மாநிலங்களின் வளர்ச்சியில் நாட்டை வளர்ச்சியடைய செய்யும் கொள்கையுடன் பணியாற்றுகிறோம் – பிரதமர் மோடி 

தேவ்கர்: சாமான்ய மக்களின் வாழ்க்கையை எளிதாக்கி மேம்படுத்த நடவடிக்கை எடுக்கும்போது தேசிய சொத்துகள் உருவாக்கப்படுவதோடு, தேச வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் உருவாகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். ஜார்கண்ட் மாநிலம் தேவ்கர் நகரில் நடந்த விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை ரூ.16,800 கோடிக்கும் அதிகமான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கிவைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் ஜார்க்கண்ட் ஆளுநர் ரமேஷ் பயஸ், முதல்வர் ஹேமந்த் சோரன், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, … Read more

மத்திய உள்துறையில் வாரிசு வேலை பெறுவதற்கு புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு..!

துணை ராணுவப் படை உள்ளிட்ட மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் பணிகளில் கருணை அடிப்படையில் வாரிசு வேலை பெறுவதற்கான வழிகாட்டுதல்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, குடும்பத்தில் சம்பாதிக்கும் உறுப்பினர்கள், குழந்தைகளின் வயது, நிதித் தேவைகள் உள்ளிட்டவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, விண்ணப்பங்கள் வரிசைப்படுத்தப்படும். பின்னர் சிறப்பு அலுவலர் மூலம் விண்ணப்பதாரர்கள் நேரில் வரவழைக்கப்பட்டு வேலைக்கு சேருவதற்கு தேவையான ஆவணங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்படும். தொடர்ந்து 3 அதிகாரிகள் கொண்ட குழு அளிக்கும் பரிந்துரை பரிசீலிக்கப்பட்டு வேலை வழங்கப்படும் … Read more

செப்டம்பர் 4ம் தேதி திருவனந்தபுரம் நகர மேயர் சிபிஎம் எம்எல்ஏ திருமணம்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன் மற்றும் சிபிஎம் (மார்க்சிஸ்ட் கட்சி) எம்எல்ஏ சச்சின் தேவ் ஆகியோரின் திருமணம் செப்டம்பர் 4ம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. கேரள தலைநகர் திருவனந்தபுரத்தின் மேயராக இருப்பவர் ஆர்யா ராஜேந்திரன் (23). கடந்த 2 வருடங்களுக்கு முன்பு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் முடவன்முகள் வார்டில் சிபிஎம் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தலில் போட்டியிட்டபோது அவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மகளிர் கல்லூரியில் இளங்கலை இறுதி ஆண்டு படித்து வந்தார். அப்போது … Read more

"குறுக்கு வழியில் அரசியல் செய்வது நாட்டையே அழித்து விடும்" – பிரதமர் மோடி எச்சரிக்கை

குறுக்கு வழியில் அரசியல் செய்வது நாட்டையே அழித்து விடும் என்று பிரதமர் நரேந்திர மோடி எதிர்கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த ஹேமந்த் சோரன் முதலமைச்சராக பதவியில் உள்ளார். இம் மாநிலத்தில், தியோகர் விமானநிலையம் உட்பட 16,800 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திரமோடி இன்று காலை தொடங்கி வைத்தார். இதற்காக தியோகர் நகர் வந்த … Read more

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி..!

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.  ஆரம்பம் முதலே இந்திய அணியினர் அசத்தலாக பந்து வீசினர். தொடக்க ஆட்டக்காரரான ஜேசன் ராய், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டோன் ஆகியோர் டக் அவுட்டாகினர். இறுதியில், இங்கிலாந்து அணி 110 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது. இந்தியா சார்பில் பும்ரா 6 விக்கெட்டும், ஷமி … Read more

மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு வரும் 17ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஒன்றிய அரசு அழைப்பு..!!

டெல்லி: மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு வரும் 17ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஜூலை 17ம் தேதி காலை 11 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பீமா கோரேகான் வழக்கு – கவிஞர் வரவர ராவின் ஜாமீன் நீட்டிப்பு

பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிஞர் வரவர ராவின் ஜாமீனை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிராவில் பீமா கோரேகான் பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு பட்டியலின சமூகத்தினருக்கும், மற்றொரு சமூகத்தினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். பலர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், மோதலை தூண்டிவிட்டதாக இடதுசாரி ஆர்வலர்களை கைது செய்தனர். இதில் கவிஞர் வரவர ராவும் ஒருவர். இதனிடையே, தனது உடல்நிலையை காரணம் காட்டி … Read more

கயிறு கட்டி ஆற்றைக் கடக்கும் அவலம்: உயிரைப் பணயம் வைக்கும் பள்ளி செல்லும் ஒடிசா கிராம மாணவர்கள்

புவனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில், ஆற்றைக் கடக்க பாலம் இல்லாததால், பள்ளி மாணவர்கள் ஆற்றின் குறுக்கே கயிறு கட்டி உயிரைப் பணயம் வைத்து பள்ளிக்குச் சென்று வருகின்றனர். ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தின் பத்ராபூர் பகுதியில் உள்ள கிராமங்களில் ஆற்றைக் கடக்க பாலம் இல்லாததால், பள்ளிச் செல்லும் மாணவர்கள் ஆற்றின் குறுக்கே கயிறு கட்டி, அதன் துணையுடன் ஆற்றைக் கடந்து பள்ளிக்குச் சென்று வருகின்றனர். அதிகமான மழை மற்றும் ஆற்றில் வெள்ளம் வரும் காலங்களில் … Read more

சிறுவனை உயிரோடு விழுங்கிய முதலை… குளிக்க சென்றபோது நிகழ்ந்த அதிர்ச்சி

மத்திய பிரதேச மாநிலம், ஷியோபோர் எனும் இடத்தில் ஓடும் சாம்பல் ஆற்றில் குளிக்க சென்றுள்ளான் 10 வயது சிறுவன். திடீரென சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்துள்ளனர். அப்போது ஆற்றில் இருந்த முதலை அந்த சிறுவனை உயிரோடு அப்படியே விழுங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், முதலையிடமிருந்து சிறுவனை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் அதற்குள் சிறுவனை முதலை மொத்தமாய் விழுங்கியுள்ளது. உடனே அங்கிருந்தவர்கள் முதலையை கயிறு வீசி பிடித்து கரைக்கு இழுத்து … Read more

வனப்பகுதியில் அனுமதியின்றி நுழைந்து வீடியோ எடுத்த பெண் யுடியூபர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

கேரள மாநிலத்தை சேர்ந்த பெண் யுடியூபர் அமலா அனு வனப்பகுதிக்குள் அனுமதியின்றி நுழைந்தது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகாததால் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் புனலூர் வனப்பகுதியில் அனுமதியின்றி நுழைந்ததுமன்றி ஹெலிகேம் மூலம் வனப்பகுதி மற்றும் வன விலங்குகளை யுடியூபர் அமலா அனு வீடியோ எடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர்மீது அம்பானூர் வனத்துறையினர் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.   Source link