ராஜஸ்தான் உதய்பூரில் டெய்லர் கொல்லப்பட்ட வழக்கை என்.ஐ.ஏ அமைப்பு விசாரணை

ராஜஸ்தான்: ராஜஸ்தான் உதய்பூரில் டெய்லர் கன்னையா லால் கொல்லப்பட்ட வழக்கை என்.ஐ.ஏ அமைப்பு விசாரிக்கிறது. கன்னையா லால் கொலை வலக்கை தேசிய புலனாய்வு முகாமை விசாரிக்க ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஆணையிட்டு இருந்தது.

பத்திரிகையாளர்கள் மீது அடக்குமுறை கூடாது – முகமது ஜுபைர் விவகாரத்தில் ஐ.நா. கருத்து

பத்திரிகையாளர்கள் மீது அடக்குமுறை கூடாது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இந்தியாவில் பத்திரிகையாளர் முகமது ஜுபைர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் இந்த கருத்தை ஐ.நா. தெரிவித்துள்ளது. செய்திகளின் உண்மைத் தன்மையை கண்டறியும் அல்ட் நியூஸ் எனப்படும் இணையதள செய்தி நிறுவனத்தில் இணை நிறுவனராக பதவி வகிப்பவர் முகமது ஜுபைர். இவர் கடந்த 2018-ம் ஆண்டு வலதுசாரி அமைப்புகளால் பரப்பபட்ட செய்தியை போலியானது என உறுதி செய்தார். அதனை ட்விட்டரிலும் பதிவிட்டார். இந்த பதிவானது வன்முறையை தூண்டும் விதமாகவும், … Read more

உதய்பூர் கொலையாளிகளுக்கு பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு: என்ஐஏ விசாரணைக்கு உத்தரவு

புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல்காரர் ஒருவரை கொடூரமான முறையில் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவத்தில் தொடர்புடைய இருவருக்கும் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக என்ஐஏ குழு ஒன்று உதய்பூர் சென்றுள்ளது. உதய்பூரில் நேற்றிரவு முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக போலீஸ் படைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. பின்னணியில் பாகிஸ்தான் அமைப்புகள்: பாகிஸ்தானின் கராச்சி நகரை தலைமையிடமாகக் கொண்டு … Read more

உதய்ப்பூர் டெய்லர் கொலை வழக்கு: தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றம்!

ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில், டெய்லர் படு கொலை செய்யப்பட்ட வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில், கண்ணையா லால் என்பவர், டெய்லராக பணிபுரிந்து வந்தார். இவர், முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக, சமூக வலைதளத்தில் கருத்துத் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட கண்ணையா லால், அண்மையில் ஜாமினில் வெளியே … Read more

பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த சிறுத்தையை மீட்ட வனத்துறையினர்.!

மும்பையின் குர்கான் பகுதியில் உள்ள பள்ளியில் நுழைந்த சிறுத்தையை வனத்துறையினர் மீட்டனர். பள்ளி அருகே காடு போன்ற சூழல் இருந்ததால், பள்ளியின் வளாகத்திற்குள் நேற்றிரவு நுழைந்த சிறுத்தை, கழிவறை பகுதிக்குள் அகப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர், சிறுத்தையை பத்திரமாக மீட்டனர்.   Source link

ராஜஸ்தானின் உதய்பூரில் டெய்லர் கொலையை தடுக்கத் தவறியதாக உதய்பூர் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்..!!

ராஜஸ்தான்: ராஜஸ்தானின் உதய்பூரில் டெய்லர் கொலையை தடுக்கத் தவறியதாக உதய்பூர் தன்மண்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய பாஜகவின் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக பதிவிட்ட டெய்லர் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். படுகொலை செய்த இருவரும் வெளியிட்ட வீடியோவில் பிரதமர் மோடிக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. கன்னையாலாலின் செயலை விரும்பாத இருவர் அவரது தலையை துண்டித்து கொலை செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி … Read more

கேரளாவில் தொடர் கொள்ளை: ரயிலில் தப்பிய இரு வடமாநில கொள்ளையர்கள் சென்னையில் கைது

கேரள மாநிலத்தில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு ரயில் மூலமாக தப்பிய இரு வடமாநில கொள்ளையர்களை, சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் திருச்சூர் பகுதிகளில் உள்ள வீடுகளில் இரவு நேரத்தில் பூட்டை உடைத்து தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு நபர்கள் ரயில் மூலம் தப்பித்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரவுள்ளதாக திருச்சூர் போலீசார் சென்னை சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு … Read more

ட்விட்டரில் சர்ச்சைக்குரிய பதிவு – முகமது ஜுபைர் கைதுக்கு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு

புதுடெல்லி: ட்விட்டரில் சர்ச்சைக்குரிய பதிவுகாரணமாக செய்தி இணையதளத்தின் இணை நிறுவனரான முகம்மது ஜுபைர் டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுமக்களின் மத உணர்வை தூண்டி, வெறுப்புணர்வை ஏற்படுத்த முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் இறைத்தூதர் முகம்மது நபியை பாஜக செய்தித்தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா விமர்சித்திருந்தார். இதையடுத்து, நாடு முழுவதிலும் சமூகவலைதளங்களை டெல்லி போலீஸார் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இதில், ‘ஹனுமன்பக்தி’ என்ற பெயரில் பெங்களூரூவில் இருந்து செயல்படும் செய்தி இணையதளத்தின் இணை நிறுவனர் … Read more

பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா மனுத்தாக்கல்!

மகாராஷ்டிர மாநில அரசியல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. ஆளும் கூட்டணி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அசாம் மாநிலத்தில் உள்ளனர். அவர்களுடன் இணைந்து பாஜக ஆட்சியமைக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே, சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை முதல்வர் உத்தவ் தாக்கரே நாளைக்குள் நிரூபிக்குமாறு மாநில ஆளுநர் பிஎஸ் கோஷியாரி உத்தரவிட்டுள்ளார். நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளும் கூட்டணி அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,506 பேருக்கு தொற்று உறுதி.!

இந்தியாவில் ஒரு நாள் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கடந்த 27-ம் தேதி தொற்று பாதிப்பு 11,793 இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 14,506 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 30 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.  Source link