எலியைக் கொல்ல நஞ்சு தடவி வைத்த தக்காளியை நூடுல்சுடன் சேர்த்துத் தின்ற மும்பை பெண் உயிரிழப்பு

எலியைக் கொல்லத் தக்காளியில் நஞ்சு தடவியதை மறந்த பெண், அதை மேகி நூடுல்சுடன் சேர்த்துத் தானே தின்றதால் பலியான சோகம் மும்பையில் நேர்ந்துள்ளது. ரேகா நிசாத் என்கிற பெண் வீட்டில் மேகி நூடுல்ஸ் தின்ற சில மணி நேரத்தில் வயிறு குமட்டியதால் கக்கியுள்ளார். அவர் கணவர் அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துள்ளார். ஐந்து நாட்களாகச் சிகிச்சை அளித்தும் பயனளிக்காமல் புதனன்று அவர் உயிரிழந்தார். இது குறித்துக் காவல்துறை விசாரித்ததில், வீட்டில் எலியைக் கொல்லத் தக்காளிப் பழங்களில் நஞ்சு … Read more

குஜராத்தில் போதை விற்பனை மாபியா கும்பலை பாதுகாப்பது யார்?.. ராகுல் கேள்வி

புதுடெல்லி: ‘குஜராத்தில் கள்ளச் சாராயம், போதைப்பொருள் விற்பனை செய்யும் மாபியாக்களுக்கு பாதுகாப்பு தருவது யார்?’ என்று ராகுல் கேட்டுள்ளார். குஜராத்தின் பொடாட், அகமதாபாத் மாவட்டங்களில் கடந்த 25ம் தேதி ரசாயனம் கலந்த கள்ளச் சாராயம் குடித்த 42 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘வறட்சி மிகுந்த குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் ஏராளமான குடும்பங்கள் சீரழிந்துள்ளன. பல கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் தொடர்ந்து பறிமுதல் … Read more

மருத்துவமனையில் தூய்மையற்ற படுக்கை: துணைவேந்தரை படுக்கச் செய்த அமைச்சர் – வைரல் வீடியோ

அரசு மருத்துவமனையில் அழுக்காக இருந்த படுக்கையில், துணைவேந்தரை படுக்கச் செய்த பஞ்சாப் சுகாதாரத்துறை அமைச்சருக்கு பாராட்டும், விமர்சனமும் கலவையாக கிடைத்து வருகின்றன. பஞ்சாபில் முதல்வர் பகவந்த் சிங் மன் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு லஞ்சப்புகாரில் சிக்கும் அரசு அதிகாரிகள் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்யப்படுவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக, ஊழல் குற்றச்சாட்டு காரணமாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த விஜய் சிங்லா அண்மையில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், புதிதாக … Read more

'நீதி கிடைப்பது வாழ்வதுபோல் எளிதாக இருத்தல் அவசியம்' – பிரதமர் மோடி

அனைவருக்கும் எளிதாக நீதி கிடைப்பது மிகவும் முக்கியம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். அனைத்திந்திய மாவட்ட சட்ட சேவைகள் வழங்குநர்களின் முதல் கூட்டத்தின் துவக்க நாளில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “மக்களுக்கு நீதி கிடைப்பது எளிதாக இருக்க வேண்டும். அது எவ்வளவு எளிதானதாக இருக்க வேண்டும் என்றால் வாழ்வதுபோல், ஒரு தொழில் செய்வதுபோல் எளிதாக இருத்தல் அவசியம்” என்று கூறியுள்ளார். தலைநகர் டெல்லியில் நடைபெற்ற இவ்விழாவில் … Read more

குடியரசுத் தலைவரிடம் மன்னிப்பு கோரிய ஆதிர் ரஞ்சன் சவுத்ரி!

