கும் அவர், தமிழில் ‘யாவரும் நலம்’, ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’, ‘ஆதி-பகவன்’, ‘சேட்டை’, ‘சிங்கம் 3’, ‘வைகை எக்ஸ்பிரஸ்’ உள்பட சில படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: ஒரு வெற்றிகரமான கதா நாயகியின் தோல்விக்கதையே எனது கதை. தேசிய விருது … Read more

மூக்கில் ஸ்பிரே செய்யப்படும் கரோனா மருந்தால் உடனடி பலன்: மும்பை நிறுவன ஆய்வில் தகவல்

புதுடெல்லி: கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மூக்கில்ஸ்பிரே செய்யப்படும் நைட்ரிக்ஆக்சைடு மருந்தை, மும்பையைச் சேர்ந்த கிளன்மார்க் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. நாடு முழுவதும் 20 இடங்களில் கரோனா அறிகுறி உள்ள தடுப்பூசி செலுத்தியவர்கள் மற்றும் தடுப்பூசி செலுத்தாத 306 பேரிடம் இந்த மருந்து 3 கட்டமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது. அதிக அபாயம் உள்ள கரோனா நோயாளிகளிடம் மூக்கில் ஸ்பிரே மருந்து செலுத்திய 24 மணிநேரத்தில் வைரஸ் தொற்று பாதிப்பு 94 சதவீதம் குறைந்தது. 48 மணி … Read more

குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை

குரங்கு அம்மை நோய் பாதிப்பு தொடர்பாக மருத்துவ வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அனுப்பிய கடிதத்தில், குரங்கு அம்மை பாதிப்புள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளை விமான நிலையத்தில் பரிசோதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

ஜஸ்வந்த் சிங் பயோபிக்கில் அக்‌ஷய்

மும்பை: கடந்த 1989ல் மேற்கு வங்க மாநில சுரங்கம் ஒன்றில் வெள்ளத்தில் சிக்கிய பல தொழிலாளர்களை மீட்டவர், ஜஸ்வந்த் சிங். பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் பகுதியில் கடந்த 1939ல் பிறந்த அவர், சுரங்க பொறியாளராகப் பணியாற்றினார். பிறகு 2019ல் மரணம் அடைந்தார். ரியல் ஹீரோவாகப் போற்றப்பட்ட அவரது வாழ்க்கை வரலாறு தற்போது திரைப்படமாக உருவாக்கப்படுகிறது. தினு சுரேஷ் தேசாய் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியுள்ளது. இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழிற்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு … Read more

உலக நாடுகளுக்கு உணவு வழங்குவோம் – ஐ2யு2 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி

புதுடெல்லி: உலகின் உணவு பாதுகாப்பு தேவையை பூர்த்தி செய்ய ஐ2யு2 நாடுகள் ஒன்றிணைந்து செயல்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கடந்த 2021 அக்டோபரில் இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா ஆகிய 4 நாடுகள் இணைந்து ஐ2யு2 என்ற கூட்டமைப்பை உருவாக்கின. இதன் முதல் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் 4 நாடுகளின் தலைவர்களும் காணொலி வாயிலாக பங்கேற்றனர். இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: ஐ2யு2 கூட்டமைப்பில் ஒத்த கருத்துடைய நாடுகள் … Read more