பிரதமர் மோடிக்கு 17 கேள்விகளுடன் ஐதராபாத் முழுவதும் பதாகைகள்: தெலுங்கானா மாநிலத்துக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை என்ன?.. என கேள்வி..!

ஐதராபாத்: பிரதமர் மோடி நேற்று தெலுங்கானா வந்த போது ஐதராபாத் நகரில் பல்வேறு இடங்களில் மாநில வளர்ச்சி திட்டங்களின் நிலை குறித்த 17 கேள்விகளுடன் வைக்கப்பட்ட பதாகைகள் அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவுக்கு பிரதமர் மோடி நேற்று வந்த போது வரவேற்பதை முதலமைச்சர் கே.சந்திரசேகரராவ் புறக்கணித்தார். இதனிடையே தெலுங்கானா மாநிலத்துக்கு மோடி அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது என்?. என்று கேள்விகளை எழுப்பி ஐதராபாத் நகரின் முக்கிய இடங்களில் பதாகைகள் வைக்கப்பட்டு இருந்தன. 2016ம் ஆண்டு தெலுங்கானா … Read more

ஆன்லைன் காதலனுடன் வாழ்வதற்காக ஆள் வைத்து கணவனை கொலை செய்த மனைவி

திருமணமாகி 25 வருடங்கள் ஆன நிலையில், ஆன்லைன் காதலனுடன் வாழ்வதற்காக 6 லட்சம் கொடுத்து ஆள் வைத்து கணவனை மனைவி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது. தலைநகர் டெல்லியில் ஒரு பட்டறை உரிமையாளராக தொழில் செய்து வருபவர் மொய்னுதீன் குரேஷி. இவருக்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ஜீபா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மனைவிக்கு 40 வயதாகும் நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு, ஃபேஸ்புக்கில் … Read more

காணாமல் போகும் ரூ.2000 நோட்டு: புழக்கத்தில் 1.6% ஆக குறைந்தது

மும்பை: இந்தியாவில் ரூ.2000 நோட்டுகளின் புழக்கம் மொத்த நோட்டுகளில் வெறும் 1.6 சதவீதமாக குறைந்துள்ளது. 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இரவில் அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் முந்தைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக்கப்பட்டன. இந்தியாவின் மொத்த பண சுழற்சியில் 500, 1,000 ரூபாய் நோட்டுகளே 68 சதவீதம் உள்ளன. அதன் மதிப்பு 14 லட்சம் கோடி ரூபாய். இவற்றைப் புதிய 500, 1000 ரூபாய் தாள்களாக மாற்ற வேண்டும் என்றால், அச்சிடுவதற்கே மாதக்கணக்கில் … Read more

மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் மேலும் ஒரு மாடல் அழகி தற்கொலை

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் 2 நாட்களுக்கு முன் மாடல் அழகி ஒருவர் தற்கொலை செய்த நிலையில், அவரது தோழியான மஞ்சுஷா நியோகி என்ற மற்றொரு மாடல் அழகியும் தற்கொலை செய்துகொண்டார். கொல்கத்தாவின் பட்டூலி பகுதியை சேர்ந்த மஞ்சுஷா, தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தெரிவித்த அவரது தாயார், தனது தோழியான பிதிஷா டி மஜும்தார் இருநாட்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்ட நிலையில், மஞ்சுஷா கடும் மன அழுத்தத்தில் இருந்ததாக … Read more

சூறைகாற்றுடன் மழை- திருப்பதியில் பக்தர்கள் செல்லும் வழியில் மரங்கள் சாய்ந்தது

திருப்பதி: ஆந்திர மாநிலம் திருப்பதியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலை கருமேகங்கள் சூழ்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. லேசாக சாரல் மழை செய்தது. கோடை விடுமுறை என்பதால் தற்போது திருப்பதியில் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்து வருகின்றனர். சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் பக்தர்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். இந்தநிலையில் மாலை 5 மணிக்கு திடீரென சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டி … Read more

பொது சிவில் சட்டத்தை அமலுக்கு கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்ய வரைவுக்குழு அமைப்பு

உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமலுக்கு கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்ய வரைவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவை ஒன்றிய அரசு அமைத்துள்ளது.

பெண்களுக்கு 50% பேருந்து கட்டணச் சலுகை: இமாச்சல் அமைச்சரவை ஒப்புதல்

பெண் பயணிகளுக்கு 50% பேருந்து கட்டணச் சலுகை வழங்க இமாச்சலப் பிரதேச பாஜக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மாநிலத்தில் இயங்கும் பேருந்துகளில் பெண் பயணிகளுக்கான பயணக்கட்டணத்தில் 50% சலுகை வழங்க இமாச்சலப் பிரதேச அமைச்சரவை முடிவு செய்துள்ளது. மேலும், இமாச்சலப் பிரதேச மாநிலத்திற்கு 360 புதிய பேருந்துகள் மற்றும் பிற வாகனங்களை வாங்குவதற்கு ரூ.160 கோடி வழங்கவும் இமாச்சலப் பிரதேச சாலைப் போக்குவரத்துக் கழகத்திற்கு (HRTC) இமாச்சலப் பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பெண்களுக்கு பேருந்தில் 50% கட்டண … Read more

பல்கலைக்கழக வேந்தராக மம்தாவை நியமிக்க முடிவு

கொல்கத்தா: மேற்குவங்க பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வர் மம்தா பானர்ஜியை நியமிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மேற்குவங்க ஆளுநர் ஜெகதீப் தன்கருக்கும் மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன. அந்த வகையில் பல்கலைக்கழங்களின் துணை வேந்தர்களை நியமிப்பதில் ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. தற்போதைய நடைமுறைகளின்படி மேற்குவங்க ஆளுநர், அந்த மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக உள்ளார். இதை மாற்றி மாநில முதல்வரே பல்கலைக்கழங்களின் வேந்தராக பதவி வகிக்க வகை செய்யும் சட்ட … Read more

லடாக்கின் துர்துக் பகுதியில் ராணுவ வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்து- 7 வீரர்கள் உயிரிழப்பு

லடாக்கின் துர்துக் பகுதியில் ராணுவ வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ராணுவ வீரர்கள் ஏழு பேர் உயிரிழந்தனர். பர்தார்பூரில் உள்ள முகாமில் இருந்து பாதுகாப்பு பணிக்காக 26 வீரர்களுடன் ராணுவ வாகனம் சென்று கொண்டிருந்தது. காலை ஒன்பது மணி அளவில் அந்த வாகனம் தோய்ஸ் என்ற இடத்திற்கு அருகே சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து தடுமாறி ஷியோக் ஆற்றில் கவிழ்ந்துள்ளது. சுமார் 60 அடி ஆழத்தில் வாகனம் கவிழ்ந்ததில் 7 வீரர்கள் உயிரிழந்தனர். எஞ்சிய … Read more

சீனர்களுக்கு முறைகேடாக விசா: கார்த்தி சிதம்பரம் 2-வது நாளாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜர்

புதுடெல்லி: கடந்த 2011-ம் ஆண்டு 263 சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற்று தர முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகனும், எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் ரூ.50 லட்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த புகார் தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. மேலும் சமீபத்தில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின்னர் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமனை சி.பி.ஐ. கைது செய்தது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு கார்த்தி … Read more