மேற்குவங்கத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி டெல்லியில் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு குறித்து சர்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் சர்ச்சை கருத்துக்கு பாஜக எம்பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு … Read more

முர்மு விவகாரத்தில் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பாஜ, காங். போட்டி போட்டு அமளி: திங்கள் வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

புதுடெல்லி: பாஜ மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்களின் கடும் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் முடங்கின. இரு அவைகளும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18ம் தேதி தொடங்கியதில் இருந்து பல்வேறு விவகாரங்களால் இரு அவைகளிலும் அலுவல்கள் நடக்காமல் முடங்கி வருகின்றன. இதற்கிடையே, ஜனாதிபதி முர்முவை ‘ராஷ்டிரபத்தினி’ என மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நேற்று முன்தினம் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக அக்கட்சியின் … Read more

மீண்டும் பயங்கரம் – சிறுவனின் காதை துண்டாக எடுத்த பிட்புல் நாய்!

உத்தரபிரதேசத்தில் பிட்புல் நாயால் மூதாட்டி ஒருவர் கொல்லப்பட்ட அதிர்ச்சி அடங்குவதற்குள்ளாக, பஞ்சாபில் ஒரு சிறுவனின் காதை பிட்புல் நாய் கடித்து பிடுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள கோட்லி பான் கிராமத்தைச் சேர்ந்தவர் பகதூர் சிங். இவர் தனது மகன் டிக்குனை (13) இன்று காலை மோட்டார் சைக்கிளில் அருகில் உள்ள கடைக்கு அழைத்துச் சென்றார். கடையில் பொருட்களை வாங்கிவிட்டு திரும்பி வரும் போது, அங்கிருந்த ஒரு வீட்டு வாசலில் பிட்புல் … Read more

அவமதிப்பு விவகாரத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியது – எம்பிக்கள் உண்ணாவிரதம் நிறைவு

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை அவமதித்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று முடங்கின. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குடியரசுத் தலைவரிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் அனுப்பி உள்ளார். மேற்குவங்கத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடந்த 27-ம் தேதி டெல்லியில் பேட்டியளித்தபோது, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இந்த விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று முன்தினம் எதிரொலித்தது. … Read more

குஜராத்திகளையும், ராஜஸ்தானிகளையும் அகற்றினால் மகாராஷ்டிராவில் பணமே இருக்காது: மகாராஷ்டிரா ஆளுநர்

குஜராத்திகளையும், ராஜஸ்தானிகளையும் மும்பை மற்றும் தானேவிலிருந்து அகற்றினால் மகாராஷ்டிராவில் பணமே இருக்காது என்றும் மும்பை இந்தியாவின் நிதி தலைநகராக இருக்காது எனவும் ஆளுநர் பகந்த் சிங் கோஷ்யாரி தெரிவித்துள்ளார். ஆளுநரின் இந்த பேச்சை டிவிட்டரில் பதிவிட்டுள்ள சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், ஆளுநர் மராத்தியர்களை இழிவுப்படுத்திவிட்டதாக தெரிவித்துள்ளார். Source link

பசுவின் கோமியம் லிட்டர் ரூ.4-க்கு கொள்முதல் செய்யும் திட்டம் : சத்தீஸ்கர் முதல்வர் தொடங்கி வைத்தார்

ராய்ப்பூர் : கால்நடை விவசாயிகளிடம் இருந்து பசுக்களின் கோமியத்தை கொள்முதல் செய்யும் திட்டத்தை சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் தொடங்கி வைத்துள்ளார். இந்தியாவிலேயே பசு கோமியம் கொள்முதல் செய்யும் முதல் மாநிலமாக சத்தீஸ்கர் மாநிலம் உருவெடுத்துள்ளது. கால்நடை விவசாயிகளிடம் இருந்து மாட்டு சாணத்தை வாங்குவதற்காக 2020ம் ஆண்டில் ‘கோதன் நியாய் யோஜனா’ திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தற்போது பசு கோமியம் கொள்முதல் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி கால்நடை விவசாயிகளிடம் இருந்து ஒரு லிட்டர் கோமியம் … Read more