நாடாளுமன்றத்துக்கு வெளியே போராடும் எம்.பி.க்களை அலறவிடும் கொசுக்கள்!
நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சஸ்பெண்ட் எம்.பி.க்களை கொசுக்கள் அலற விட்டுள்ளன. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 19-ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் ஆரம்பித்த நாள் முதலாக அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, ஜிஎஸ்டி வரி அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் மக்களவையும், மாநிலங்களவையும் தொடர்ந்து முடங்கி வருகின்றன. இதனிடையே, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு அவை மாண்பை சீர்குலைத்ததாக கூறி காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, … Read more