சியாச்சினில் காணாமல்போன ராணுவ வீரரின் உடல் 38 ஆண்டுக்கு பிறகு மீட்பு
டேராடூன்: சியாச்சினில் காணாமல்போன இந்திய ராணுவ வீரர் ஒருவரின் உடல் 38 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உத்தராகண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டம், துவாரஹத் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் ஹர்போலா. இவர் ராணுவத்தின் 19-வது குமாவோன் படைப்பிரிவில் 1975-ல் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் 1984-ல் ‘ஆபரேஷன் மேகதூத்’ ராணுவ நடவடிக்கையின் கீழ் பாகிஸ்தானுக்கு எதிராகப் போரிட 20 வீரர்கள் கொண்ட குழுவினர் உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சின் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் பனிப் புயலில் சிக்கி இறந்தனர். … Read more