முதன்முறையாக ரஞ்சிக் கோப்பையை வென்றது மத்திய பிரதேசம்

மத்திய பிரதேசம் முதன்முறையாக ரஞ்சிக் கோப்பையை வென்றுள்ளது. உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பிரதானமாது ரஞ்சிக் கோப்பை தொடராகும். பெங்களூருவில் நடைபெற்ற இந்த ஆண்டுக்கான இறுதிப் போட்டியில் மும்பை மற்றும் மத்திய பிரதேசம் அணிகள் மோதின. முதலில் விளையாடிய மும்பை 374 ரன்கள் எடுத்த நிலையில், மூன்று வீரர்களின் சதத்தால் மத்திய பிரதேசம் 536 ரன்கள் குவித்து பதிலடி தந்தது. 2-வது இன்னிங்சில் மும்பை 269 ரன்களுக்கு ஆல் ஆவுட் ஆன நிலையில், கடைசி நாளன்று மத்திய பிரதேசம் … Read more

எல்ஐசி ஐபிஓ: ரூ.1.8 லட்சம் கோடி இழப்பு! இன்னும் சரியும்! முதலீட்டாளர்கள் வருத்தம்!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. எனினும் உக்ரைன் – ரஷ்யா போர் மூண்டதால் பங்குச் சந்தைகளில் கடுமையாகச் சரிவு ஏற்பட்டதால் எல்.ஐ.சி பங்கு வெளியீடு தள்ளிப்போனது. எல்.ஐ.சி பொதுப்பங்கு வெளியீடு (IPO) மே 4-ம் தேதி தொடங்கி மே.9 ஆம் தேதி வரை நடைபெற்றது. ரூ.902-949 விலையில் பங்கு வெளியிடப்பட்டது. மொத்தம் 31.6 கோடி பங்குகள் விற்கப்பட்டது. இதில் ஊழியர்களுக்கு 5 சதவீதமும், தனிநபர் … Read more

சிவசேனா அரசுக்கு எதிராக மேலும் ஒரு அமைச்சர் போர்க்கொடி..!

மகாராஷ்டிராவில் மேலும் ஒரு அமைச்சர், சிவசேனாவின் அதிருப்தி எம்எல்ஏக்களுடன் கைகோர்த்துள்ளார். ஏற்கனவே 7 அமைச்சர்கள் கவுகாத்தி நட்சத்திர விடுதியில் முகாமிட்டுள்ள நிலையில், உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சரான உதய் சமந்த், ஆளும் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார். இதனிடையே, அதிருப்தி எம்எல்ஏ நரேந்திர பாண்டேகரின் பிறந்தநாளை சக எம்எல்ஏக்கள் ஒன்று சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினர். Source link

வேலியே பயிரை மேய்ந்த அவலம்.. பெண் காவலரை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய போலீஸ்காரர்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகள் அதிகரித்து வரும் சூழலில், பெண் காவலரை சக போலீஸ்காரரே பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து மிடிட்டியுள்ளார். பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதுதவிர, பெண்கள் கடத்தல், பாலியல் பலாத்காரம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களும் அதிகரித்து உள்ளன. பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையத்தின் சமீபத்திய அறிக்கை ஒன்றின்படி, அந்நாட்டில் தினசரி 11 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகின்றன. … Read more

சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் மனைவிகளிடம் பேசி சமாதானப்படுத்த உத்தவ் மனைவி முயற்சி!

மகாராஷ்டிராவில் அரசியல் நெருக்கடி நீடித்து வரும் நிலையில், முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மனைவி ராஷ்மி, அதிருப்தி எம்எல்ஏக்களின் மனைவிகளிடம் தொலைபேசியில் பேசி வருகிறார் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களின் மனைவியருடன் உத்தவ் தாக்கரேவின் மனைவி ராஷ்மி தொலைபேசியில் பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்கள் கணவரிடம் பேசி அதிருப்தியை கைவிடச் செய்யுமாறு அவர் சமாதானப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40க்கும் மேற்பட்ட சிவசேனா எம்எல்ஏக்கள், உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக தனி அணியாகி கவுகாத்தியில் தங்கியுள்ளனர். … Read more

முதல்வர் தாக்கரேவுடன் அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்பு? – ஷாக்கான பாஜக!

மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுடன், அதிருப்தி சிவசேனா எம்எல்ஏக்கள், தொடர்பில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய மாநில அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன், அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டு உள்ளார். அவருடன் சுயேச்சை எம்எல்ஏக்கள் உட்பட சுமார் … Read more

6 மாநில இடைத்தேர்தலில் அமோக வெற்றி : 3 சட்டப்பேரவை தொகுதிகளை கைப்பற்றியது பாஜக

டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 6 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. 7 சட்டப்பேரவை தொகுதிகளில் மூன்றில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். திரிபுராவின் டவுன் போர்டோவலி தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் மாணிக் சாஹா வெற்றி வாகை சூடினார். உத்தரபிரதேசத்தில் ராம்பூர், அசம்கர் ஆகிய 2 மக்களவை தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.  Source link

சிவசேனா போட்டி எம்எல்ஏக்கள் ஆதரவுடன் மகாராஷ்டிராவில் பாஜ ஆட்சி அமைக்க முயற்சி; அமித்ஷாவுடன் இன்று ஆலோசனைக்கு பின் முக்கிய முடிவு.!

மும்பை: மகாராஷ்டிராவில், சிவசேனா போட்டி எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க பாஜ முயற்சி செய்து வருகிறது. இதன் முதல்கட்டமாக, குஜராத் மாநிலம் வதோதவில் நேற்று நள்ளிரவு ஏக்நாத் ஷிண்டேவும் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரான பட்னாவிசும் சந்தித்து பேசினர். இன்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பட்னாவிஸ் ஆலோசனை நடத்துகிறார். இதில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை சேர்ந்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40க்கும் மேற்பட்ட சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ.க்கள், முதல்வர் … Read more

தெற்கு ரயில்வேயில் கோரக்பூர் தேர்வர்களை நியமிக்கும் முடிவு முறியடிப்பு – சு.வெங்கடேசன் M.P

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் தெற்கு ரயில்வே காலிப் பணியிடங்களில் கோரக்பூர் தேர்வர்களை நியமிக்கும் முடிவு முறியடிக்கப்பட்டு இருப்பதாகவும் தற்போது சென்னை தேர்வர்கள் அனைவருக்கும் பணிநியமன உத்தரவு வழங்கப்பட்டு இருப்பதாகவும் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இது தனது போராட்டத்துக்கு கிடைத்த முழு வெற்றி என்றும் சு.வெங்கடேசன் எம்.பி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “சென்னை ஆர் ஆர் பி தேர்வு செய்து காத்திருப்போர் பட்டியலில் இருந்த லோகோ பைலட் தேர்வர்களை விட்டு விட்டு … Read more

கிளறிய வீரமணி.. பாஜ ஷாக்; அக்னிபாத்தில் இவ்வளவு ஆபத்து?

மதுரை தெப்பக்குளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திராவிடர் கழக மாநில பொதுக்குழு கூட்டம், தலைவர் கி.வீரமணி தலைமையில் நடந்தது. இதன் பின்னர் கி.வீரமணி செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: சேது சமுத்திர கால்வாய் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் மாணவர்கள் பெருந்தோல்வி அடைந்தது பற்றி ஆய்வு செய்யப்பட வேண்டும். அக்னி பாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தல், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி காக்கப்பட வேண்டும் என்பன உள்பட 8 … Read more