இமாச்சலப் பிரதேசத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு
சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். 20 பேர் காயமடைந்தனர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். 20 பேர் காயமடைந்தனர்.
கொல்கத்தா: நடிகரும் பாஜக மூத்த தலைவருமான மிதுன் சக்கரவர்த்தி நேற்று கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் 38 எம்எல்ஏக்கள் தற்போது பாஜகவுடன் தொடர்பில் உள்ளனர். இவர்களில் 21 பேர் என்னுடன் நேரடித் தொடர்பில் உள்ளனர். மகாராஷ்டிராவில் ஏற்பட்டது போன்ற சூழல் மேற்கு வங்கத்தில் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். ஏன் நாளையே கூட ஏற்படலாம். நாட்டில் 18 மாநிலங்களில் பாஜக ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. இன்னும் சில மாநிலங்களில் பாஜகவின் கொடி வெகு விரைவில் பறக்கும். … Read more
இந்தியாவின் பணக்கார பெண்கள் பட்டியலில் தொடர்ந்து 2-வது ஆண்டாக ஹெச்.சி.எல். தலைவர் ரோஷினி நாடார் மல்கோத்ரா முதலிடத்தில் நீடிக்கிறார். தனியார் அமைப்பு நடத்திய கணிப்பில் ரோஷினியின் சொத்து மதிப்பு 84 ஆயிரத்து 330 கோடி ரூபாயாக கணக்கிடப்பட்டுள்ளது. இ-காமர்ஸ் நிறுவனமான Nykaa-வின் சி.இ.ஒ. பல்குனி நாயர் 57 ஆயிரத்து 520 கோடி ரூபாய் சொத்துடன் 2வது இடத்திலும், Biocon நிறுவனர் கிரண் மஜூம்தர் ஷா 3-வது இடத்திலும் நீடிக்கிறார். Source link
பாட்னா: பீகார் தர்பங்கா அருகே ஷங்கர்பூரில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். புல்வாரி ஷெரீப் வழக்கில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் தொடர்பு பற்றி என்ஐஏ விசாரிக்கிறது.
சாகர்: 30 மாணவர்களுக்கு ஒரே ஒரு ஊசியைப் பயன்படுத்தி கரோனா தடுப்பூசி செலுத்திய மருத்துவர் பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். மத்தியப்பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. சாகர் மாவட்டத்தில் உள்ள ஜெயின் பப்ளிக் பள்ளியில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் மருத்துவர் ஜிதேந்திரா தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் அவர் தடுப்பூசி செலுத்தும் போது ஒரே ஊசியை மீண்டும் மீண்டும் அனைத்து மாணவர்களுக்கும் பயன்படுத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஒருவர் அங்கு … Read more
புதுடெல்லி: ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் பயண கட்டண சலுகை வழங்கப்பட உள்ளது. நாடு முழுவதும் ரயில்களில் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட, மூத்த குடிமக்களுக்கான பயண கட்டண சலுகை மீண்டும் வழங்காததால், ஒன்றிய அரசு சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. இந்நிலையில், நிறுத்தப்பட்ட இந்த சலுகையை மூத்த குடிமக்களுக்கு மீண்டும் வழங்க ரயில்வே பரிசீலித்து வருகிறது. ஆனால், இந்த சலுகைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. கொரோனாவுக்கு முன்பு வரையில், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 50 சதவீதமும், … Read more
புதுடெல்லி: நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் சம்மன் அனுப்புதல் மற்றும் கைது செய்யும் அமலாக்கத்துறையின் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அமலாக்கத்துறை இயக்குநரகத்தின் சம்மன், கைது, பறிமுதல் மற்றும் விசாரணை நடவடிக்கைகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் கூறியிருப்பதாவது: நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை இயக்குநரகத்துக்கு உள்ள கைது, பறிமுதல், ஜாமீன் அளிக்கும் அதிகாரங்கள் எல்லாம் குற்றவியல் நடைமுறை சட்ட விதிமுறை வரம்புக்கு அப்பாற்பட்டவையாக உள்ளன. … Read more
மத்திய பிரதேச மாநிலம் சாகரில் ஒரு முறை பயன்படுத்தக் கூடிய சிரிஞ்சை கொண்டு 30 மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது. ஒரு சிரிஞ்சை கொண்டு தடுப்பூசி செலுத்தியது குறித்து கேள்வி கேட்ட மாணவர்களின் பெற்றோரிடம், தன் மேலதிகாரிகள் ஒரு சிரீஞ்ச் மட்டும் கொடுத்ததாகவும், அதைக் கொண்டே அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த உத்தரவிட்டதாகவும் செவிலியர் கூறும் வீடியோ வெளியாகி உள்ளது. வீடியோ ஆதாரத்தைக் கொண்டு செவிலியர் ஜிதேந்திரா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து … Read more
டெல்லி : தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி பயணிக்கும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டண சலுகை வழங்கும் வகையில் மாதாந்திர பயண அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களுக்கு விதிக்கப்படும் சுங்க கட்டணம் தொடர்பாக பாராளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு, ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்து பூர்வமாக பதில் அளித்தார். அதில் தெரிவித்துள்ளதாவது:’தேசிய நெடுஞ்சாலை … Read more
நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சஸ்பெண்ட் எம்.பி.க்களை கொசுக்கள் அலற விட்டுள்ளன. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 19-ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் ஆரம்பித்த நாள் முதலாக அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, ஜிஎஸ்டி வரி அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் மக்களவையும், மாநிலங்களவையும் தொடர்ந்து முடங்கி வருகின்றன. இதனிடையே, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு அவை மாண்பை சீர்குலைத்ததாக கூறி காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, … Read more