பினராயி விஜயனின் வீட்டுக்கு ரகசிய பேச்சுவார்த்தை நடத்த நான் தனியாக சென்றேன்; சொப்னா பரபரப்பு தகவல்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக நீதிமன்றத்தில் சொப்னா ரகசிய வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து பினராயி விஜயன் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.இந்த நிலையில் கொச்சியில் சொப்னா நிருபர்களிடம் கூறியது: திருவனந்தபுரத்தில் உள்ள முதல்வர் பினராயி விஜயனின் அரசு இல்லத்திற்கு அமீரக துணைத் தூதருடனும், நான் தனியாகவும் பலமுறை சென்றுள்ளேன். இதற்கு மத்திய வெளியுறவுத்துறையின் அனுமதி கிடையாது.அவை அனைத்தும் ரகசிய … Read more

யார் இந்த தீஸ்தா சீதல்வாட்? – குஜராத் கலவர வழக்கு முதல் கைது பின்புலம் வரை

கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி மீதான வழக்கை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் மனுதாரராக இருந்த சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா சீதல்வாட்டை குஜராத் போலீஸார் கைது செய்தனர். குஜராத் கலவரம் தொடர்பாக பொய் ஆதாரங்கள், சாட்சிகளை உருவாக்கிய வழக்கில் தீஸ்தா மட்டுமன்றி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் ஸ்ரீகுமார், சஞ்சீவ் பட் ஆகியோரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் சஞ்சீவ் பட் சிறையில் … Read more

மாகாராஷ்டிரா அரசியல் நெருக்கடி: ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்த உத்தவ் தாக்கரே!

மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை அம்மாநில ஆளுநர் பிகத் சிங் கோஷியாரியாவிடம் அவர் சமர்பித்துள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடையில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்வதாக அறிவித்தார். மகாராஷ்டிர மாநில அரசியல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. ஆளும் கூட்டணி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அசாம் மாநிலத்தில் உள்ளனர். அவர்களுடன் இணைந்து … Read more

‘டுவிட்டர்’ நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு இறுதி கெடு: சட்டப் பாதுகாப்பை இழக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை

புதுடெல்லி: இதுவரை பிறப்பித்துள்ள உத்தரவுகளை நிறைவேற்ற, ‘டுவிட்டர்’ சமூக வலை தள நிறுவனத்துக்கு ஒன்றிய அரசு, ஜூலை 4ம் தேதி வரை இறுதி கெடு விதித்துள்ளது. சமூக வலைதளங்கள், இணைய பொழுதுபோக்கு தளங்களை கட்டுப்படுத்தும் வகையில், தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, பொதுமக்கள் புகார் தெரிவிக்க வசதி, அரசு அமைப்புகள் ஆட்சேபிக்கும் பதிவுகளை நீக்க வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் உள்ளன. இதை நிறைவேற்ற சமூக வலை தளங்கள் முதலில் எதிர்ப்பு தெரிவித்தன. அதன்பிறகு … Read more

ஆதாருடன் பான் எண்ணை இணைத்துவிட்டீர்களா? இனி இரு மடங்கு அபராதம்

ஆதாருடன் பான் எண்ணை இணைக்காவிட்டால் நாளை முதல் இரு மடங்கு அபராதம் விதிக்கப்படவுள்ளது. ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது. அவ்வாறு இணைக்க கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. பலமுறை அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், மார்ச் 31-ம் தேதிக்குக்குள் இணைக்காதவர்களுக்கு 500 ரூபாய் அபராதத்துடன் ஜூன் 30-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இது இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில், நாளை முதல் இருமடங்கு அபராதமாக, 1000 … Read more

குற்றவாளியை பாதுகாக்கும் நச்சு சூழல் – எதிர்க்கட்சியினர் மீது பாஜக குற்றச்சாட்டு

புதுடெல்லி: கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் கலவரம் தொடர்பாக பொய் ஆதாரங்கள், சாட்சிகளை உருவாக்கிய குற்றச்சாட்டின் கீழ் சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வாட் கைது செய்யப்பட்டுள்ளார். இதுபோல் ட்விட்டரில் சர்ச்சைக்குரிய பதிவு தொடர்பாக செய்தி இணையதள இணை நிறுவனர் முகம்மது ஜுபைர் கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கைகள் தொடர்பாக பாஜகவை எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்துள்ளனர். இந்நிலையில் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் கட்சி … Read more

காமன்வெல்த் போட்டிக்கு தயாராகும் இந்திய ஹாக்கி அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று..!

இந்திய ஹாக்கி அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் அடுத்த மாத இறுதியில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவிருக்கிறது. இதற்காக இந்திய ஹாக்கி அணி வீரர்கள் பெங்களூருவில் பயிற்சி பெற்று வருகிறன்றனர். 31 வீரர்கள் இதில் கலந்து கொண்டுள்ள நிலையில், இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், அணி உதவியாளர்கள் மூவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. Source link

மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 7 பேர் உயிரிழப்பு..!!

நோனி: மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். நுபுல் ரயில் நிலையம் அருகே இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடக்கிறது. 13 பேர் இதுவரை உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், முழு வீச்சில் ராணுவம், அசாம் ரைபிள்ஸ் குழு மீட்புபணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை – அக்காவே திட்டம் தீட்டிய கொடூரம்!

உத்தரப் பிரதேசத்தில் 13 வயது சிறுமியை 4 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள ஒரு கரும்புத் தோட்டத்தில் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. பிரேதப் பரிசோதனையில், அவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பகுதியில் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். … Read more

கடந்த மே மாதத்தில் ஊரக வேலைவாய்ப்பில் 2.61 கோடி குடும்பம் பயன்

புதுடெல்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் (எம்ஜி – என்ஆர்இஜிஏ) கீழ், கடந்த மே மாதம் 2 கோடியே 61 லட்சம் குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்று பயனடைந்துள்ளன. இது கடந்தாண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 39 லட்சம் குடும்பத்தினர் கூடுதலாகும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் (என்ஆர்இ ஜிஎஸ்) கீழ், ஊரக பகுதியில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் வயது வந்தோர், ஒரு நிதியாண்டில் குறைந்தது 100 நாட்கள் வேலைபெற்று ஊதியம் பெறுகின்றனர். … Read more