இந்தியாவில் புதிதாக 2,628 பேருக்கு கொரோனா- சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் உயர்வு
புதுடெல்லி: இந்தியாவில் புதிதாக 2,628 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் 747 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 500-க்குள் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. இதே போல நேற்று மகாராஷ்டிரத்தில் 470 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இது அம்மாநிலத்தில் கடந்த 1½ மாதங்களில் இல்லாத அளவில் தினசரி பாதிப்பில் அதிகம் ஆகும். … Read more