மும்பையில் 4 அடுக்குமாடி குடியிருப்பு விபத்து – பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
மும்பை: மும்பையில் கிழக்கு குர்லா பகுதியில் நாயக் நகர் உள்ளது. இங்குள்ள 4 மாடி கட்டிடம் ஒன்று நேற்றுமுன்தினம் இரவு திடீரென இடிந்து விழுந்தது. தகவல் அறிந்து போலீஸாரும் தீயணைப்பு படையினரும் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களில் 4 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும் 9 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். … Read more