திருவிழாவுக்கு வந்த இடத்தில் தகராறு.. துப்பட்டாவால் கழுத்தை நெரித்து மனைவி கொலை..!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த பங்களாமேடு பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (31). இவரது மனைவி நந்தினி(27). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று, நந்தினி தனது கணவர் மற்றும் மகள்களுடன் ஆம்பூர் அருகே தேவலாபுரத்தில் உள்ள கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, கணவன் – மனைவி இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. அவர்களை குடும்பத்தினர் சமாதானம் செய்து வைத்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை குடும்பத்தினர் அருகே உள்ள கோவிலுக்கு … Read more

பப்ஜி கேம்… மகனை கண்டித்த தாய்க்கு நேர்ந்த கொடூர முடிவு!

உத்தரப் பிரதேச மாநிலம், யமுனாபுரம் காலனியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் எந்த நேரமும் ஆன்லைனில் பப்ஜி கேம் ஆடுவதையே வழக்கமாக கொண்டிருந்துள்ளான். பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகியுள்ள அந்த சிறுவனை அவரது தாய் சில தினங்களுக்கு கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுவன், அவரது தாயை துப்பாக்கியால் இதை கண்டித்த தாயை அந்த சிறுவன் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளான். தனது கொலைக் குற்றத்தை மறைக்க, இறந்த தாயின் உடலை ஒரு அறையில் மறைத்து வைத்துள்ளான் … Read more

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பதவி விலகக் கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

தங்கக் கடத்தல் வழக்கில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பதவி விலகக் கோரி திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதலமைச்சர் பினராய் விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்ததாக செய்தி வெளியானது. இதனையடுத்து பினராய் விஜயன் பதவி விலகக்கோரி தலைமைச் செயலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரஸார் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்ததால் அந்த வாகனத்தை இளைஞர் காங்கிரஸார் தாக்கினர். Source … Read more

கர்நாடகாவில் நாளை மாநிலங்களவை தேர்தல் வாக்குப்பதிவு; பாஜ, காங்., ஜனதா கட்சியிடையே கடும் போட்டி

பெங்களூரு: நாடு முழுவதும் மாநிலங்களவையில் காலியாகும் 57 உறுப்பினர் பதவிகளுக்கு நாளை தேர்தல் நடக்கிறது. இவற்றில் கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவையில் காலியாகும் 4 உறுப்பினர் பதவிகளும் அடங்கும். இந்த தேர்தலில் எம்எல்ஏக்கள் மட்டுமே ஓட்டு போட தகுதியானவர்கள். அதாவது கர்நாடகாவில் உள்ள 224 எம்எல்ஏக்களும் வாக்களிக்க தகுதியானவர்கள். பாஜவில் 119 எம்எல்ஏக்களும், காங்கிரசில் 69 எம்எல்ஏக்களும், ஜனதாதளம் (எஸ்) கட்சியில் 32 எம்எல்ஏக்களும் உள்ளனர். தவிர 2 சுயேச்சை எம்எல்ஏக்கள், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டு … Read more

நாடு முழுவதும் அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு சத்தியாகிரக போராட்டம்: காங்கிரஸ் முடிவு!

வரும் 13-ம் தேதி நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராகுல்காந்தி ஆஜராக உள்ளார். இதைத்தொடர்ந்து அன்றைய தினம் மத்திய அரசை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள அமலாக்கதுறை அலுவலகம் முன்பு சத்தியாகிரக போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் வரும் 13 ம் தேதி டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள் … Read more

விமான ஊழியர் தன்னிடம் அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டதாக நடிகை பூஜா ஹெக்டே குற்றச்சாட்டு

விமான பயணத்தின்போது தன்னிடம் விமான ஊழியர் ஒருவர், அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டதாக ‘பீஸ்ட்’ பட நடிகை பூஜா ஹெக்டே குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்ட அவர், மும்பையிலிருந்து தான் இண்டிகோ விமானத்தில் பயணித்ததாகவும், அதிலிருந்த விபுல் என்ற விமான ஊழியர், அச்சுறுத்தும் வகையிலும், ஆணவத்துடன் நடந்ததாகவும் தெரிவித்துள்ளார். காரணமின்றி அந்த ஊழியர் அவ்வாறு நடந்து கொண்டது, மிரள வைக்கும் வகையில் இருந்ததாகவும், பூஜா ஹெக்டே இண்டிகோ நிறுவனத்தை சுட்டிக்காட்டி குறிப்பிட்டுள்ளார்.   … Read more

டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகம் முன்பு வரும் 13ம் தேதி காங்கிரஸ் தரப்பில் அமைதிவழிப் போராட்டம் நடத்த முடிவு

டெல்லி: டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகம் முன்பு வரும் 13ம் தேதி காங்கிரஸ் தரப்பில் அமைதிவழிப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள், மாநிலத் தலைவர்கள் கலந்து கொண்ட காணொலி ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தல் தேதி அறிவிப்பு – ஏற்பாடுகள் மும்முரம்

இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இதையடுத்து, அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் விரைவில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இது ஒருபுறம் இருக்க, குடியரசுத் தலைவர் பதவிக்கான தங்கள் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் ஆளும் பாஜகவும், எதிர்க்கட்சியான காங்கிரஸும் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. இந்நிலையில், புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் … Read more

சுற்றுலா யாத்திரை மூலம் இரண்டு நாடுகளை இணைக்கும் பெருமையை பெற்றது இந்திய ரெயில்வே

சுற்றுலா யாத்திரை மூலம் இரண்டு நாடுகளை இணைக்கும் முதல் ரெயில்வே என்ற பெருமையை இந்திய ரெயில்வே பெறுகிறது. ராமாயணத்துடன் தொடர்புடைய புண்ணிய ஸ்தலங்களை சுற்றுலாப்பயணிகள் ஒருசேர கண்டுரசிக்க ராமாயண் யாத்ரா என்ற திட்டத்தை இந்திய ரெயில்வே செயல்படுத்துகிறது. டெல்லியிலிருந்து வருகிற 21 ஆம் தேதி புறப்படும் இந்த ஆன்மீக சுற்றுலா ரயில் உத்தரப்பிரதேசம்,பீகார், ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும், நேபாளத்தில் உள்ள ராமாயண ஸ்தலங்களையும் ஒருங்கிணைத்து சுமார் 8 ஆயிரம் கிலோ மீட்டர் பயணிக்கிறது. மொத்தம் … Read more

உ.பி.யில் இஸ்லாமியர்கள் மீது வாலிபர்கள் சரமாரி தாக்குதல்; கட்டையால் மிரட்டும் வீடியோ வைரல்

கோண்டா: உத்தரபிரதேசத்தில் இஸ்லாமிய ஃபக்கிரிகள் மீது சில இளைஞர்கள், கட்டையால் மிரட்டி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நபிகள் நாயகம் தொடர்பாக பாஜ பெண் செய்தி தொடர்பாளர் நூபுர் சர்மா, சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டிருந்தார். இதையடுத்து, அவரையும், அவரது கருத்துக்கு ஆதரவாக டெல்லி பாஜவை சேர்ந்த நவீன்குமார் ஜிண்டாலும் ட்விட்டரில் பதிவிட்டார். இருவர் மீதும் பாஜ நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும் பாஜவினரின் மதவெறுப்பு பேச்சுக்கு சர்வதேச அளவில் இஸ்லாமியர்களிடையே கடுமையான கண்டனங்களை பெற்று வருகிறது. இந்த … Read more