மேற்கு வங்க ஆசிரியர் நியமன ஊழல் | பணம், ஆவணங்கள் இருந்த நடிகை அர்பிதாவின் 4 சொகுசு கார்கள் மாயம்

கொல்கத்தா: மேற்குவங்க ஆசிரியர் நியமன ஊழல் விவகாரத்தில், கல்வி அமைச்சராக இருந்த பார்த்தா சட்டர்ஜிக்கு நெருக்கமான நடிகை அர்பிதாவின் 4 சொகுசு கார்கள், பணம் மற்றும் முக்கிய ஆவணங்களுடன் மாயமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இவற்றை தேடும் பணி நடக்கிறது. மேற்கு வங்கத்தில் நடந்த ஆசிரியர் மற்றும் ஊழியர் நியமனத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேற்கு வங்கத்தில் கல்வி அமைச்சராக இருந்த பார்த்தா சட்டர்ஜி, சட்டவிரோத ஆசிரியர் மற்றும் ஊழியர் நியமனத்தில் பெற்ற லஞ்சப் பணத்தை தனக்கு … Read more

மகாராஷ்டிரா, தெலுங்கானா மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

ஐதராபாத்: மகாராஷ்டிரா, தெலுங்கானா மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கிழக்கு கோதாவரி பகுதியில் மகா புண்ணிய சேத்திரம் கோயில் வெள்ளப்பெருக்கு நீரில் அடித்துச் செல்லப்பட்டது.

அதிமுக பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்க கோரிய வழக்கு – உச்ச நீதிமன்ற வாதங்கள் முழு விவரம்

புதுடெல்லி: அதிமுக பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்கக் கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் சென்னை உயர் நீதிமன்றமே 3 வாரங்களில் விசாரித்து தீர்வு காண வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஜூன் 23-ம் தேதி நடந்த பொதுக்குழுவில் அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்தும், ஜூலை 11-ம் … Read more

பாஜ நிர்வாகியை தொடர்ந்து மங்களூரு அருகே அடுத்த கொலை: 21ம் தேதி வரை ஊரடங்கு

பெங்களூரு: மங்களூருவில் பாஜ நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட நிலையில், மற்றொரு பிரிவை சேர்ந்த வாலிபர் படுகொலை செய்யப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. கர்நாடகாவில், மங்களூரு மாவட்டம், சூள்யா தாலுகா, பெல்லாரே கிராமத்தை சேர்ந்த பாஜ இளைஞரணி பிரமுகர் பிரவீன் நெட்டார 2 நாட்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்டார். கேரளாவில் இருந்த வந்த கும்பல் இவரை கொன்றதாக பதற்றம் ஏற்பட்டுள்ளது. அவரின் இறுதி ஊர்வலத்தில் போலீசார் நடத்திய தடியடியில், ஆர்எஸ்எஸ், இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் காயமடைந்தனர். இதற்கு காரணமான போலீசார் … Read more

குடியரசுத் தலைவருடன் அமைச்சர்கள் சந்திப்பு

புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை அவரது மாளிகையில் நேற்று சந்தித்து பேசினார். குடியரசுத் தலைவர் அழைப்பின் பேரில் சந்தித்ததாக அவர் கூறியுள்ளார். அவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்துப் பேசினார். குடியரசுத் தலைவர் அழைப்பின்பேரில் அவரை சந்தித்தாக இரானியும் குறிப்பிட்டுள்ளார். ஒரே நாளில் 2 மத்திய அமைச்சர்கள் அடுத்தடுத்து குடியரசுத் தலைவர் முர்முவை சந்தித்துள்ளது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி … Read more

நாட்டின் 75வது சுதந்திர தின விழா கோலாகலம்… கடலுக்கடியில் தேசியக் கொடி ஏற்றும் ஒத்திகை!

நாட்டின் 75வது சுதந்நிர தினத்தை முன்னிட்டு இந்திய கடலோர காவல்படை கடலுக்கடியில் தேசியக் கொடியை ஏற்றும் ஒத்திகையை நிகழ்த்தியது. ஹர் கர் திரங்கா பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த ஒத்திகை நிகழ்த்தி காட்டப்பட்டது. மக்களின் இதயங்களில் தேச பக்தி உணர்வைத் தூண்டுவதும், இந்திய தேசியக் கொடி பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவதும் தான் இந்த ஒத்திகையின் நோக்கம் என்று இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பிரச்சாரத்தை பிரதமர் மோடி கடந்த 22ந்தேதி துவக்கி வைத்தார் என்பது … Read more

கல்வான் பள்ளத்தாக்கு மோதல்; பலியான சீன வீரர்கள் எண்ணிக்கை எவ்வளவு?.. விவரம் கூற ராணுவம் மறுப்பு

புதுடெல்லி: கல்வான் பள்ளத்தாக்கு மோதலின்போது கொல்லப்பட்ட சீன ராணுவ வீரர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்ற தகவலை கூற, ஒன்றிய தகவல் ஆணையம் மறுத்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களை இந்திய வீரர்கள் தடுத்தனர். அப்போது நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ஆனால், சீனா வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்கு மோதலின்போது உயிரிழந்த சீன வீரர்கள் … Read more

மேற்குவங்க ஆசிரியர் நியமனத்தில் நடந்தது என்ன?

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கடந்த 2014 – 2016 வரை நடந்த அரசு ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. தகுதித் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மெரிட் பட்டியலில் இடம் பெற்றனர். பலர் வெற்று விடைத்தாள்களை, பெயர், முகவரியுடன் சமர்ப்பித்து, உதவி ஆசிரியர்களாக நியமன ஆணைகளை பெற்றனர். இதுகுறித்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் ஏராளமான புகார் மனுக்கள் குவிந்தன. இந்நிலையில் 13,000 குரூப் டி ஊழியர்கள் நியமன குழுவின் பதவிக் காலம் 2019-ம் ஆண்டுடன் … Read more

மாணவர்களுக்கு உணவு வழங்கி அவர்களுடன் அமர்ந்து உணவருந்திய அசாம் முதலமைச்சர்

அசாமில் பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கும் அட்சயப் பாத்திரம் திட்டத்தின் சமையற்கூடத்தைத் தொடக்கி வைத்த முதலமைச்சர் ஹேமந்த பிஸ்வ சர்மா மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். அசாமில் ஏற்கெனவே 54 இடங்களில் அட்சயப் பாத்திரம் சமையற் கூடங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஜோர்காட்டில் 55ஆவது சமையற்கூடத்தை முதலமைச்சர் தொடக்கி வைத்தார். Source link

உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்த 127 பேரில் 66 நீதிபதிகள் நியமனம்: நாடாளுமன்றத்தில் அரசு தகவல்

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்த 127 பேரில் 66 நீதிபதிகளை மட்டும் ஒன்றிய அரசு நியமித்துள்ளது. மக்களவையில் எழுத்துப்பூர்வமாக கேட்கப்பட்ட கேள்விக்கு, ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: கடந்த 2021 டிசம்பர் 1ம் தேதி முதல் கடந்த 26ம் தேதி வரை உச்ச நீதிமன்ற கொலிஜியம் 140 பேரை நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்துள்ளது. இதில், 127 புதிய பரிந்துரைகளில் 61 நீதிபதிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 66 பெயர்கள் சமீபத்தில் … Read more