கணவரை ஓட ஓட விரட்டி அடித்து துவைத்த காதல் மனைவி- வீடியோ வெளியிட்டு பாதுகாப்பு கேட்ட கணவர்

ராஜஸ்தான் மாநிலம் பிவாடி நகரில் வசித்து வரும் அஜித்சிங் அங்குள்ள பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த சுமன் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். காதல் திருமணம் அஜித்சிங்குக்கு இனிமையானதாக அமையவில்லை. திருமணத்துக்கு பின்னர்தான் சுமன் எப்படிப்பட்டவர் என்பது தெரிய வந்தது. வீட்டில் ஏற்படும் சின்ன சின்ன பிரச்சினைகளுக்கெல்லாம் கோபப்பட்டு கையில் கிடைப்பதை தூக்கி கணவரை தாக்க தொடங்கினார் சுமன். ஆரம்பத்தில் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாத அஜித்சிங் … Read more

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஒடிசாவில் கட்டப்பட்ட பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம்-முதல்வர் நவீன் பட்நாயக், ஆந்திர மாநில ஆளுநர் பிஷ்வபூஷன் பங்கேற்பு

திருமலை : திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஒடிசாவில் கட்டப்பட்டுள்ள பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் அந்த மாநில முதல்வர் நவீன் பட்நாயக், ஆந்திர மாநில ஆளுநர்  பிஷ்வபூஷன் ஹரிசந்திரன் கலந்து கொண்டனர்.திருப்பதி ஏழுமலையான் கோயில் சார்பில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் பெருமாள் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலில் விசாக சாரதா பீடாதிபதி  ஸ்வரூபானந்தேந்திர சரஸ்வதி சுவாமி, ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், ஆந்திர மாநில ஆளுநர்  பிஷ்வபூஷன் ஹரிசந்திரன், அறங்காவலர் குழு தலைவர் … Read more

'என்னை தொடாதே, நீ தீண்டத்தகாதவன்' – மத சொற்பொழிவாளரின் மேடை பேச்சால் பரபரப்பு

பண்டிட் திரேந்திர கிருஷ்ண சாஸ்திரி எனும் மத சொற்பொழிவாளரின் கால்களில் விழ முயன்ற ஒருவரிடம், “என்னைத் தொடாதே, நீ தீண்டத்தகாதவன்” என அவர் கூறியது சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், பண்டிட் திரேந்திர கிருஷ்ண சாஸ்திரி என்ற மத சொற்பொழிவாளர், தனது கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க முயலும் ஒருவரை தீண்டத்தகாதவன் என்று அழைக்கிறார். மேலும், அந்த நபர் பாதங்களைத் தொட முயன்றபோது, தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரி, “என்னைத் தொடாதே” … Read more

சிபிஐ அதிகாரிகள் முன்பு ஆஜரானார் – கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை

புதுடெல்லி: சீனர்களுக்கு விசா கொடுக்க லஞ்சம் பெற்ற வழக்கில் கார்த்தி சிதம்பரத்தைக் கைது செய்ய டெல்லி சிபிஐ நீதிமன்றம் வரும் 30-ம் தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டது. முன்னதாக, நேற்று காலை சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான கார்த்தி சிதம்பரத்திடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். காங்கிரஸ் மூத்த தலைவரான ப.சிதம்பரம் கடந்த 2011-ல் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது, அவரது மகன் கார்த்தி சிதம்பரம், தனது செல்வாக்கைப் பயன்படுத்தி 263 சீனர்களுக்கு சட்டவிரோதமாக விசா வழங்கினார் என்றும் … Read more

நடிகைகளுக்கு போதைபொருள் சப்ளை- திருப்பதி தேவஸ்தான முன்னாள் தலைவர் மகன் கைது

திருப்பதி: ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர் ஆதிகேசவலு நாயுடு. இவர் திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவராக இருந்தார். இவரது மகன் சீனிவாஸ் (வயது 45). இவர் நேற்று ஐதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் சென்றார். பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த சீனிவாசனை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் பெங்களூரில் சதாசிவம் நகரில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று வீடு முழுவதும் சோதனை நடத்தினர். இதையடுத்து … Read more

8 ஆண்டுகளாக ஒன்றிய பாஜக அரசின் 8 தவறுகள் என தலைப்பில் விமர்சன ஆவணம் ஒன்றை வெளியிட்டது காங்கிரஸ்..!

