திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கை கணக்கிட 20 கோடியில் நவீன கட்டிடம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கை கணக்கிடுவதற்காக ₹20 கோடியில் நவீன கட்டிடம் கட்டும் பணியை தேவஸ்தானம் தொடங்கியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப கோயிலில் உள்ள உண்டியல்களில் பணம் மட்டுமின்றி தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இந்த உண்டியல் ஒருநாளைக்கு 2 முறை நிரம்பும். ஆனால் தற்போது பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் 9 முதல் … Read more

அக்னி பாதை திட்டம்; ராகுல் காந்தி மீதான விசாரணைக்கு எதிர்ப்பு – ஜனாதிபதியிடம் முறையிட்ட காங்கிரஸ்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் நேற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர். சந்திப்பில், அக்னி பாதை திட்டத்தை திரும்பப் பெறக் கோரிய போராட்டத்தின் போது, ​​கட்சி எம்.பி.க்களை போலீஸார் மோசமாக நடத்தப்பட்ட விவகாரம், ராகுல் காந்தியை அமலாக்கத்துறை விசாரணை செய்கின்ற விவகாரம் போன்றது குறித்து பேசினர். காங்கிரஸ் பிரதிநிதிகள் குழுவில் ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் … Read more

31 லட்ச ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்த மாவோயிஸ்ட்கள் 3 பேர் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொலை..

மத்திய பிரதேசத்தில், 31 லட்ச ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்த மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்கள் 3 பேர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாலகாட் மாநிலத்தில், மாராட்டிய மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ள பகுதியில், மத்திய பிரதேச மாநில போலீசாரின் ஹாக் படை பிரிவினருடன் நடைபெற்ற மோதலில் ஒரு பெண் மாவோயிஸ்ட் உள்பட 3  கிளர்ச்சியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். Source link

அக்னி வீரர்களுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆதரவு

புதுடெல்லி: அக்னி பாதை திட்டத்தின் கீழ் 4 ஆண்டு ராணுவ சேவை முடித்த பின்னர் அக்னி வீரர்களுக்கு என்ன மாதிரியான வேலைவாய்ப்பு கிடைக்கும் என பல தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், அக்னி வீரர்களுக்கு மகேந்திரா நிறுவனத்தில் வேலை வழங்கப்படும் என அந்நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா டிவிட்டரில் உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து, நாட்டின் பல முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்கள் அக்னி வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரசேகரன், ஆர்பிஜி எண்டர்பிரைசஸ் … Read more

குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட மறுப்பு.. எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரித்த கோபாலகிருஷ்ண காந்தி

மகாத்மா காந்தியின் பேரனும், மேற்குவங்க முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி குடியரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிடும் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.  Source link

தங்களது நிலையால் சமூகத்தில் மாற்றுத்திறனாளிகள் பின்தங்கிவிட கூடாது: ஒன்றிய அமைச்சர் நாராயணசுவாமி பேச்சு

சென்னை: மாற்றுத்திறனாளிகள் தங்களது நிலையால் சமூகத்தில் பின்தங்கிவிட கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று ஒன்றிய இணை அமைச்சர் நாராயணசுவாமி கூறியுள்ளார். சென்னை மாவட்டம் நிர்வாகம் மற்றும் அலிம்கோ ஆகியவை சார்பில் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கபாலீஸ்வரர் கற்பகம்பாள் திருமண மண்டபத்தில் சமூக வலுவூட்டல் முகாம் நேற்று நடந்தது. இதில், ஒன்றிய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் இணை அமைச்சர் நாராயணசுவாமி கலந்து கொண்டு ரூ.1,04,92,301 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில்,”1325 … Read more

'அரசோ, தனியாரோ இரண்டுமே நாட்டின் சொத்துக்கள்; அனைவருக்கும் சமமான பங்களிப்பு அளிக்க வேண்டும்' – பிரதமர் மோடி பேச்சு

பெங்களூரு: “அரசோ அல்லது தனியாரோ இரண்டுமே நாட்டின் சொத்துக்கள், எனவே அனைவருக்கும் சமமான பங்களிப்பு அளிக்கப்பட வேண்டும்” என்று தான் நம்புவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். இரண்டு நாள் பயணமாக கர்நாடகா சென்றுள்ள பிரதமர் மோடி திங்கள்கிழமை பெங்களூருவில் ரூ.27,000 கோடி மதிப்பிலான பல்முனை ரயில் மற்றும் சாலை உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். முன்னதாக, பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் பல்கலைக்கழகத்தில் பக்ஷி பார்த்தசாரதி மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி மூளை ஆராய்ச்சி மையத்தையும் … Read more

பயணிகள் ரெயிலின் அடிப்பகுதியில் ஏற்பட்ட காற்று கசிவு.. துணிச்சலுடன் ரெயிலுக்கு அடியில் சென்று பழுதை நீக்கிய ஊழியர்.!

பயணிகள் ரயிலின் அடிப்பகுதியில் ஏற்பட்டிருந்த பழுதை ரெயில்வே ஊழியர் ஒருவர்  தவழ்ந்தபடியே  சென்று சீர்செய்த காட்சிகளை ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ரெயில்வே பாலத்தின் மீது நின்றுக்கொண்டிருந்த அந்த ரெயிலில் ஒரு குறிப்பிட்ட பெட்டிக்கு கீழே காற்று கசிவு  ஏற்பட்டிருந்தது.தகவல் அறிந்ததும் விரைந்து வந்த ரெயில்வே ஊழியர்களில் ஒருவர், ரெயிலுக்கு அடியில் குறுகிய இடத்தில் தவழ்ந்தபடியே சென்று பழுதை சரிசெய்தார். இந்த செயலை பாராட்டி அந்த காட்சிகளை ரெயில்வே அமைச்சகம் தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. Source link

இமாச்சலப்பிரதேசத்தில் அந்தரத்தில் பழுதாகி நின்ற ரோப் காரில் சிக்கி இருந்த 11 பேரும் பத்திரமாக மீட்பு

ஹிமாச்சலல்: இமாச்சலப்பிரதேசத்தில் அந்தரத்தில் பழுதாகி நின்ற ரோப் காரில் சிக்கி இருந்த 11 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். சோலன் மாவட்டத்தில் பர்வானூ என்ற இடத்தில் 11 பேருடன் சென்ற ரோப் கார் அந்தரத்தில் பழுதானது.

வெள்ளத்தில் தவிக்கும் அசாம்: இதுவரை 73 பேர் உயிரிழப்பு; 43 லட்சம் பேர் பாதிப்பு

கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 35 மாவட்டங்களில் 33 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. திங்கள்கிழமை நிலவரப்படி சுமார் 43 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த மாநிலத்தின் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். வெள்ள நீர் அதிகம் சூழ்ந்துள்ள பகுதிகளில் சிக்கியுள்ள மக்களுக்கு தேவையான உணவு மற்றும் நிவாரணத்தை ஆகாய மார்க்கமாக வழங்குமாறு அவர் தெரிவித்துள்ளார். மாநில அமைச்சர்கள் மற்றும் … Read more