பாடத்திட்டத்தில் மாற்றம் செய்ய நியமிக்கப்பட்ட 25 குழுவில் 17 குழுக்களில் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள்? வழிகாட்டுதல் குழு தலைவர் கருத்து கூற மறுப்பு
புதுடெல்லி: புதிய தேசிய கல்விக் கொள்கை திட்டத்தின் கீழ், பள்ளிக் கல்வியின் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 2014ம் ஆண்டு பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர், முதன்முறையாக பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஐந்தாவது முறையாக பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. ஒன்றிய கல்வி அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையிலான 12 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவின் தலைமையில் தேசியக் கல்விக் கொள்கைக்கான பாடத்திட்ட திருத்தம் நடைபெறுகிறது. … Read more