டெல்லி: 8 ஆண்டுகளாக ஒன்றிய பாஜக அரசின் 8 தவறுகள் என்ற தலைப்பில் காங்கிரஸ் கட்சி விமர்சன ஆவணம் ஒன்றை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்கள் அஜய் மாக்கன் மற்றும் ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் இந்த விமர்சன ஆவணத்தை டெல்லியில் வெளியிட்டனர். அதில்; பொருளாதாரம், அயலுறவுக்கொள்கை, மதநல்லிணக்கணம், நாட்டின் பாதுகாப்பு என அனைத்து துறைகளிலும் மோடி அரசு தோல்வி அடைந்துவிட்டது. வரலாறு காணாத பணவீக்கத்தை மூலம் சாமானிய மக்களின் வாழ்வில் மோடி அரசு விஷத்தை ஏற்றி இருக்கிறது. … Read more

காஷ்மீர்: தொலைக்காட்சி நடிகையை கொன்ற 2 தீவிரவாதிகள் 24 மணிநேரத்தில் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் தொலைக்காட்சி நடிகையை கொலை செய்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் இரண்டு பேரும் 24 மணி நேரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.   கடந்த மூன்று நாட்களில் ஜெய்ஷ்-இ-முகமது  அமைப்பைச் சேர்ந்த 3 பேர் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்த 7 பேர் உட்பட 10 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக காஷ்மீர் காவல்துறை ஐ.ஜி.விஜயகுமார் தெரிவித்துள்ளார். மேலும், நடிகை அமரீன் பட்டை கொலை செய்த பயங்கரவாதிகள் இரண்டு பேரை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து சுட்டுக் கொலை செய்ததாக … Read more

'நாடாளுமன்ற ஆவணங்களைக் கூட எடுத்துச் சென்று வரம்புமீறும் சிபிஐ' – கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு

சிபிஐ விசாரணைக்கு ஆஜராக இரண்டாவது நாளாக டெல்லி சிபிஐ அலுவலகம் வந்த கார்த்தி சிதம்பரம், சோதனை என்ற பெயரில் சிபிஐ அதிகாரிகள் வரம்பு மீறுவதாக குற்றஞ்சாட்டினர். இது குறித்து நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிரகாஷ் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறினார். காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடந்த 2011-ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது, அவரது மகனும் சிவகங்கை மக்களவை தொகுதி எம்.பி,யுமான கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி சட்ட விரோதமாக 263 … Read more

3 ஆண்களை ஒரே மாதிரி ஏமாற்றி திருமணம் செய்த இளம்பெண்- லட்சக்கணக்கில் நகை, பணம் அபேஸ்

திருப்பதி: ஆந்திரா மாநிலம் நந்தியால் மாவட்டம் பகுதியை சேர்ந்தவர் மேரம்மா. இவரது மகள் திரிஷா (வயது 24). திரிஷாவுக்கும் ஆவுக்கு பேட்டை, சென்னம் பள்ளியை சேர்ந்த மல்லிகார்ஜுன் என்பவருக்கும் முதல் திருமணம் நடந்தது. மல்லிகார்ஜுடன் சில மாதங்கள் மட்டுமே வாழ்ந்த திரிஷா அவரைவிட்டு பிரிந்து தனது தாய் வீட்டிற்கு வந்தார். அப்போது கணவரிடம் இருந்து விவாகரத்து பெறாமலேயே பல லட்சங்களை பறித்துக்கொண்டு வந்துள்ளார். இதையடுத்து அத்மகூர் மண்டலம் கொத்த பள்ளியை சேர்ந்த சீனிவாஸ் ரெட்டி என்பவரை 2-வதாக … Read more

தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்

டெல்லி :தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லி தலைமை அலுவலகத்தில் மே 31 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.