ஆசியாவிலேயே மிக நீளமான தந்தங்களை கொண்ட போகேஷ்வரா யானை மறைவு: இணையத்தில் புகைப்பட அஞ்சலி
பந்திப்பூர்: ஆசியாவிலேயே மிக நீளமான தந்தங்களைக் கொண்ட யானை என அறியப்பட்டு வந்த போகேஷ்வரா கர்நாடகாவில் உயிரிழந்தது. அந்தச் செய்தியை அறிந்து கானுயிர் ஆர்வலர்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாக தங்களது சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பந்திப்பூர் – நாகர்ஹோளே காப்புக் காட்டுப்பகுதியில் கடந்த 11-ஆம் தேதி அன்று யானை ஒன்று உயிரிழந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. தொடர்ந்து அந்த யானையின் உடலை பார்த்த வனவிலங்கு அதிகாரிகள் உயிரிழந்தது போகேஷ்வரா யானை என்பதை உறுதி செய்துள்ளனர். இதன் நீளமான தந்தத்திற்காக … Read more