நாட்டை உலுக்கிய பில்கிஸ் பானோ வழக்கு: 11 குற்றவாளிகளையும் விடுதலை செய்தது குஜராத் அரசு
காந்தி நகர்: 2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தில் பில்கிஸ் பானோ என்ற பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரைக் கொன்ற வழக்கில் குற்றவாளிகள் என நிரூபணமாகி ஆயுள் தண்டனை பெற்றவர்களை குஜராத் அரசு விடுதலை செய்துள்ளது. பில்கிஸ் பானோ கூட்டுப் வன்கொடுமை, கொலை வழக்கில் குற்றவாளிகள் என்று நிரூபணம் செய்யப்பட்டு சிறைத் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளிகளில் ஒருவர் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் … Read more