பா.ஜ.க.வில் இணைகிறார் கேப்டன் அமரிந்தர் சிங்

சண்டிகர்: பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங் (89) பா.ஜ.க.வில் விரைவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங், கடந்தாண்டு முதல்வர் பதவியில் இருந்து மாற்றப்பட்டார். சுமார் 50 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்த அமரிந்தர் சிங், 8 மாதங்களுக்கு முன்பு பஞ்சாப் மக்கள் காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார். கடந்த ஏப்ரல்-மே மாதம் நடந்த பஞ்சாப் தேர்தலில் இவரது கட்சி, பாஜக.வுடன் கூட்டணி அமைத்து போட்டி யிட்டது. பாட்டியாலா … Read more

தையல்காரர் கொலைவழக்கு.. நீதிமன்ற வளாகத்தில் கைதிகள் மீது சரமாரி தாக்குதல்..!

ராஜஸ்தானில் தையல்காரர் கொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்களை ஜெய்ப்பூர் தேசியப் புலனாய்வு முகமை நீதிமன்றத்துக்கு வெளியே வழக்கறிஞர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட நால்வரையும் பத்து நாள் காவலில் வைத்து விசாரிக்க தேசியப் புலனாய்வு முகமைக்கு அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்துச் சிறைச்சாலைக்குக் கொண்டுசெல்ல வெளியே அழைத்துவந்தபோது, சூழ்ந்துகொண்ட வழக்கறிஞர்கள் அவர்களைக் கடுமையாகத் தாக்கினர். அவர்களை மீட்ட காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றிக்கொண்டுசென்றனர்.

நடிகை பலாத்கார வழக்கு; விசாரணையை நீட்டிக் கொண்டு செல்வது நல்லதல்ல: போலீசுக்கு கேரள ஐகோர்ட் கண்டனம்

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகை கடந்த 2017ம் ஆண்டு திருச்சூரில் இருந்து கொச்சிக்கு காரில் செல்லும் வழியில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நடிகையின் முன்னாள் டிரைவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். பலாத்காரத்திற்கு பிரபல நடிகர் திலீப் சதித்திட்டம் தீட்டியது தொடர்பாக அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 85 நாள் சிறைவாசத்திற்கு பின்னர் அவர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். பலாத்கார சம்பவம் நடந்து 5 வருடங்களுக்கு மேல் … Read more

இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதைய நிலை?

இந்தியாவில் மாநிலங்களில் நிலத்தடி நீர் மட்டத்தின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து பார்க்கலாம். உலக மக்கள்தொகையில் சுமார் 16 விழுக்காடு பேர் இந்தியாவில் வாழ்கிறார்கள். ஆனால் உலகின் 4 விழுக்காடு நன்னீர் ஆதாரங்கள் மட்டுமே இங்கு உள்ளன. நன்னீர் குறைவாக இருப்பது மட்டுமில்லாமல், இந்தியாவில் கிடைக்கும் நீர் ஆதாரங்களில் பெரும் ஏற்றத்தாழ்வு உள்ளது. இந்தியாவின் நிலத்தடி நீரில் 70 விழுக்காடு நாட்டின் வடக்கு, வடமேற்குப் பகுதியில் உள்ளது. குறிப்பாக பஞ்சாப், ஹரியானா, டெல்லி மற்றும் மேற்கு … Read more

மத்திய அரசில் 3 முக்கிய துறைகளில் 8,000 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு – அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவிப்பு

புதுடெல்லி: மத்திய அரசில் 3 முக்கிய துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் 8,000 பேருக்கு பதவி உயர்வு வழங்க மத்திய பணியாளர் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: மத்திய செயலக பணி (சிஎஸ்எஸ்), மத்திய செயலக சுருக்கெழுத்தாளர் பணி (சிஎஸ்எஸ்எஸ்), மத்திய செயலக கிளரிக்கல் பணி (சிஎஸ்சிஎஸ்) ஆகிய 3 முக்கிய துறைகளில் உள்ள 8,000 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க ஒப்புதல் … Read more

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கேட்கும் ஆந்திர அரசு… எதற்கு தெரியுமா?

ஆந்திர மாநிலத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து மாணவர்களுக்கு வழக்கம்போல் இந்த ஆண்டும் இலவசமாக பாடப்புத்தகங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் இலவச பாட புத்தகங்கள் வழங்க மொத்தம் 16 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. நிதி நெருக்கடி காரணமாக இந்த ஆண்டு இலவச புத்தகம் வழங்க முடியவில்லை என ஆந்திர மாநில உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, கடந்த ஆண்டு கல்லூரி முடித்துச் சென்ற மாணவர்களிடம் இருந்து திரும்ப பெறப்படும் … Read more

நுபுர் ஷர்மாவுக்கு மேற்கு வங்க காவல்துறையினர் லுக் அவுட் நோட்டீஸ்

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய புகார் தொடர்பாக பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளரான நுபுர் ஷர்மாவுக்கு மேற்கு வங்க காவல்துறையினர் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். நுபுர் ஷர்மா தெரிவித்த கருத்து தொடர்பாக கொல்கத்தாவில் உள்ள இரு காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், அவர் விசாரணைக்கு ஆஜராகாததால், கொல்கத்தா போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர். Source link

டெல்லியில் இருந்து ஜபல்பூருக்கு சென்ற விமானத்தின் கேபினில் திடீர் புகை: பயணிகள் பீதி; அனைவரும் உயிர்தப்பினர்

புதுடெல்லி: டெல்லியில் இருந்து ஜபல்பூருக்கு சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானம், கேபினில் புகை  கிளம்பியதால் டெல்லி விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது. தலைநகர் டெல்லியில் இருந்து ஜபல்பூருக்கு இன்று காலை ஸ்பைஸ்ஜெட் பயணிகள் விமானம் புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென கேபினில் இருந்து புகை வெளியேறியது. விமான நிலையத்தில் இருந்து 5,000வது அடி தூரத்தை கடந்த போது கேபினில் புகை வெளியேறியதால் விமான ஊழியர்கள், பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். உஷாரான விமானி, உடனடியாக ஸ்பைஸ்ஜெட் … Read more

உதய்பூர் கொலையாளி பாஜகவை சேர்ந்தவரா?.. காங்கிரஸ் வெளியிட்ட புகைப்படத்தால் பரபரப்பு!

உதய்பூரில் தையல் கடைக்காரரை கொலை செய்த கொலையாளிகளில் ஒருவர் பாஜகவை சேர்ந்தவர் என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக தலைவர்களுடன் கொலையாளி இருப்பதை போன்ற புகைப்படங்களையும் காங்கிரஸ் வெளியிட்டிருப்பது ராஜஸ்தானில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் நகரில் தையல் கடையை நடத்தி வந்த கன்னையா லால் என்பவரை கடந்த செவ்வாய்க்கிழமை இரு நபர்கள் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தனர். மேலும், அந்த வீடியோவையும் அவர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். நபிகள் … Read more

மக்களிடம் நுபுர் மன்னிப்பு கேட்கவேண்டும் – உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

புதுடெல்லி: இஸ்லாமியர்களின் இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து தவறாகப் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா இறைதூதர் முகமது நபிகள் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்ததால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனிடையே நுபுர் சர்மா மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு மாநிலங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தையும் டெல்லிக்கு மாற்றி விசாரணை நடத்த … Read more