அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு உத்தவ் தாக்கரே மீண்டும் அழைப்பு

அமர்ந்து பேசி பிரச்னைக்கு தீர்வு காணலாம் என அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். கவுகாத்தியில் உள்ள பெரும்பாலானோர் தன்னிடம் தொடர்பில் இருப்பதாகவும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் தன்னை தொடர்பு கொண்டதாகவும் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். எம்.எல்.ஏ.க்களின் உணர்வுகளை மதிப்பதாகவும், பேச்சுவார்த்தைக்கு வந்தால் தீர்வு காணப்படும் எனவும் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். Source link

வரலாறு காணாத சரிவை கண்ட இந்திய ரூபாயின் மதிப்பு: காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி விமர்சனம்

டெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்ததை அடுத்து ராகுல் காந்தி விமர்சனம் செய்தார். யாருடைய மதிப்பு வேகமாக சரிவது என ஒன்றிய அரசுக்கும் ரூபாய்க்கும் இடையே போட்டி நடப்பதாக 2013ல் பிரதமர் மோடி விமர்சித்திருந்ததாக கூறினார். நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதை தடுக்க பேசுவதை நிறுத்திவிட்டு நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார். 

'மதத்தின் பெயரால் வன்முறையை அனுமதிக்க முடியாது' – உதய்பூர் சம்பவத்திற்கு ராகுல் காந்தி கண்டனம்

புதுடெல்லி: “மதத்தின் பெயரால் வன்முறையை அனுமதிக்க முடியாது” என்று ராஜஸ்தானின் உதய்பூர் கொலை சம்பவம் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். முஸ்லிம்களின் இறைத்தூதர் முகம்மது நபியை விமர்சித்த நுபுர் சர்மா பாஜகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். நுபுர் சர்மாவின் கருத்துக்கு ஆதரவளித்த உதய்பூரைச் சேர்ந்த கன்னைய்யா லால் டெலி (40), என்பவர் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல்கடை வைத்து நடத்தி வந்தார். இன்று மாலை இவரது … Read more

பிளாஸ்டிக் பயன்பாடு…மத்திய அரசு அதிரடி உத்தரவு!

ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட கூடிய பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒழிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்கும்படி அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்நிலையில், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்திக்கு ஜூலை 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் தடை விதிக்கப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இன்று அதிரடியாக அறிவித்துள்ளது. இதன்படி, ஒருமுறை பயன்படுத்தக்கூடிய (மறுசுழற்சி செய்ய இயலாத) குறைவான பயன்பாடு கொண்ட அதிக குப்பையை ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, விநியோகம், விற்பனை, பயன்பாடு, … Read more

ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடி..

ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்த பிரதமர் மோடியை, அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் (Sheikh Mohamed bin Zayed Al Nahyan) ஆரத்தழுவி வரவேற்றார். ஜெர்மனியில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில் கலந்துக் கொண்ட பிரதமர் மோடி உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசினார். பின்னர் அங்கிருந்த புறப்பட்ட பிரதமர் மோடி, விமானத்தில் அபுதாபி வந்தடைந்தார். அங்கு ஐக்கிய அரபு அமீரக அதிபர், பிரதமர் மோடியை கட்டியணைத்து உற்சாக வரவேற்பு அளித்தார். அப்போது … Read more

நடிகை பலாத்கார வழக்கு நடிகர் விஜய் பாபுவின் ஆண்மை பரிசோதனை: போலீசார் முடிவு

திருவனந்தபுரம்: நடிகை பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல மலையாள நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் பாபுவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த போலீசார் தீர்மானித்துள்ளனர். மலையாள புதுமுக நடிகை பலாத்கார வழக்கில் பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் பாபுவுக்கு கேரள உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது.  ஜூன் 27 முதல் ஜூலை 3ம் தேதி வரை போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும், போலீசார் கைது செய்தால் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் நிபந்தனை … Read more

ஜூலை 1 முதல் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை – முழு விவரம்

புதுடெல்லி: நாடு முழுவதும் ஜூலை 1-ம் தேதி முதல் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களின் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு வைத்தல், விநியோகித்தல், விற்பனை மற்றும் அவைகளைப் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்படுகிறது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு செய்து குறிப்பு: ‘ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை 2022-ம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழிக்கவேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பிற்கிணங்க, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவ நிலை மாற்றத் துறை, பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை … Read more

சாலையோரம் நடந்து சென்ற பள்ளி மாணவர்கள் மீது டிராக்டர் மோதி விபத்து.. 2 பேர் பலி – ஒருவர் படுகாயம்

தெலங்கானாவில் சாலையோரம் நடந்து சென்ற பள்ளி மாணவர்கள் மீது டிராக்டர் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். அம்மாநிலத்தின் மேதக் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் மூன்று பேர் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டர், கட்டுப்பாட்டு இழந்து மாணவர்கள் மீது மோதியது. டிராக்டரின் சக்கரங்கள் ஏறி இறங்கியதில், 2 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் படுகாயமடைந்தார். கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். Source link

மும்பை கட்டட விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

மும்பை: மும்பையின் குர்லாவில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. அடுக்குமாடி கட்டடத்தின் இடிபாடுகளில் இருந்து இதுவரை 12 பேர் மீட்கப்பட்ட நிலையில் தேடும் பணி நீடிக்கிறது.

சபூர்ஜி பலோன்ஜி குழுமத்தின் தலைவர் பலோன்ஜி மிஸ்திரி காலமானார்

சபூர்ஜி பலோன்ஜி குழுமத்தின் தலைவர் பலோன்ஜி மிஸ்திரி காலமானார். 150 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட சபூர்ஜி பலோன்ஜி நிறுவனத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகின்றனர். மும்பையில் உள்ள ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா கட்டிடம், ஓபராய் ஓட்டல் ஆகியவை எஸ்பி குழுமம் வடிவமைத்த கட்டிடங்கள்தான். டாடா குழுமத்தில் இவர் குடும்பத்துக்கு 18.2 சதவீத பங்குகள் இருக்கிறது. இந்த பங்குகள் அடிப்படையில்தான் பலோன்ஜி மிஸ்திரியின் மகன் சைரஸ் மிஸ்திரி தலைவரானார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக தலைவர் பதவியில் … Read more