பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா சுட்டுக்கொலை – பாதுகாப்பு விலக்கப்பட்ட அடுத்தநாள் பயங்கரம்

பஞ்சாபி பாடகரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான சித்து மூஸ் வாலா மான்சா மாவட்டத்தில் உள்ள ஜவஹர்கே என்ற இடத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஜீப் வாகனத்தில் சென்றபோது அடையாளம் தெரியாத நபர்கள் 30க்கும் மேற்பட்ட ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சித்து மூஸ் வாலா ஆபத்தான நிலையில் மான்சாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அனால் அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த பயங்கர சம்பவத்தில் சித்து மூஸ் வாலாவுடன் மேலும் இருவர் படுகாயமடைந்து சிகிச்சை … Read more

முஸ்லிம் பெண்ணை காதலித்ததால் தாக்குதல் – கர்நாடக மாநிலத்தில் பட்டியலின இளைஞர் உயிரிழப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் கலபுர்கியில் முஸ்லிம் பெண்ணை காதலித்த தலித் இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். கர்நாடக மாநிலம் கலபுர்கி மாவட்டம் வாடி அருகேயுள்ள பீமா நகரைச் சேர்ந்தவர் விஜய் காம்ளே (25). பட்டியலினத்தைச் சேர்ந்த இவர் வாடி ரயில் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த 19 வயதான முஸ்லிம் பெண் ஒருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு … Read more

ஆந்திராவில் சொத்துக்காக தந்தையை கார் ஏற்றி கொல்ல முயன்ற மகன் கைது.. பதற வைக்கும் சிசிடிவி காட்சி..!

ஆந்திராவில் சொத்துக்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தந்தையை காரில் மோதி கொலை செய்ய முயன்ற மகனை போலீசார் கைது செய்தனர். 3 நாட்களுக்கு முன் அன்னமய்யா மாவட்டத்தில் சந்திரசேகர் ரெட்டி என்பவர் பிலேர் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் படுகாயமடைந்தார். இது குறித்து சிசிடிவி காட்சி உதவியுடன் விசாரித்த போலீசார், சந்திர சேகரின் மகனான லட்சுமி பிரசாத், கொலை செய்ய திட்டமிட்டு விபத்தை ஏற்படுத்தி தப்பிச் சென்றதை … Read more

2 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா-வங்காளதேசம் இடையே மீண்டும் ரெயில் போக்குவரத்து தொடக்கம்

சிலிகுரி: இந்தியா-வங்காளதேசம் இடையே பந்தன் எக்ஸ்பிரஸ் (கொல்கத்தா-குல்னா-கொல்கத்தா) மற்றும் மைத்ரீ எக்ஸ்பிரஸ் (கொல்கத்தா-டாக்கா-கொல்கத்தா) ஆகிய 2 ரெயில்கள் இயக்கபட்டு வந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த ரெயில் போக்குவரத்து நிறத்தி வைக்கப்பட்டு இருந்தது. கொரோனா குறைந்ததையடுத்து இன்று முதல் மீண்டும் இந்த ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளதாக கிழக்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இந்த நிலையில் மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரியில் உள்ள ஜல்பைகுரி ரெயில் நிலையத்தில் இருந்து வங்காளதேசம் டாக்கா … Read more

தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியது

சென்னை: கடந்த வாரம் அரபிக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்தம் தற்போது மேலும் வலுப்பெற்றுள்ளதால், கேரளாவில் இந்த  ஆண்டுக்கான தென் மேற்கு பருவமழை தொடங்கும் சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது என்று கடந்த 20ம் தேதியே இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதற்கேற்ப  கடந்த 26ம் தேதி தென் மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கிவிட்டது. அதன் அறிகுறியாக தற்போது கேரளாவில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. மேலும், மாகே, லட்சத்தீவு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு புதுச்சேரி, … Read more

இந்தியாவுடன் அதிகம் வர்த்தகம் செய்யும் நாடு – சீனாவை முந்தியது அமெரிக்கா!

இந்தியாவுடன் அதிகம் வர்த்தகம் செய்யும் நாடுகளின் பட்டியலில் சீனாவை முந்தி அமெரிக்கா மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தியாவுடன் அதிகம் வர்த்தகம் செய்யும் நாடுகளின் பட்டியலில் சீனாவை முந்தி அமெரிக்கா மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளதாக வர்த்தக அமைச்சகத்தின் தரவுகளில் தெரியவந்துள்ளது. 2020-21 இல் 51.62 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த அமெரிக்காவிற்கான ஏற்றுமதி 2021-22ல் 76.11 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இறக்குமதிகள் 2020-21 இல் $29 பில்லியனாக இருந்த நிலையில் $43.31 பில்லியனாக உயர்ந்துள்ளது. … Read more

ஊழலுக்கு எதிராக ஆம் ஆத்மி போல் வேறெந்தக் கட்சியும் செயல்படுமா..? – அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி

பஞ்சாப் ஆம் ஆத்மி அமைச்சரின் ஊழலை ஊடகங்களும், எதிர்க்கட்சியும் அறியாத போதும் அவரைப் பதவியில் இருந்து நீக்கியதாக ஆம் ஆத்மிக் கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அரசின் திட்டப் பணிகளுக்கு ஒப்பந்தக்காரர்களிடம் ஒரு விழுக்காடு கமிசன் கேட்ட விஜய் சிங்லா அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அரியானாவின் குருசேத்திரத்தில் ஆம் ஆத்மிப் பொதுக்கூட்டத்தில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், இதைச் சுட்டிக்காட்டி, வேறெந்தக் கட்சியும் இவ்வாறு செய்யுமா? என வினவினார். டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியில் 7 ஆண்டுகளாகத் … Read more

பிரபல பஞ்சாபி பாடகர் சுட்டுக் கொலை – பாதுகாப்பை விலக்கிய மறுநாளில் நடந்த பயங்கரம்

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் பிரபல பாடகராக இருந்து வருபவர் சித்து மூஸ்வாலா. காங்கிரஸ் கட்சியில் கடந்த டிசம்பர் மாதம் இணைந்தார். இந்நிலையில், மான்சா மாவட்டத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது சித்து மூஸ்வாலா மர்ம கும்பலால் சுடப்பட்டார். இதில் அவரும், அவருடன் இருந்த 3பேரும் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து அங்கு வந்த போலீசார் அவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியில் சித்து மூஸ்வாலா இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். பட்டப் பகலில் பிரபல பாடகர் … Read more

இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாக். ட்ரோனை சுட்டு வீழ்த்திய வீரர்கள்

ஜம்மு: இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோனை கதுவா மாவட்ட பகுதியில் இந்திய வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். ஜம்மு – காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தின் ராஜ்பாக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தல்லி ஹரியா சக் எல்லையில் ஆளில்லா விமானம் (ட்ரோன்) இன்று காலை பறந்து சென்றது. இப்பகுதியானது இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் உள்ளது. பாகிஸ்தான் எல்லையில் இருந்து வந்த இந்த ஆளில்லா விமானத்தை எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். இதுகுறித்து பாதுகாப்பு வட்டாரங்கள் … Read more