சாலையோரம் நடந்து சென்ற பள்ளி மாணவர்கள் மீது டிராக்டர் மோதி விபத்து.. 2 பேர் பலி – ஒருவர் படுகாயம்

தெலங்கானாவில் சாலையோரம் நடந்து சென்ற பள்ளி மாணவர்கள் மீது டிராக்டர் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். அம்மாநிலத்தின் மேதக் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் மூன்று பேர் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டர், கட்டுப்பாட்டு இழந்து மாணவர்கள் மீது மோதியது. டிராக்டரின் சக்கரங்கள் ஏறி இறங்கியதில், 2 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் படுகாயமடைந்தார். கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். Source link

மும்பை கட்டட விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

மும்பை: மும்பையின் குர்லாவில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. அடுக்குமாடி கட்டடத்தின் இடிபாடுகளில் இருந்து இதுவரை 12 பேர் மீட்கப்பட்ட நிலையில் தேடும் பணி நீடிக்கிறது.

சபூர்ஜி பலோன்ஜி குழுமத்தின் தலைவர் பலோன்ஜி மிஸ்திரி காலமானார்

சபூர்ஜி பலோன்ஜி குழுமத்தின் தலைவர் பலோன்ஜி மிஸ்திரி காலமானார். 150 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட சபூர்ஜி பலோன்ஜி நிறுவனத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகின்றனர். மும்பையில் உள்ள ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா கட்டிடம், ஓபராய் ஓட்டல் ஆகியவை எஸ்பி குழுமம் வடிவமைத்த கட்டிடங்கள்தான். டாடா குழுமத்தில் இவர் குடும்பத்துக்கு 18.2 சதவீத பங்குகள் இருக்கிறது. இந்த பங்குகள் அடிப்படையில்தான் பலோன்ஜி மிஸ்திரியின் மகன் சைரஸ் மிஸ்திரி தலைவரானார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக தலைவர் பதவியில் … Read more

நூபுர் சர்மாவின் ஆதரவாளர் படுகொலையால் ராஜஸ்தானில் பதற்றம்; இரு இளைஞர்கள் ‘மிரட்டும்’ வீடியோ வைரல்

புதுடெல்லி: ராஜஸ்தானின் உதய்பூரில், நுபுர் சர்மாவிற்கு ஆதரித்து செயல்பட்டதாக தையல் தொழிலாளி பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதால் திங்கள்கிழமை மாலை முதல் பதற்றச் சூழல் உருவாகியுள்ளது. கொலைக்குப் பின் மிரட்டல் வீடியோ வெளியிட்ட கொலையாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டனர். கடந்த மே 27-ல் தொலைகாட்சி விவாதம் ஒன்றில் பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளரான நூபுர் சர்மா இஸ்லாமியர்களின் இறைத் தூதர் முகம்மது நபி குறித்து கூறிய கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால், இந்தியா மட்டுமின்றி, சர்வதேச அளவில் … Read more

Alt News முகமது ஜுபைர் கைது; எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா கடும் கண்டனம்!

இணைய தளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்திகளின் உண்மை தன்மையை ஆராய்ந்து எது சரி? எது தவறு? என்பதை வெளிக்கொண்டு வருவதை ஆல்ட் நியூஸ் (Alt News) இணையதளம் தொடர்ச்சியாக செய்து வருகிறது. இந்த தளத்தின் இணை நிறுவனர் முகமது ஜுபைர். இந்த சூழலில் இவர் 2020ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றிற்கு டெல்லி போலீசாரின் விசாரணைக்கு நேற்று சென்றிருந்தார். இவரை திடீரென கைது செய்தனர். ஆனால் மேற்குறிப்பிட்ட வழக்கிற்காக டெல்லி உயர் நீதிமன்றத்தில் … Read more

மும்பை அருகே கடலில் விழுந்த ஹெலிகாப்டர்: 4 பேர் உயிரிழப்பு

இந்திய எண்ணெய் கழக நிறுவனத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் மும்பை அருகே கடலில் விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். மும்பையிலிருந்து சுமார் 50 கடல் மைல் தொலைவில் உள்ள ஓஎன்ஜிசிக்கு சொந்தமான துரப்பண மேடைக்கு அருகே விபத்து நேரிட்டுள்ளது. ஹெலிகாப்டரில் 2 விமானிகள் உள்பட 7 பேர் இருந்த நிலையில் கடலோர பாதுகாப்புப் படை உதவியுடன் அனைவரும் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்கள் மும்பை நானாவதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், 4 பேர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். … Read more

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சண்டிகரில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: மாநிலங்களுக்கு இழப்பீடு தருவதை நீட்டிப்பது குறித்து முக்கிய முடிவு

புதுடெல்லி: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சண்டிகரில் இன்று தொடங்கியது. இதில் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு தருவதை நீட்டிப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் 2021, டிசம்பர் 31ம் தேதி புதுடெல்லியில் நடந்தது. பின்னர் 6 மாத இடைவெளியில் அடுத்த கூட்டம் நகரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது, ஆனால் பல மாநில அமைச்சர்கள் வருவதால், பாதுகாப்பு காரணமாக சண்டிகருக்கு கூட்டம் மாற்றப்பட்டது. அதன்படி … Read more

சோகம்.. முன்னாள் அமைச்சர் சிவதாச மேனன் காலமானார்..!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கேரள முன்னாள் நிதியமைச்சருமான டி.சிவதாச மேனன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 90. வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த சிவதாச மேனன் இன்று காலை 11.30 மணியளவில் காலமானார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர், பாலக்காடு மாவட்டச் செயலாளர் உட்பட பல பொறுப்புகளிலும் இருந்தவர் சிவதாச மேனன். 1987 முதல் 1991 வரை மின்துறை மற்றும் ஊரக … Read more

தூத்துக்குடியை தொடர்ந்து சென்னை.. மருத்துவ மாணவர்கள் 11 பேருக்கு கொரோனா..!

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதையடுத்து, முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் பொதுமக்களுக்கு உத்தரவிட்டுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11 மருத்துவ மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தம் 277 மாணவர்களுக்கு கொரோனா … Read more

தனக்கு 50 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது : ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு

தனக்கு 50 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். கவுகாத்தியில் முகாமிட்டுள்ள அவர் விரைவில் மும்பை செல்லவிருப்பதாகவும் தெரிவித்தார். சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் விருப்பத்துடனே கவுகாத்தி வந்ததாகவும் விளக்கமளித்தார். கவுகாத்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்களுடன் பேசி வருவதாக உத்தவ் தாக்கரே தரப்பு கூறும் நிலையில், அந்த எம்.எல்.ஏ.க்கள் யார் என கூறுமாறும் ஷிண்டே சவால் விடுத்தார். தங்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தாக்கரே தரப்பு இவ்வாறு பேசி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். Source link