பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய “செவாலியே” விருதை பெற்றார் காங். எம்.பி. சசி தரூர்!

காங்கிரஸ் எம்பி சசி தரூர் தனது எழுத்து மற்றும் பேச்சுக்காக பிரான்ஸ் நாட்டின் உயரிய சிவிலியன் விருதான லெஜியன் ஆஃப் ஹானர் விருதைப் பெற்றுள்ளார். திருவனந்தபுரம் மக்களவை தொகுதியை காங்கிரஸ் எம்பியான சசி தரூர் மிகச்சிறந்த எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் அறியப்படுகிறார். சிக்கலான பல ஆங்கில வார்த்தைகளை எழுத்திலும் பேச்சிலும் பயன்படுத்தி பலரது சிந்தனைக்கு தீனிபோடுவது அவரது இயல்பாகும். “இந்தியாவின் இருண்ட காலம் – இந்தியாவில் பிரிட்டிஷ் அரசாங்கம்” (An Era of Darkness: The British Empire … Read more

“விலங்குகள் கூட இந்த உணவை சாப்பிடாது” – கண்கலங்கிய உ.பி காவலர் | வைரல் வீடியோ

ஃபிரோசாபாத்: தங்களுக்கு வழங்கப்பட்ட உணவின் தரம் குறித்து கண்ணீர் மல்க புகார் தெரிவித்துள்ளார் உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த காவலர் ஒருவர். அந்த வீடியோ இப்போது வைரலாகி, பலரது கவனத்தை பெற்றுள்ளது. அந்த வீடியோவில் உணவின் தரம் குறித்து தனது அதிருப்தியை காவலர் மனோஜ் குமார் என தெரிவித்துள்ளார். அவர் தனக்கு வழங்கப்பட்ட உணவை கையில் ஏந்தியபடி சாலையில் பயணித்த மக்களிடம் அதனை காண்பித்துள்ளார். அதோடு சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் அமர்ந்தபடி தர்ணா போராட்டத்திலும் … Read more

உத்தரபிரதேசம் யமுனா நதியில் படகு கவிழ்ந்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு

லக்னோ: உத்தரபிரதேசத்தில் பாண்டா பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். யமுனா நதியில் சென்று கொண்டிருந்த படகு பழுது காரணமாக நீரில் கவிழ்ந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. நீரில் மூழ்கிய 40-க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. 

ஆகஸ்ட் 13 முதல் 15-ம் தேதி வரை வீடுதோறும் தேசியக் கொடி ஏற்ற மக்களை ஊக்குவிக்க வேண்டும் – மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்

புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடி ஏற்ற வீட்டுக்கு வீடு தேசியக் கொடி என்ற பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் மனதில் தேசப்பக்தி உணர்வை ஏற்படுத்துவதும், நாட்டுக்காக அயராது உழைத்தவர்களின் பங்களிப்பை நினைத்து பார்க்கச் செய்வதும்தான் இந்த நடவடிக்கையின் நோக்கம். அதனால் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு நன்றி தெரிவிக்க ஆகஸ்ட் 13 முதல் 15-ம் தேதி வரை அனைத்து மக்களும் தங்கள் வீடுகளில் … Read more

பாஜகவின் விமர்சனம் நகைப்புக்குறியது!: குடியரசு துணை தலைவர் பதவியை என்றுமே விரும்பியது இல்லை..பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திட்டவட்டம்..!!

பாட்னா: குடியரசு துணை தலைவர் பதவி கனவு நிறைவேறாததால் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டதாக பாரதிய ஜனதா கட்சியின் விமர்சனம் நகைப்புக்குறியது என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். சமீபத்தில் பாரதிய ஜனதா உடனான உறவு முறித்துக்கொண்டு நிதிஷ்குமார் ஆர்.ஜே.டி.யின் மகா கூட்டணியில் இணைந்து 8வது முறையாக பிகார் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். இதனிடையே, நிதிஷ்குமாரின் விலகல் குறித்து பேசிய பாஜக மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி, குடியரசுத் துணை தலைவர் பதவிக்கு போட்டியிட நிதிஷ்குமார் விரும்பியதாக தெரிவித்தார். … Read more

மசினகுடி தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது..!!

