வரி ஏய்ப்பு புகார் – டோலோ 650 மாத்திரை நிறுவனத்தில் சோதனை
பெங்களூரு: டோலோ 650 மாத்திரை நிறுவனத்துக்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்றது. பெங்களூருவை சேர்ந்த மைக்ரோ லேப்ஸ் நிறுவனம் பாராசிட்டமால் வகை டோலோ 650 மாத்திரையை தயாரித்து வருகிறது. கரோனா பரவிய 2020-ம் ஆண்டு மட்டும் 350 கோடி மாத்திரைகளை விற்று ரூ.400 கோடி வரை அந்த நிறுவனம் வருமானம் ஈட்டியது. இந்நிலையில் டோலோ 650 மாத்திரையை உற்பத்தி செய்யும் மைக்ரோ லேப்ஸ் நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. … Read more