பென்ஷனுக்காக அலைக்கழிக்கப்பட்ட 75 வயது பெண்மணி.. 7 கி.மீ நடந்து, 3 மணி நேரம் காத்திருந்ததால் மயங்கி விழுந்த பரிதாபம்..!

கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள நிட்டூர் என்ற கிராமத்தில் முதியோர் பென்ஷனுக்காக அலைகழிக்கப்பட்ட 75 வயது பெண்மணி ஒருவர் கிராம அலுவலகத்திலேயே மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தனது கிராமத்தில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் வரை அந்த பெண்மணி நடந்தே வந்ததாகவும், கிராம அலுவலகத்தில் கணக்காளர் இல்லாததால் மேலும் 3 மணி நேரம் காத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே சோர்வடைந்திருந்த அவர் தொடர்ந்து காத்திருந்ததால் அங்கேயே மயங்கி விழுந்தார். அருகிலிருந்த மக்கள் அவருக்கு … Read more

வேலைவாய்ப்பை அதிகரிக்குமா? குறைக்குமா? பற்றி எரியும் அக்னி பாதை: 4 ஆண்டுக்குப் பின் முடி வெட்டுதலும், வாட்ச்மேன் வேலையும் தானா? சலுகைகள் அறிவித்தாலும் தீவிரமடையும் இளைஞர்கள் போராட்டம்

‘ராணுவம்’ என்றால் தன்னை அறியாமலேயே நம் கைகள் கம்பீரமான சல்யூட் அடிக்கும். நாம் அனைவரும் இன்று நாட்டில் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இன்றி தினம் தினம் செத்து பிழைக்காமல் மகிழ்ச்சியுடன் வாழ்கிறோம் என்றால் ஒவ்வொரு வீரர்களின் தியாகம்தான். ‘என் இந்திய தேசம் இது… ரத்தம் சிந்திய தேசமிது…காந்தி மகான் வந்த கண்ணிய பூமி இது…’ என்று தாய் நாட்டையும், மக்களையும் காப்பதே எங்களது குறிக்கோள் என்று லட்சியத்துடன், உறை பனியில் உடல் வறுத்தி எல்லைகளில் போராடி தங்களது இன்னுயிரை … Read more

வரி ஏய்ப்பு வழக்கில் ரூ.54 கோடி அபராதம், வரியாக செலுத்திய பியூஷ் ஜெயின்.!

கான்பூர் வாசனை திரவிய தொழிலதிபர் பியூஷ் ஜெயின், 187 கோடி ரூபாய் வருமான வரியாக செலுத்த வேண்டுமென வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. அதிகாரிகள் நடத்திய சோதனையில் அவருக்கு சொந்தமான இடங்களில் இருந்து, கணக்கில் வராத 197 கோடி ரூபாய் ரொக்கம், 23 கிலோ தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்டவைக்கு 87 % வருமான வரியாக நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், பாக்கியை செலுத்த ஒப்புக்கொண்ட ஜெயின், இதுவரை 54  கோடி ரூபாய் வரி மற்றும் அபராதம் … Read more

ஜனாதிபதி தேர்தலில் பாஜ வேட்பாளர் திரவுபதி முர்மு

* பழங்குடியினத்தை சேர்ந்தவருக்கு முதல் முறையாக வாய்ப்பு * எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்கா போட்டிபுதுடெல்லி: ஜனாதிபதி தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பழங்குடியின பெண் தலைவர் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஒன்றிய முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்காவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்திய வரலாற்றில் ஜனாதிபதி தேர்தலுக்கு பழங்குடியின பிரிவை சேர்ந்தவர் நிறுத்தப்படுவது இதுவே முதல் முறை. இதன் மூலம், ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் … Read more

பாஜக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிப்பு… யார் இவர்?

புதுடெல்லி: குடியரசுத் தலைவருக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு திரௌபதி முர்மு பெயர் அதிகாரபூர்வ குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் … Read more

மகிளா காங்கிரஸ் தலைவி நீட்டா டிசோசா போலீசாரை நோக்கி துப்பியதால் சர்ச்சை

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை மேற்கொண்டு வரும் விசாரணையை கண்டித்து டெல்லியில் காங்கிரஸார் நடத்திய போராட்டத்தில், மகிளா காங்கிரஸ் தலைவி நீட்டா டிசோசா பெண் காவலர்களை நோக்கி துப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்து போலீசார் வேனில் ஏற்றியபோது ஆத்திரம் அடைந்த டிசோசா எதிரில் இருந்த பெண் காவலர்களை நோக்கி துப்பினார். Source link

அயோத்தி ராமர் கோயில் நன்கொடை கொடுத்தவர்களின் ரூ.22 கோடி மதிப்பிலான 15,000 காசோலைகள் ‘பவுன்ஸ்’; அறக்கட்டளை அதிகாரி பரபரப்பு தகவல்

அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்கு நன்கொடை கொடுத்தவர்களின் ரூ.22 கோடி மதிப்பிலான 15,000 காசோலைகள் ‘பவுன்ஸ்’ ஆனதாக கூறப்படும் நிலையில், அதனை அறக்கட்டளை அதிகாரி உறுதிசெய்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமான முறையில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.  ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் ‘நிதி சமர்பன் யோஜனா’வின் சார்பில் நன்கொடைகள் வசூலிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மாவட்டப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில், ‘ராமர் கோயில் … Read more

President election: பாஜக தரப்பு வேட்பாளர் இவர்தான்!

நாட்டின் 14 ஆவது குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் வரும் ஜுலை 24 ஆம் தேதியுடன் நிறைவடைகின்றது. இதனையடுத்து அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறும என்று தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்திருந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சிகளின் சார்பில் போட்டியிடும் பொது வேட்பாளரை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது. சரத் பவார், பரூக் அப்துல்லா, … Read more

அக்னிபத் திட்டத்தின் கீழ் இளைஞர்கள் தேர்வு செய்யப்படும் முறையில் மாற்றம் செய்யப்பட மாட்டாது – லெப்டினன்ட் ஜெனரல் அனில் புரி!

அக்னிபத் திட்டத்தின் கீழ் இளைஞர்கள் தேர்வு செய்யப்படும் முறையில் மாற்றம் எதுவும் செய்யப்படமாட்டாது என்றும், தீவைப்பு, நாசவேலைகளில் ஈடுபடவில்லை என்ற உறுதி சான்றிதழை இளைஞர்கள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ராணுவ விவகாரத்துறை கூடுதல் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் அனில் புரி தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இந்தியாவில் உள்ள இளைஞர்களில் 50 சதவீதம் பேர் 25 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்றும், இதனை ராணுவம் பயன்படுத்திக் கொள்ளும் … Read more

எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா ஜூன் 27ம் தேதி வேட்பு மனு தாக்கல்..!!

டெல்லி: எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா ஜூன் 27ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளதாக சரத் பவார் அறிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டார்.