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  மேலும் ஊட்டியில், அருகே உள்ள கிளென் மார்கன் அணை அதன், முழு கொள்ளளவை எட்டியதால், அணையிலிருந்து சுமார் 1,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  இதைத்தொடர்ந்து, வெள்ளப்பெருக்கு காரணமாக மசினகுடி தரைப்பாலம் முழுவதும்  மூழ்கியுள்ளது. இதனால், அங்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. Source link

75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்; மூவர்ண கொடியில் மின்னும் வேலூர் கோட்டை ..!!

நமது நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதையொட்டி, இந்த ஆண்டு சுதந்திர தினம் ‘சுதந்திர தின அமுத பெருவிழா’ (Azadi Ka Amrit Mahotsav) என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, இந்தியா முழுவதும் நமது தேசப்பற்றை பறை சாற்றும் விதமாக, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு மராட்டிய மாநிலத்தில் உள்ள பாட்ஷா அணை தேசியக்கொடி நிறத்தில் தற்போது ஒளிர ஆரம்பித்திருப்பது நாட்டு மக்களின் மனதில் தேசபக்தி உணர்வைத் தூண்டும் வகையில் உள்ளது. பாட்சா அணை தேசிய கொடி வண்ணத்தில் ஒளிரும் வீடியோவை … Read more

சமூக ஆர்வலர் வரவர ராவுக்கு இடைக்கால ஜாமீன்

புதுடெல்லி: ஜனவரி 1, 2018 அன்று மகாராஷ்டிர மாநிலம் பீமாகோரேகானில் நடைபெற்ற கலவரத்துக்கு காரணமாக இருந்ததாகக் கூறி, சமூக ஆர்வலர் வரவர ராவ் 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார். கடந்தாண்டு பிப்ரவரி மாதம் மும்பை உயர் நீதிமன்றம் அவரை இடைக்கால ஜாமீனில் விடுவித்தது. தனக்கு நிரந்தர ஜாமீன் வழங்க வேண்டும் என்று வரவர ராவ் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், மும்பைஉயர் நீதிமன்றம் அவரது கோரிக்கையை நிராகரித்தது. இதை எதிர்த்து வரவர ராவ்உச்ச நீதிமன்றத்தில் … Read more

இலவச திட்டங்கள் குறித்து உச்சநீதிமன்றம் சொல்வது என்ன..? – அரசியல் கட்சிகள் ஷாக்..!

இந்தியா போன்ற ஒரு நாட்டில் இலவசங்கள் கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், அரசியல் கட்சிகள் இலவசங்களை தேர்தல் வாக்குறுதிகளாக வழங்க கூடாது என்றும், அப்படி வழங்கினால் தேர்தல் ஆணையம் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அந்த கட்சிக்கான அங்கீகாரத்தை ரத்து செய்யஉத்தரவிட வேண்டும் என்றுகோரியிருந்தார். அதேநேரம், ஆம் ஆத்மி உள்ளிட்ட … Read more

இந்தியாவின் முதல் மெய்நிகர் அருங்காட்சியகத்தை துவக்கி வைத்தார் இஸ்ரோ தலைவர் சோம்நாத்..!

இந்தியாவின் முதல் மெய்நிகர் விண்வெளி அருங்காட்சியகத்தை, இஸ்ரோ தலைவர் சோம்நாத் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தார். நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடப்படும் வேளையில், இஸ்ரோவின் திட்டங்களை டிஜிட்டல் முறையில் காட்சிப்படுத்தும் புதுமையான யோசனையை இஸ்ரோ முன்வைத்துள்ளது. இத்தளத்தில், இஸ்ரோவின் செயற்கைக்கோள், ராக்கெட்டுகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படம், வீடியோக்கள் இடம்பிடித்துள்ளன.  Source link