உ.பி.யில் கட்டிடங்கள் இடிப்புக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிக்கப்படுவதற்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. உத்தர பிரதேசத்தில் கட்டிட இடிப்பு நடவடிக்கை, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை குறிவைத்து மேற்கொள்ளப்படுவதாக ஜமியத் உலாமா -ஹிந்த் என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தது. இது தொடர்பாக மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கு பதில் அளித்த உத்தர பிரதேச அரசு , ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக சட்டவிரோத கட்டிடங்கள் இடிக்கப்படுவது வழக்கம்’’ என தெரிவித்தது. … Read more