அசூர வேகத்தில் ஸ்கூட்டி மீது நேருக்கு நேர் மோதிய பைக் : பதைபதைக்கும் காட்சி

பீகாரில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. தலைநகர் பாட்னாவில் உள்ள கங்கா பாதையில் ஸ்கூட்டியில் ஆண் மற்றும் பெண் இருவர் மெதுவாக சென்றுகொண்டிருந்தனர். அப்போது எதிரே அசூர வேகத்தில் வந்த பைக் ஸ்கூட்டியில் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பைக்கில் வந்த நபர் சிறுவர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.       Source link

ஜூலையில் மகேஷ் பாபு படத்தின் ஷூட்டிங்

ஐதராபாத்: மகேஷ் பாபு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்க உள்ளது.மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ் நடித்த சர்காரு வாரி பாட்டா படம் கடந்த மாதம் வெளியாகி வெற்றிபெற்றது. இந்நிலையில், விடுமுறையை கொண்டாட மகேஷ் பாபு தனது குடும்பத்தாருடன் ஜெர்மனிக்கு சென்றிருக்கிறார். அவரது அடுத்த படத்தை திரி விக்ரம் இயக்குகிறார். ஏற்கனவே திரி விக்ரம் இயக்கத்தில் கலேஜா படத்தில் மகேஷ் பாபு நடித்திருந்தார். இந்நிலையில், இப்போது அவர்கள் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளனர். இந்தப் படத்தின் திரைக்கதையை மகேஷ் … Read more

ஹோம் ஒர்க் செய்யாத 5 வயது குழந்தை – மொட்டை மாடியில் உச்சி வெயிலில் தாய் செய்த கொடூரம்

வீட்டுப்பாடம் செய்யாத 5 வயது குழந்தையை, கை – கால்களை கட்டிப்போட்டு உச்சிவெயிலில் மொட்டை மாடியில் தாயே கிடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் நடப்பாண்டு கோடை வெயில் கொளுத்தி வருகிறது. அதுவும் தலைநகர் டெல்லியில் மக்கள் வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு நெருப்பாக தகிக்கிறது. இந்நிலையில் இந்த கொளுத்தும் வெயிலில், 5 வயது குழந்தையை கை – கால்களை கட்டி, நண்பகல் 2 மணியளவில் மொட்டை மாடியில் கிடத்திய சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் … Read more

காட்டு ராஜாவை துண்ட காணோம் துணிய காணோம் என ஓடவிட்ட மக்கள் : பங்கமாய் அசிங்கப்பட்ட சிங்கம்

குஜராத்தில் தாரி என்ற கிராமத்திற்குள் புகுந்த சிங்கம் ஒன்றை மக்கள் தடியால் அடித்தும், கல்லால் தாக்கியும் விரட்டினார்கள். நாயை விரட்டுவது போல் கிராமமக்கள் ஒன்று திரண்டு விரட்டியதால் அந்த சிங்கம் தப்பிக்க ஓட்டம் பிடித்தது. இரவில் நடந்த இந்த சம்பவத்தை ஒருவர் படம்பிடித்து சமூக தளங்களில் வெளியிட அந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. Source link

பள்ளத்தில் விழுந்த குட்டி யானை; நீண்ட போராட்டத்திற்கு பின்பு மீட்பு – வைரலாகும் வீடியோ

அடர்ந்த வனப்பகுதிக்கு அருகே இருந்த பெரிய பள்ளத்தில் குட்டி யானை ஒன்று தவறி விழுந்த நிலையில், வனத்துறையினர் நீண்டப் போராட்டத்திற்குப் பின் மீட்ட சம்பவத்தின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. வனத்துறை அதிகாரியான பர்வீன் கஸ்வான், தனது ட்விட்டர் பக்கத்தில் விலங்குகள் குறித்து வெளியிடும் வீடியோக்கள் வைரலாகும். அந்த வகையில் தற்போது அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “குட்டி யானை ஒன்று வனப்பகுதிக்கு அருகில் இருந்த மிகப் பெரிய பள்ளத்தில் நள்ளிரவு ஒரு மணிக்கு விழுந்துவிட்டதாக … Read more

105 மணி நேரத்தில் 75 கி.மீ. நீளத்திற்கு சாலை அமைத்து கின்னஸ் சாதனை : தேசத்திற்கு பெருமை அளிக்கும் தருணம் – மத்திய அமைச்சர் பெருமிதம்

மகாராஷ்டிராவில் 105 மணி நேரத்தில் 75 கிலோ மீட்டர் நீளத்திற்கு கான்கிரிட் சாலை அமைக்கப்பட்டு கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டிருப்பது தேசத்திற்கு பெருமை அளிக்கும் தருணம் என்று மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அமராவதி – அலோகா இடையிலான 53வது தேசிய நெடுஞ்சாலையில் ஜூன் 3 ஆம் தேதி தொடங்கி 7 ஆம் தேதிக்குள் சாலை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் 800 ஊழியர்களும், தனியார் … Read more

25 அடி ஆழ போர்வெல்லில் விழுந்த குழந்தையை 40 நிமிடங்களில் உயிருடன் மீட்ட அதிகாரிகள்!

குஜராத்தில் 25 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தை கடும் போராட்டத்திற்குப் பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டது. சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள துடாபூர் என்ற கிராமத்தில் நேற்றிரவு கூலித் தொழிலாளி தம்பதியின் 2 வயது மகனான சிவம், அருகிலுள்ள பண்ணை நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்தான்.அப்போது அங்கிருந்த ஆழ்துளைக் கிணற்றில் அவன் தவறி விழுந்தான். இதுகுறித்து மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததும், அவர்கள் உள்ளூர் பேரிடர் மேலாண்மை மற்றும் அகமதாபாத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையினரை வரவழைத்தனர். … Read more

300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை – பத்திரமாக மீட்ட ராணுவம்!

குஜராத் மாநிலத்தில் 300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை 40 நிமிட போராட்டங்களுக்கு பிறகு இந்திய ராணுவத்தினர் பத்திரமாக மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலம் சுரேந்திர நகர் மாவட்டம் துடாபூர் கிராமத்தில் உள்ள ஒரு பண்ணையில் சிவம் (2) என்கிற சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். சிறுவனின் பெற்றோர் அப்போது கூலி வேலை செய்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் சிறுவன் அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்து 20 – … Read more

இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்ததால் தடுத்து நிறுத்திய போலீசார் மீது இளம்பெண் ஒருவர் நண்பர்களுடன் சேர்ந்து தாக்குதல்

டெல்லியில் இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்ததால் தடுத்து நிறுத்திய போலீசாரை இரு இளம் பெண்களும் அவர்களது நண்பரும் கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனத்தில் அவர்கள் பயணம் செய்ததுடன், தவறான பாதையில் சென்றுள்ளனர். இதனால் போலீசாரும், போக்குவரத்து போலீசாரும் அவர்களை தடுத்து நிறுத்தியதால் ஆத்திரம் அடைந்த அவர்கள், போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவர்களை சரமாரியாக தாக்கினர்.   Source link

கடனுக்கான வட்டி விகிதங்களை உயர்த்த ரிசர்வ் வங்கி முடிவு: வட்டி விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் உயரலாம் என தகவல்

மும்பை: கடன்களுக்கான வட்டி விகிதத்தை இந்திய ரிசர்வ் வங்கி 25 முதல் 50 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் மும்பையில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் கடன்களுக்கான வட்டி விகிதங்களை 50 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்த ரிசர்வ் வங்கி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது கடனுக்கான வட்டி விகிதம் 4.40 … Read more