நில முறைகேடு வழக்கில் ஜூன் 17ம் தேதி நேரில் ஆஜராக எடியூரப்பாவுக்கு நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு : நில முறைகேடு வழக்கில் ஜூன் 17ம் தேதி நேரில் ஆஜராக எடியூரப்பாவுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.. பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் வாசுதேவரெட்டி என்பவர் மனு தாக்கல் செய்து இருந்தார்.

3வது ஆண்டாக கல்வி தரத்திலும், வசதியிலும் சாதனை படைத்த சூரத் அரசு பள்ளி – குழந்தைகளை சேர்க்க பெற்றோர் தவம்

சூரத்: கல்வியின் தரத்திலும், கட்டமைப்பு வசதிகளிலும் குஜராத்தின் சூரத் நகரில் உள்ள மாநகராட்சி பள்ளிகள், தனியார் பள்ளிகளைவிட சிறந்து விளங்குவதால், தொடர்ந்து 3-வது ஆண்டாக, அங்கு மாணவர் சேர்க்கைக்கு கடும் போட்டி நிலவுகிறது. பொதுவாக அரசு பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர் தயங்குவது வழக்கம். ஆனால், அரசு பள்ளிகளில் கல்வித் தரத்தையும், கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த குஜராத் அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக சூரத் நகரில் உள்ள மாநகராட்சி பள்ளிகள் கல்வியின் தரத்தையும், … Read more

நடிகை அம்ரீன் பட்டை கொலை செய்த 2 தீவிரவாதிகளை 24 மணி நேரத்தில் சுட்டுக்கொன்ற காவல்துறை..!

ஜம்மு காஷ்மீரில் தொலைக்காட்சி நடிகை அமரீன் பட்டை கொலை செய்த தீவிரவாதிகள் இரண்டு பேர் 24 மணி நேரத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த 3 நாட்களில் நடைபெற்ற பல்வேறு துப்பாக்கிச் சண்டைகளில் 10 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காஷ்மீர் காவல்துறை ஐ.ஜி. விஜயகுமார் தெரிவித்துள்ளார். நடிகையைக் கொலை செய்த தீவிரவாதிகள் அகமது வாஜா மற்றும் அப்ரீன் அப்தாப் மாலிக் ஆகியோரை அவந்திபோராவில் நேற்றிரவு பாதுகாப்புப்படையினர் சுற்றி வளைத்து துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இதில் இந்த இரண்டு தீவிரவாதிகளும் … Read more

சாதனை ஒருபுறம்; வேதனை மறுபுறம் பள்ளிக்கு நடந்து செல்லும் 48 சதவீதம் மாணவர்கள்: ஒன்றிய அரசின் ஆய்வில் தகவல்

புதுடெல்லி: இந்தியா என்னதான் பல்வேறு துறைகளில் முன்னேறி வந்தாலும், இந்தியாவில் 48 சதவீத மாணவர்கள் பள்ளிக்கு நடந்தே செல்கின்றனர் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. நாட்டில் உள்ள 730 மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 18 ஆயிரத்து  பள்ளிக்கூடங்களில் 3,5,8ம் வகுப்புகளில் பயிலும்  மாணவர்களிடம் பல்வேறு தகவல்களை திரட்டும் வகையில் ஒன்றிய கல்வித்துறை சார்பில், ‘தேசிய  அளவிலான சாதனை ஆய்வு- 2021‘ நடத்தப்பட்டது. இதில், கிராமம் மற்றும் நகர்ப்புறங்களை சேர்ந்த 34 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். அரசு, … Read more

கர்நாடக காங். தலைவர் சிவகுமார் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

பெங்களூரு: கடந்த 2018ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார், காங்கிரஸ் எம்.பி. டி.கே.சுரேஷ் உள்ளிட்டோருக்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். இதில் ரூ.10 கோடிக்கும் அதிகமான ரொக்கப்பணம், ஏராளமான சொத்துக்களின் ஆவணங்கள், கணக்கில் வராத தங்க வைர நகைகளை கைப்பற்றினர். இதுகுறித்து விசாரித்த அமலாக்கத்துறை அதிகாரிகள் டி.கே.சிவகுமார் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள திஹார் சிறையில் … Read more

டெல்லியில் உள்ள தியாகராஜா விளையாட்டரங்கில் நாயை வாக்கிங் கூட்டிப் போன ஐ.ஏ.எஸ் தம்பதியினர் பணியிட மாற்றம்.!

டெல்லியில் உள்ள தியாகராஜா விளையாட்டரங்கில் நாயை வாக்கிங் கூட்டிப் போன ஐ.ஏ.எஸ் தம்பதியர் இடம் மாற்றப்பட்டுள்ளனர். சஞ்சீவ் கீர்வார் லடாக்கிற்கும் அவர் மனைவி ரிங்கு டகா அருணாச்சலப் பிரதேசத்திற்கும் இடம் மாற்றப்பட்டனர். மேலும் அவர்களைப் பற்றிய அறிக்கை ஒன்றை அளிக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் டெல்லி தலைமைச்செயலருக்கு உத்தரவிட்டுள்ளது. சஞ்சீவ் ரிங்கு ஆகிய இருவரும் தினமும் மாலையில் நாயை வாக்கிங் கூட்டி வருவதாகவும் இதற்காக அங்கு பயிற்சியில் இருந்த மற்ற விளையாட்டு ஆர்வலர்கள் விரட்டியடிக்கப்படுவதாகவும் பத்திரிகைகளில் செய்தி … Read more

மகாராஷ்டிராவில் மேலும் ஒரு அமைச்சரின் வீடுகளில் ரெய்டு

மும்பை: மகாராஷ்டிராவில் ஏற்கனவே 2 அமைச்சர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில், முதல்வர் உத்தவ் தாக்கரே அரசுக்கு குடைச்சல் தரும் வகையில், சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் இம்மாநிலத்தை சேர்ந்த போக்குவரத்து துறை அமைச்சரும், சிவசேனா தலைவருமான அனில் பரப்வுக்கு சொந்தமான புனே, மும்பை மற்றும் தபோலி உட்பட 7 இடங்களில் உள்ள  வீடு, அலுவலகங்களில் அமலாக்கத் துறை நேற்று அதிரடியாக சோதனை நடத்தியது. கடந்த மார்ச் மாதம் அனில் பரப்புக்கு நெருக்கமாக நபர்கள், … Read more

காஷ்மீர் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து 9 பேர் உயிரிழப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் கார்கில் நகரிலிருந்து ஸ்ரீநகர் நோக்கி நேற்று முன்தினம் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீநகர்-லே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த அந்த கார், நிலைதடுமாறி அருகில் இருந்த ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது 4 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மீட்டு … Read more

பிரதமர் மோடியின் தலைமையால், இந்தியாவை பற்றிய உலகின் பார்வை மாறியுள்ளது- ராஜ்நாத்சிங்

உத்தர கன்னடா: கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள கடற்படை தளத்திற்கு வருகை தந்த மத்திய மந்திரி ராஜ்நாத்சிங், இந்திய கடற்படை வீரர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது : உலகில் இந்தியா பற்றிய கருத்து மாறி வருகிறது. முன்பு இந்தியாவை சர்வதேச அரங்கில் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இன்று உலகம் இந்தியாவின் பேச்சைக் கேட்கிறது. அதற்கு உங்களது பங்களிப்பும், நமது பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையும்தான் காரணம். இது ஒரு சிறிய சாதனை அல்ல, … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,307,450 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.07 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,307,450 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 530,112,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 500,536,356 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 37,729  பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.