சுதந்திர தினத்தை ஒட்டி சாதனை: உயர் நீதிமன்றங்களில் 37 புதிய நீதிபதிகள் நியமனம்

சுதந்திர தினத்தை ஒட்டி நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களுக்கு 37 புதிய நீதிபதிகளை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை நாட்டில் உள்ள பல்வேறு உயர் நீதிமன்றங்களிலும் மொத்தம் 138 நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த வெள்ளியன்று பல்வேறு உயர் நீதிமன்றங்களுக்கு 26 நீதிபதிகள் நியமிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக, இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே, பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்றங்களுக்கு 11 நீதிபதிகள் நியமிக்கப்பட்டதையும் சேர்த்து, இதுவரை நாட்டில் உள்ள பல்வேறு உயர் நீதிமன்றங்களிலும் மொத்தம் 138 நியமனங்கள் … Read more

காந்தி, நேரு புகழுக்கு அவதூறு – மத்திய அரசை சாடிய சோனியா காந்தி

காந்தி மற்றும் நேரு புகழுக்கு அவதூறு ஏற்படுத்த மத்திய அரசு முயற்சி செய்கிறது என காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார். இந்தியாவின் 76 ஆவது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார். மேலும், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது: அறிவியல், கல்வி, சுகாதாரம் மற்றும் தகவல் துறைகளில் கடந்த … Read more

சுதந்திர வேட்கையில் அடிப்பணியாத இந்தியா : சில முக்கிய நிகழ்வுகள்!

1947 ஆகஸ்ட் 14 நள்ளிரவு.., ” இந்திய நாட்டின் முதல் பிரதமராக சுதந்திர கொடியை முதலில் ஏற்றிய பிரதமராக மறைந்த ஜவஹர்லால் நேரு உரையாற்றினார். அப்போது அவர் “நீண்ட நெடுங்காலத்துக்கு முன் “விதியோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டோம்”. அந்த ஒப்பந்தத்திலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ளும் நேரம் வந்துவிட்டது. இரவு 12 மணி அடிக்கும்போது உலகம் உறங்கி கொண்டிருக்கும் நேரத்தில் இந்தியா உயிர்த்துடிப்போடு சுதந்திரத்தில் கண் விழிக்கும்” என உறுதிமொழி எடுத்தார்.  அந்த உறுதி மொழிக்குப் பிறகு ஆண்டு … Read more

சுதந்திர தினத்தை முன்னிட்டு பூமியில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் பறக்கவிடப்பட்ட தேசியக் கொடி!

சுதந்திர தினத்தை முன்னிட்டு பூமியில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டது. வாயு நிரப்பப்பட்ட பலூன் மூலம் சுமார் ஒரு லட்சத்து ஆறாயிரம் அடி உயரத்தில் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு, மூவர்ணக்கொடியை பறக்கவிட்டது. ‘என்.எஸ்.எல்.வி. – பலூன்’ எனப்படும் பலூன் செயற்கைக்கோள் மூலம் பூமிக்கு வெளியே தேசியக் கொடி பறந்தது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விஞ்ஞானியான ராஜா சாரி, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தபோது, அங்கிருந்த இந்திய தேசியக் கொடியின் … Read more

2022 ஏப்ரல் – ஜூலை ஆகிய 4 மாதங்களில் நேரடி வரி வருவாய் 40% உயர்வு: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: 2022 ஏப்ரல் – ஜூலை ஆகிய 4 மாதங்களில் ஒன்றிய அரசின் நேரடி வரி வருவாய் 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, நடப்பு நிதி ஆண்டின் முதல் 4 மாதங்களில் ரூ.5 லட்சம் கோடியாக நேரடி வரி வருவாய் அதிகரித்துள்ளதாக அரசு கூறியுள்ளது. 2022-23ம் ஆண்டுக்கான நேரடி வரி வசூல் இலக்கான ரூ.14.2 லட்சம் கோடியில் ரூ.5 லட்சம் கோடி என்பது 35 சதவீதம் ஆகும். தனிநபர் … Read more

