சீரம் நிறுவனத்தின் கோவோவாக்ஸ் தடுப்பூசிக்கு ஒப்புதல்.. 7 -12 வயது சிறார்களுக்கு பயன்படுத்த அனுமதி..!

ஏழு வயது முதல் 12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கோவோவாக்ஸ் தடுப்பூசியை அவசரகால சிகிச்சையில் செலுத்தலாம் என்று இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதியளித்துள்ளது. புனேயில் உள்ள சீரம் நிறுவனத்தின் கோவோவாக்ஸ் தடுப்பூசியை ஆய்வு செய்து நிபுணர் குழுவினர் பரிந்துரை அளித்தனர். இதையடுத்து இதற்கு அதிகாரப்பூர்வமான அனுமதி கிடைத்துள்ளது. Source link

யாத்திரை, கூட்டங்களில் பங்கேற்க கட்டுப்பாடு தொற்று இல்லாதவர்கள், தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டும் அனுமதி: அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசு கடிதம்

புதுடெல்லி: கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், யாத்திரை மற்றும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கும் மக்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய அரசு கடிதம் எழுதி உள்ளது. நாடு முழுவதும் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உட்பட 10 மாநிலங்களில் புதிய தொற்று பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக, கடந்த சில தினங்களுக்கு முன் ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் … Read more

குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா வேட்பு மனு தாக்கல் செய்தபோது 8 கட்சி பிரதிநிதிகள் புறக்கணிப்பு

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹா மனு தாக்கல் செய்தபோது 8 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை. குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். நேற்று முன்தினம் யஷ்வந்த் சின்ஹா மனுதாக்கல் செய்தார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ், தேசிய மாநாடு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, திமுக சார்பில் … Read more

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஜெம்கோவேக்-19 தடுப்பூசி செலுத்த மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி..!

நாட்டின் முதல் எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசியான ஜெம்கோவேக்-19 தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதித்துள்ளது. புனேவை சேர்ந்த ஜென்னோவா பயோபார்மா 2 டோஸ் செலுத்தக் கூடிய எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசியை தயாரித்துள்ளது. நிறுவனத்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகளை திருப்தி அளிக்கும் வகையில் இருந்ததை அடுத்து மருந்து காட்டுப்பாட்டு ஆணையம் அவசர கால பயன்பாட்டிற்கு அங்கீரித்துள்ளது. 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஜெம்கோவேக்கின் 2 டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்தலாம் என மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் … Read more

ஓஎன்ஜிசி ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: ஓஎன்ஜிசி ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்தில் சிக்கியதில் 4 பேர் உயிரிழந்தனர். எண்ணெய் இயற்கை எரிவாயு நிறுவனத்துக்கு (ஓஎன்ஜிசி) சொந்தமாக அரபிக் கடலில் பல எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றின் மூலம் கடலுக்கு அடியில் இருந்து கச்சா எண்ணெய், எரிவாயு உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த இடத்துக்கு பணியாளர்களை அழைத்துச் செல்லவும், பொருட்களை எடுத்து செல்லவும் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், ஓஎன்ஜிசி பணியாளர்கள் 7 பேர், 2 விமானிகள் உட்பட 9 பேர் ஹெலிகாப்டரில் நேற்று … Read more

உதய்பூர் படுகொலை | பதற்றம், கடைகள் அடைப்பு – அமைதி காக்க ராஜஸ்தான் முதல்வர் வேண்டுகோள்

உதய்பூர்: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் பதிவிட்டவர் படுகொலை செய்யப்பட்டார். இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நகரிலுள்ள மால்தாஸ் பகுதியில் கன்னையா லால் என்பவர் தையல் கடை நடத்தி வந்தார். அவரது கடையில் நேற்று அத்துமீறி புகுந்த 2 பேர் அங்கு வேலை செய்து கொண்டிருந்த கன்னையா லாலை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று பொது இடத்தில் வைத்து அவரது தலையை துண்டித்தனர். இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் … Read more

பாலிமர் பூங்கா சுற்றுச்சூழல் அனுமதி ரத்து தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு

புதுடெல்லி: பாலிமர் பூங்கா விவகாரத்தில் சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்த தேசிய தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. ‘டிட்கோ’ எனப்படும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமும், ‘சிப்காட்’ என்னும் தொழில் முன்னேற்ற நிறுவனமும் இணைந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் வயலூர், புழுதிவாக்கம் உள்ளிட்ட கிராமங்களில்  265 ஏக்கரில் ‘தமிழ்நாடு பாலிமர் பூங்கா’வை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக மாநில சுற்றுச்சூழல் அனுமதியும் வழங்கப்பட்டது.இந்நிலையில், இந்த திட்டத்துக்கு எதிராக சரவணன் என்பவர் … Read more

பிஎஸ்எல்வி-சி53 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது – கவுன்ட்-டவுன் இன்று தொடக்கம்

சென்னை: இந்தியாவுக்கு தேவையான தகவல் தொடர்பு, தொலையுணர்வு மற்றும் வழிகாட்டுதல் செயற்கைக்கோள்கள், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மூலம் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன. வணிக ரீதியாக வெளிநாட்டு செயற்கைக் கோள்களையும் இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது. அதன்படி, சிங்கப்பூருக்கு சொந்தமான டிஎஸ்-இஒ, நியூசர் உட்பட 3 செயற்கைக் கோள்கள் பிஎஸ்எல்வி-சி53 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை மாலை 6 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இறுதிக்கட்ட பணிகளுக்கான 25 மணி நேர கவுன்ட்-டவுன் இன்று (ஜூன் … Read more

மத உணர்வுகளை புண்படுத்தியதாக கைதான ஜூபைருக்கு 4 நாள் போலீஸ் காவல்; டெல்லி நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: செய்திகளின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்யும் ஆல்ட் நியூஸ் இணையதளத்தின் இணை நிறுவனர் முகமது ஜூபைர், கடந்த 2018ம் ஆண்டு டிவிட்டரில் குறிப்பிட மதக் கடவுளை இழிவுபடுத்தும் விதமாக டிவிட் செய்ததாக டெல்லி போலீசில் டிவிட்டர் பயனாளர் ஒருவர் புகார் அளித்தார். டிவிட்டரில் செய்யப்பட்ட இந்த புகாரில், ஜூபைதரின் சர்ச்சைக்குரிய டிவிட்டும் இணைக்கப்பட்டு இருந்தது. இதன் அடிப்படையில், டெல்லி போலீசார் நேற்று முன்தினம் ஜூபைரை கைது செய்தனர்.  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட … Read more

மும்பை திரும்பும் எம்எல்ஏக்கள் ஆட்சி அமைக்க பாஜக தீவிரம் – ஏக்நாத் ஷிண்டேவுக்கு துணை முதல்வர் பதவி

குவாஹாட்டி: அசாம் மாநிலம் குவாஹாட்டியில் முகாமிட்டுள்ள, சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான குழுவினர் விரைவில் மும்பை வந்து, மகாராஷ்டிர ஆளுநரை சந்திக்க உள்ளனர். அதே நேரத்தில் மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமைக்க பாஜகவும் தயாராகி வருகிறது. மகாராஷ்டிராவில் பாஜகவுடன் சேர்ந்து கூட்டணி அமைக்கக் கோரி, அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா எம்எல்ஏ.க்கள் போர்க்கொடி தூக்கினர். சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ.க்கள் மற்றும் சுயேச்சை எம்எல்ஏ.க்கள் சிலரும் தற்போது குவாஹாட்டியில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் ஏக்நாத் ஷிண்டே … Read more