மாணவியின் ஆபாச படத்தை வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் வைத்த அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது..!

கர்நாடகா மாநிலம் பெலகாவியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துடன், ஆபாச படத்தையும் வாட்ஸ்-அப் ஸ்டேட்டசாக வைத்த ஆசிரியரை, மாணவியின் உறவினர்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். எக்குந்தி கிராம அரசு உயர்நிலைப் பள்ளியில் மகேஷ் சிவலிங்கப்பா பிரதாரா என்பவர் உடற்கல்வி ஆசிரியராக உள்ளார். மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததுடன், ஆபாசமாக படங்களும் எடுத்து வைத்ததாக சொல்லப்படுகிறது. அந்த மாணவிக்கு, வேறொருவருடன் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் மாணவியின் ஆபாச படத்தை … Read more

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஜூன் 23-ம் தேதி ஆஜராக சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன்

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஜூன் 23-ம் தேதி ஆஜராக சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக விசாரணைக்கு ஆஜராக காங்கிரஸ் தலைவரை  சோனியா காந்தி அவகாசம் கோரியிருந்தார். மேலும் நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஜூன் 13-ம் தேதி எம்.பி.ராகுல் காந்தி அமலாக்கத்துறை முன் ஆஜராகவுள்ளார்.

'உங்கள் தகவலுக்கு, இது எம்எல்ஏவின் கார்' – காவலர், பத்திரிகையாளரை தாக்கிய பாஜக எம்எல்ஏவின் மகள்

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள மகாதேவபுரா சட்டப்பேரவைத் தொகுதி பாஜக எம்எல்ஏ அரவிந்த் லிம்பாவளியின் மகள் ரேணுகா (26). இவர் பிஎம்டபுள்யூ காரில் பெங்களூருவில் உள்ள குயின்ஸ் சாலையில் போக்குவரத்து சிக்னலில் நிற்காமல் போலீஸ் அதிகாரியின் வாகனத்தை முந்திக்கொண்டு சென்றார். இதையடுத்து போக்குவரத்து போலீஸார் அவரை தடுத்து நிறுத்தி, ”இந்த காரின் மீது 13 வழக்குகள் உள்ளன. இப்போது 14-வது முறையாக போக்குவரத்து விதிமுறை மீறப்பட்டிருக்கிறது’’ எனக்கூறி அபராதம் கேட்டனர். ஆனால், ரேணுகா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு … Read more

உரம் இறக்குமதி செய்ய இலங்கைக்கு 55 மில்லியன் டாலர் கடன் வழங்குகிறது இந்தியா

உரம் இறக்குமதி செய்ய இலங்கைக்கு 55 மில்லியன் டாலர் கடனாக இந்தியா வழங்குகிறது. நடப்பாண்டின் யாலா அறுவடை பருவத்திற்கு 65 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா உரம் வாங்க கடன் வழங்குமாறு இந்தியாவிடம் கேட்டுக் கொண்டது. இந்தியாவில் இருந்து யூரியா உரம் இறக்குமதி செய்ய 55 மில்லியன் டாலர் கடனுதவி அள்ளி அரசு ஒப்புக் கொண்டுள்ளதாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கை நிதித்துறை செய்லாளர் ஸ்ரீவர்தனே, எக்ஸிம் வங்கியுடன் டாலர் கடன் உதவி ஒப்பந்தத்தில் … Read more

ஜனாதிபதி தேர்தலில் திடீர் திருப்பம் பொது வேட்பாளரை நிறுத்த சோனியா காந்தி விருப்பம்: அனைத்து தலைவர்களுடனும் காங். பேச்சு

புதுடெல்லி: ஜனாதிபதி தேர்தலில் பாஜ.வின் வேட்பாளருக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் தலைவர் சோனியா சம்மதித்துள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிகிறது. எனவே, புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல், ஜூலை 18ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 21ம் தேதி எண்ணப்பட உள்ளன.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, வேட்பாளர் தேர்வில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் தீவிரமாக கவனம் செலுத்த தொடங்கி உள்ளன. பாஜ.வின் சார்பில் … Read more