சுதந்திர தின உரை | டெலி பிராம்ப்டரை தவிர்த்துவிட்டு காகித குறிப்புகளை பயன்படுத்திய பிரதமர் மோடி

புதுடெல்லி: நாட்டின் சுதந்திர தின விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி செங்கோட்டையில் கொடி ஏற்றிவிட்டு, நாட்டு மக்களுக்காக உரையாற்றி இருந்தார். அப்போது தனது உரைக்கான குறிப்புகளுக்காக காகிதத்தை பயன்படுத்தி இருந்தார். வழக்கமாக பிரதமர் மோடி தனது சிறப்புரை பேச்சுகளின் போது டெலி பிராம்ப்டரை பயன்படுத்துவது வழக்கம். பாரம்பரியமிக்க செங்கோட்டையில் 76-வது சுதந்திர தின விழாவில் நாட்டின் பிரதமர் என்ற முறையில் கொடியை ஏற்றிய கையோடு சுமார் 1 மணி நேரம் 23 நிமிடங்கள் வரை பேசி இருந்தார். … Read more

SBI Hikes MCLR Rates: கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் பாதிப்பு

வட்டி விகித உயர்வு: இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ரெப்போ விகிதத்தை உயர்த்திய பிறகு, வங்கிகள் கடன் வட்டி விகிதங்களை அதிகரித்து வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து அதிர்ச்சியை அளித்து வருகிறது. தற்போது நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் பெயரும் இந்த வங்கிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. எஸ்பிஐ வங்கி எம்சிஎல்ஆர் எனப்படும் கடனுக்கான இறுதிநிலை செலவு … Read more

குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 0.20% உயர்த்தியது எஸ்.பி.ஐ: அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்..!!

டெல்லி: பாரத் ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 0.20 சதவீதம் உயர்த்தி உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்று எஸ்பிஐ. இந்த நிறுவனம் அடிக்கடி தன்னுடைய கடன் வட்டி விகிதத்தில் அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது. எம்.சி.எல்.ஆர். எனப்படும் வங்கிக்கடன் வட்டி விகிதத்தை 3 மாதக் கடனுக்கு 7.15 சதவீதத்தில் இருந்து 7.35 சதவீதமாக எஸ்.பி.ஐ. அறிவித்துள்ளது. 6 மாத கால வங்கிக் கடனுக்கான வட்டி விகிதம் 7.45 சதவீதத்தில் இருந்து … Read more

இந்தியா @ 75 – நகர்புற வளர்ச்சி: ஸ்மாட்டி சிட்டிகளும் மெட்ரோ ரயில்களும்

இந்தியா 1947-ம் ஆண்டு சுதந்திரம் பெற்றபோது நாட்டில் பெரும்பாலான பகுதிகள் கிராமங்கள்தான். கிராமங்களின் நாடாகதான் இந்தியா இருந்தது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு சென்னைதான். இந்த 75 ஆண்டுகளில் சென்னை பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. 75 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சென்னையின் அடையாளமாக தற்போது இருப்பது ஆங்கிலேயர் கால கட்டிடங்கள்தான். அந்த அளவுக்கு இந்தியாவின் நகர்புறங்களில் இந்த 75 ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்து உள்ளன. ஆங்கிலேயர் கால கட்டிடங்களுக்கு சவால் விடும் வகையில் சென்னையில் மட்டுமல்ல, நாடு … Read more

ஏப்ரல் – ஜூலையில் ஒன்றிய அரசின் நேரடி வரி வருவாய் 40% அதிகரிப்பு..!!

டெல்லி: 2022 ஏப்ரல் – ஜூலை ஆகிய 4 மாதங்களில் ஒன்றிய அரசின் நேரடி வரி வருவாய் 40% அதிகரித்துள்ளதாக அரசு தகவல் தெரிவித்துள்ளது. 2022-23ம் ஆண்டுக்கான நேரடி வரி வருவாய் வசூல் இலக்கண ரூ.14.2 லட்சம் கோடியில் ரூ.5 லட்சம் கோடி என்பது 35% ஆகும். தனிநபர் வருமான வரி வருவாய் 4 மாதங்களில் 52% உயர்ந்து ரூ.2.67 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.