கர்நாடகா: தொடர் மழை எதிரொலி – பால்போல் பொங்கி வழியும் சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி

கர்நாடகாவில் பெய்யும் கனமழை காரணமாக சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சியில் பால்போல் நுரை பொங்கி வழிகிறது. கர்நாடகா மாநிலத்தில் கடந்த 10 நாட்களாக பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக மண்டியா மாவட்டத்தில் உள்ள கேஆர்எஸ் அணை நிரம்பி வருகிறது. அதேபோல், மைசூர் மாவட்டம் கபினி அணையிலும் நீர் நிரம்பி வருகிறது. இந்த இரு அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு கடந்த இரண்டு நாட்களாக ஒரு லட்சம் கன அடிக்கு மேலாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால், கேஆர்எஸ் அணையில் … Read more

நாடு முழுவதும் பதினெட்டு வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

புதுடெல்லி: பதினெட்டு வயதுக்கு மேற்பட்டோருக்கு, கரோனா பூஸ்டர் தடுப்பூ சியை இலவசமாக செலுத்தும் பணி நாடு முழுவதும் நேற்று தொடங்கியது. நாடு விடுதலை அடைந்து 75-ம் ஆண்டு நிறைவதையொட்டி, நாடு முழுவதும் உள்ள அரசு கரோனா தடுப்பூசி மையங்களில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நேற்று முதல் 75 நாட்களுக்கு கரோனா பூஸ்டர் தடுப்பூசி இலவமாக செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அமைச்சர் தொடங்கினார் அதன்படி இந்த கரோனா தடுப்பூசி முகாமை டெல்லியில் உள்ள நிர்மன் பவனில் … Read more

குடியரசு தலைவர் தேர்தல்: யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆம் ஆத்மி ஆதரவு!

குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு, ஆம் ஆத்மி கட்சி ஆதரவு அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்திய திருநாட்டின் 14வது குடியரசுத் தலைவராக, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் பதவி வகிக்கிறார். இவரது பதவிக் காலம், வரும் 24 ஆம் தேதி முடிவடைகிறது. இதை அடுத்து, நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், வரும் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள், வரும் 21 … Read more

ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர முயற்சி; 3 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவல்; கேரள நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம்; ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்வதற்காக சிரியாவுக்கு செல்லவும், பல இளைஞர்களை இந்த இயக்கத்தில் சேர்ப்பதற்காக கொண்டு செல்லவும் திட்டமிட்டிருந்த கண்ணூரை சேர்ந்த 3 பேருக்கு என்ஐஏ நீதிமன்றம் 7 ஆண்டு கடுங்காவல் சிறை மற்றும் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன் கேரளாவிலிருந்து பெண்கள் உள்பட 30க்கும் மேற்பட்டோர் சிரியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு சென்று ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்ததாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் இவர்களில் பலர் … Read more

மோடி அரசை கவிழக்க சதி செய்தவர் தீசல்வாட்- நீதிமன்றத்தில் குஜராத் போலீஸ் வாதம்

குஜராத் கலவரத்துக்கு பிறகு அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான மாநில அரசை கவிழ்க்க சதி செய்ததாக சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா தீசல்வாட் மீது அம்மாநில காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் தொடர்ச்சியாக மிகப்பெரிய கலவரம் வெடித்தது. இந்தக் கலவரத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இந்தக் கலவரத்தை தடுக்க அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி எந்தவித … Read more

மக்களவை சபாநாயகர் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்

புதுடெல்லி: மக்களவையை சுமுகமாக நடத்துவது தொடர்பாக கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த நாடாளுமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று கூட்டியுள்ளார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் ஜூலை 18-ம் தேதி முதல் ஆகஸ்ட் 18-ம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து மழைக்கால கூட்டத் தொடரில் மக்களவையை சுமுகமாக நடத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க சபாநாயகர் ஓம் பிர்லா இந்தக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். மாலை 4 மணிக்கு கூட்டம் நடைபெறவுள்ளது. … Read more

ஆண்டுக்கு 2 கோடி வேலைகள் எங்கே?: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

புதுடெல்லி: பிரதமரே ஆண்டுக்கு 2 கோடி வேலைகள் எங்கே என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.நாட்டில் வேலையின்மை திண்டாட்டம் தொடர்பாக ராகுல் காந்தி புள்ளி விவரங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 2017-18 முதல் 2021-22 வரையிலான ஐந்து ஆண்டுகளில் வேலையின்மை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் தரவுகளின் அடிப்படையிலான வரைபடத்தைப் ட்விட்டரில் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார். அந்த வரைபடத்தில் 2017-2018ம் ஆண்டில் 21% ஆக இருந்த வேலையின்மை, … Read more

மோடி – யோகி அரசு வளர்ச்சியை நகரங்களுக்கு மட்டுமல்ல கிராமங்களுக்கும் எடுத்துச் செல்லும்: பிரதமர் பேச்சு

லக்னோ: மோடி-யோகி அரசு வளர்ச்சியை உத்தரப்பிரதேச நகரங்களில் மட்டுமல்ல கிராமங்களிலும் உறுதி செய்யும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் புதிதாக நான்கு வழி விரைவுச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச விரைவுச்சாலை தொழில் வளர்ச்சி ஆணையம் சார்பில் இந்த விரைவுச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் இந்த சாலைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அதன்பின் பணிகள் தொடங்கப்பட்டு 28 மாதங்கள் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. சுமார் 14 ஆயிரத்து … Read more

தமிழ்நாடு, சத்தீஸ்கர் எஸ்.சி, எஸ்.டி பட்டியல் திருத்த மசோதா அறிமுகம்: மக்களவை செயலாளா் வெளியிட்டுள்ள குறிப்பில் அறிவிப்பு

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தமிழ்நாடு மற்றும் சத்தீஸ்கருக்கான எஸ்.சி, எஸ்.டி பட்டியலில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுக செய்ய உள்ளது. நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நாளை மறுதினம் தொடங்கி ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் ஓன்றிய அரசு அறிமுக செய்ய உள்ள புதிய மசோதாக்கள் விவரங்களை மக்களவை செயலாளர் வெளியிட்டிருக்கிறார். நகராட்சி அளவிலான வளர்ச்சி திட்டங்களை கொண்ட கண்டோன்மெண்ட் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக அதில் … Read more

முன்விரோதம் காரணமாக உ.பி., மசூதியினுள் முதியவர் சுட்டுக் கொலை

புதுடெல்லி: உத்தரப்பிரதேசம் மேற்குப்பகுதியின் மசூதியினுள் முதியவர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பபட்டார். பாதுகாப்பானதாகக் கருதப்பட்ட ஒரே இடமான மசூதியில் நடத்தப்பட்ட கொலையால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது. உ.பி.,யின் புலந்ஷெஹர் மாவட்டத்தில் அமைந்துள்ள கூர்ஜா. அலிகருக்கு அருகிலுள்ள இந்த சிறிய நகரம், முகலாயர் காலம் முதல் பீங்கான் பொருள் தயாரிப்பிற்கு பெயர்போனது. இங்குள்ள ஷேக் பென் பகுதிவாசி தொழிலதிபர்களில் ஒருவராக வாழ்ந்தவர் முகம்மது இதிரீஸ்(65). இவர் நேற்று காலை வழக்கம் போல், அருகிலுள்ள மசூதியில் விடியற்காலை தொழுகைக்கு சென்றுள்ளார். தொழுகைக்குப் … Read more