மக்கள் நலனே அரசின் தலையாய கடமை – குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி

நவ்சாரி: மக்கள் நலனே அரசின் தலையாய கடமை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஒருநாள் பயணமாக நேற்று குஜராத் சென்றார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். நவ்சாரி மாவட்டத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதியான குத்வேலில் நடந்த விழாவில் ரூ.3,050 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்து பிரதமர் பேசியதாவது: இங்கு 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் … Read more

நுபுர் சர்மாவை கைது செய்யக் கோரி டெல்லி, உபி, ஜார்கண்டில் போராட்டம்: வன்முறை வெடித்ததால் போலீஸ் தடியடி

புதுடெல்லி: நுபுர் சர்மாவை கைது செய்ய கோரி டெல்லி ஜும்மா மசூதியில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். உத்தர பிரதேசத்தில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் போலீஸ் உயர் அதிகாரி, கலெக்டர் உள்ளிட்டோர் காயமடைந்தனர். நபிகள் நாயகம் குறித்து பாஜ தேசிய செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா சமீபத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். அதேபோல், இக்கட்சி தலைவர்களில் ஒருவரான ஜிண்டால் கூறிய கருத்தும் பெரும் சர்ச்சையானது. இந்தியாவில் மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளிலும் இதற்கு கடும் … Read more

அகமதாபாத்தில் இஸ்ரோ புதிய வளாகம்

அகமதாபாத்: அகமதாபாத்தில் இஸ்ரோவின் புதிய வளாகத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார். அத்துடன் நவ்சாரி பகுதியில் ஏ.எம்.நாயக் சுகாதார வளாகம், நிராலி பன்னோக்கு மருத்துவமனையையும் பிரதமர் திறந்துவைத்தார். அங்கு அவர் பேசும்போது, ‘‘ஏழைகளின் நலன் கருதி ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் குஜராத்தில் மட்டும் 41 லட்சம் பேர் பலன் பெற்றுள்ளனர். குஜராத்தில் மருத்துவ படிப்புக்கான இடங்கள் 1,100-ல் இருந்து 6,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 30-ஐ தாண்டியுள்ளது. கடந்த … Read more

காலை முதல் இரவு 8 மணி வரை ஒரே நாளில் 200 வழக்குகளை விசாரித்த நீதிபதி சாதனை

மும்பை: மும்பை உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 200 வழக்குகளை விசாரித்த நீதிபதி ஷிண்டே  அமர்வு சாதனை படைத்துள்ளது. மும்பை உயர்நீ திமன்றத்தில் நீதிபதி எஸ்எஸ் ஷிண்டே தலைமையிலான அமர்வு செயல்பட்டு வருகிறது. இதில், நீதிபதி  எம்.என் ஜாதவும் இடம் பெற்றுள்ளார்.ய பரோல், குற்றவியல்  தொடர்பான வழக்குகளை இந்த அமர்வு விசாரித்து வருகிறது. இந்நிலையில், நேற்று  முன்தினம் ஒரே நாளில் வழக்கமான பணி நேரத்தை விட கூடுதலாக 5 மணி நேரம்  பணியாற்றிய இந்த … Read more

வளர்ச்சி திட்டங்களை அமல்படுத்துவது ஏன்?: பிரதமர் மோடி விளக்கம்

அகமதாபாத்: ‘வாக்குகளை பெறுவதற்காக வளர்ச்சி பணிகளை செய்யவில்லை. மக்களின் வாழ்க்கை முன்னேறத்துக்காக செய்கிறேன்,’ என பிரதமர் மோடி கூறியுள்ளார். குஜராத் மாநிலத்தில் நவ்சாரி மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் உள்ளனர். பழங்குடியின மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ரூ.3050 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.  இந்த திட்டப்பணிகளை நேற்று தொடங்கி வைத்து பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து ஏஎம் … Read more